Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

வர்த்தகர்கள் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

வர்த்தகர்கள் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்தியப் பங்குச் சந்தையின் போக்கு குறித்து கடந்த வாரத்தில் குறிப்பிட்டிருந்த மந்தநிலை இப்போது சரியானது.

கடந்த சில வர்த்தக தினங்கள் தவிர, தொடர்ச்சியான சிறு கேண்டில் பேட்டர்ன்களுக்குப் பிறகு, நிஃப்டி வெற்றிகரமாகச் சமாளித்து ஏற்றமடைய ஆரம்பித்தது. முந்தைய இலக்கான 11400 என்ற நிலையை எளிதாகக் கடந்திருக்கிறது. பெரும்பாலும் அனைத்து ரீட்ரேஸ்மென்ட் ரெசிஸ்டன்ஸையும் கடந்திருக்கிறது. இதன்மூலம் பலருக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிஃப்டியின் அடுத்த ரெசிஸ்டன்ஸ் 11450-11530 என்ற நிலையில் உருவானது. இந்த நிலையில், நிஃப்டி சவாலைச் சந்தித்தது. ஆனாலும், அதன் முயற்சி தோல்வியடைந்தது. இதனால், இறக்கம் கண்டது. மீண்டும் சிறு கேண்டில் பேட்டர்ன்கள் உண்டானது. எனவே, ஆரம்பத்தில் இருந்த ஏற்றம் தடைபட்டது.

பேங்க் நிஃப்டியும் ஓரளவுக்குச் சமாளித்து 22000 என்ற நிலையைக் கடந்து ஏற்றம் கண்டு, தனது செயல்பாட்டை நிரூபித்தது. ஆனால், இதன் முயற்சியும் பின்னர் தோல்வியடைந்து, வாரத்தின் இறுதியில் மீண்டும் 22000 என்ற நிலைக்குக் கீழே இறங்கியது. இது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இதன்மூலம் காளையின் போக்கில் தொடர்ந்து நகர்வதற்கு வங்கி மற்றும் நிதித் துறை நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பது தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிற துறை நிறுவனப் பங்குகளிலும் இன்னும் ஏற்றம் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. ரிலையன்ஸ் நிறுவனப் பங்கும் ஒரு தேக்க நிலையில் உள்ளது. எனவே, அதன் உதவியும் இல்லை. இதனால் வர்த்தகர்கள் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. இவற்றில் லிக்விடிட்டி நன்றாக இருப்பதால், நகர்வுகளும் துடிப்பாக இருக்கிறது. கேஷ் டெலிவரி பங்குகள் சிறப்பாகச் செயலாற்றும்போது சென்டிமென்டும் சிறப்பாக இருக்கிறது.

பங்குகள்
பங்குகள்

தற்போதைய சூழலில், முரண்பாடான அறிகுறிகள் ஏதும் தெரியாதவரை நாம் காளையின் போக்கு இருப்பதாகவே நம்பலாம். ஆனால், இண்டெக்ஸ்கள் நன்றாகச் செயலாற்றும்போது சூழலுக்கேற்ப முடிவெடுப் பதும், சந்தையில் புதிய பிரிவுகளில் முதலீடு செய்வதை அளவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். நம்பகமான பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். இங்கே தரப்பட்டுள்ள சார்ட்டில் இருப்பது போல சப்போர்ட் டிரெண்ட் நிலைக்கு அருகில்தான் தற்போது விலை நகர்வுகள் நடக்கின்றன. ஏதேனும் விசித்தரமான விலை நகர்வு ஏற்படுமானால், அது சப்போர்ட் லைனை உடைக்கலாம். நாம் முந்தைய ஸ்விங் நிலையான 10900 என்பதற்கு அருகிலேயே லாங் பொசிஷன்களை வைத்திருப்பதற்கான இறுதி நிலையாகவும் வைத்துக்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் (HSCL)

தற்போதைய விலை ரூ.59.20

வாங்கலாம்

மார்ச் மாத இறக்கத்துக்குப் பிறகு, இந்தப் பங்கின் விலையில் நல்ல ஏற்றம் காணப்படுகிறது. இதன் விலை ரூ.27 என்ற நிலையிலிருந்து ரூ.54 என்ற நிலை வரை உயர்ந்திருக்கிறது. அதன் பிறகு எப்ரல் முதல் ஆகஸ்ட் மாதத் தொடக்க நாள்கள் வரை இதில் நிலையான கன்சாலிடேஷன் போக்கு இருந்தது. தற்போது இந்தப் பங்கில் புதிதாக முதலீடுகள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் நகர்வுகள் தீவிரமாகவும் உள்ளன. பங்கின் விலை அதிக வால்யூம்களின் உதவியால் புதிய உச்சங்களை அடைய வாய்ப்புள்ளது. இலக்கு விலை ரூ.80. இந்தப் பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.52 வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

தைரோகேர் டெக்னாலஜிஸ் (THYROCARE)

தற்போதைய விலை ரூ.791.95

வாங்கலாம்

நோய் கண்டறிதல் துறை சார்ந்த அனைத்து பங்குகளுமே சிறப்பாகச் செயலாற்றிவருகின்றன. குறிப்பாக, தைரோகேர் பங்கில் ஏற்றமானது தொடர்ந்து நிலையாக இருந்துவருகிறது. இந்த ஏற்றம் புதிய உச்சங்களுக்கு பங்கின் விலையை நகர்த்தலாம். எனவே, தற்போதைய விலையிலும் இறக்கம் கண்டாலும் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,000 வரை உயர வாய்ப்புள்ளது.

நாட்கோ பார்மா லிமிடெட் (NATCOPHARMA)

தற்போதைய விலை ரூ.839.00

வாங்கலாம்

மிட்கேப் பார்மா பங்குகள் இன்னும் நன்றாக செயலாற்றி வருகின்றன. இந்தப் பிரிவில் நாட்கோ பார்மா முன்னணியில் உள்ளது. தொடர்ந்து இதில் புதிய முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தப் பங்கு உச்சம் எட்டும்போதெல்லாம் முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்து வருகின்றனர். ஆனால், இது எந்த வகையிலும் பங்கின் நகர்வில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனவே, ரூ.800 ஸ்டாப்லாஸுடன் ரூ.1,000 என்ற புதிய இலக்கு விலையுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/34emoi1