இந்தியப் பங்குச் சந்தை கடந்த வாரத்தில் சிறு ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகமானது. ஆரம்பத்தில் சந்தை அதன் உச்சநிலைகளில் கன்சாலிடேஷன் ஏற்பட்டதுபோலத் தோன்றியது.

காளையின் போக்கில் தொடர்ந்து ஏற்றம் காணும் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால் சந்தை ஏற்றமடையாமல் ஏமாற்றமளித்ததுடன், விலை நகர்வு மீண்டும் கன்சாலிடேஷனின் கீழ்மட்ட நிலைக்கு இறங்கியது. வியாழக்கிழமை எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரியும் பெரிய அளவில் ஆரவாரம் இல்லாமலேயே முடிந்தது. அதாவது, வர்த்தகர்கள் அதில் சிக்கவில்லை. லாங் பொசிஷன்களில் இருந்தவர்கள் ஏற்றத்தின்போது வெளியேற வாய்ப்பாக அமைந்தது. அதே நேரம், சந்தையில் நிலவிய சென்டிமென்ட் வர்த்தகர்கள் அதிக ஷார்ட் எடுக்காமல் தடுத்தது.

ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை, நிஃப்டி சிறப்பாகவே செயலாற்றியிருக்கிறது. குறிப்பாக, நிஃப்டி ஐ.டி குறியீட்டில் கணிசமான ஏற்றம் இருந்தது. ஆனால், பேங்க் நிஃப்டி ஓரளவு ஏற்றத்தைத் தக்கவைக்கவே மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. இதனால் நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி இடையே அவை ஈட்டிய வருமானத்தில் அதிக வேறுபாட்டைப் பார்க்க முடிந்தது. நிஃப்டி செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வேறுபாடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒன்றாகும்.

பங்குகளின் விலை நகர்வில் ஏற்பட்ட இறக்கம் குறிப்பாக, ரிலையன்ஸ் பங்கில் ஏற்பட்ட இறக்கம் வர்த்தகர்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. ஆனால், சார்ட்படி பார்க்கும்போது, நிஃப்டி ஏற்றத்தின் போக்கில் இருப்பது உறுதியாகத் தெரிகிறது. நிஃப்டியின் பிரதானமான ஆதரவு டிரெண்ட் லைன் ஆனது சற்று விலகியிருக்கிறது. ஏற்றத்தின் போக்கில் வேறு ஏதேனும் நிகழ்ந்து சந்தேகத்தைக் கிளப்புவதற்கு முன்னர், இந்த டிரெண்ட் லைன் உடைத்து ஏற வேண்டும். சார்ட்டிலுள்ள சிறிய கிடைமட்டக் கோடுகள் வரவிருக்கிற மாதாந்தர விலை நகர்வைக் குறிக்கின்றன. இது நிஃப்டி 11000 என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையானது லாங் பொசிஷன்களில் இருப்பவர்களுக்கு அடுத்த ஸ்டாப்லாஸாக இருப்பதற்கான சாத்தியங்களுடன் உள்ளது. இருந்தாலும், சற்றுப் பதற்றம் இருக்கவும் செய்கிறது.
.பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!.
முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. வரும் வாரத்தில் காலாண்டு முடிவுகளைப் பொறுத்து கலவையான பார்வையில் பங்குச் சந்தை செயலாற்றும். நகர்வுகளும் இதைப் பொறுத்தே இருக்கும். சந்தையில் சென்டிமென்ட் ஏற்றத்தின் போக்கில்தான் தொடர்கிறது. எனவே, காளையின் போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கலாம். வாரத்தின் இடையில் ஏற்படும் இறக்கங்களை வாங்குவதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஜென்சார் டெக்னாலஜிஸ் (ZENSARTECH)

தற்போதைய விலை ரூ.168.60.

வாங்கலாம்.

இந்தப் பங்கு துடிப்புடன் மீண்டுவருவது அதன் பங்கு விலை சார்ட்டில் தெரிகிறது. மேலும், கடந்த ஒரு மாதமாக ஐ.டி இண்டெக்ஸுடன் சேர்ந்து இந்தப் பங்கும் சிறப்பான ஏற்றத்துடன், நல்ல போக்குடன் தொடர்கிறது. இதன் பாலிங்கர் பேண்ட் பங்கில் ஏற்றம் மேலும் தொடரும் என்பதைக் குறிக்கிறது. பங்கின் விலை குறுகியகாலத்தில் ரூ.200 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.150 ஸ்டாப்லாஸுடன் வாங்கலாம்.

ஜூபிலன்ட் ஃபுட் (JUBLFOOD)

தற்போதைய விலை ரூ.1,770.30.

வாங்கலாம்.

கடந்த பல வாரங்களாகவே சந்தையில் பிற பங்குகள் ஏற்றத்தில் இருந்தபோதிலும், இந்தப் பங்கு ஒரு வரம்புக்குள்ளாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது பங்கு கன்சாலிடேஷன் நிலையிலிருந்து உடைத்து ஏற்றமடையத் தயாராக இருப்பதாக அறிகுறி காட்டுகிறது. சந்தை இறக்கம் அடையும்போதும் இந்தப் பங்கு ஏற்றமடைந்து, காளையின் போக்கு தொடங்கியிருப்பதை உறுதி செய்திருக்கிறது. குறுகியகாலத்தில் ரூ.1,825 முதல் ரூ.1,850 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போதைய விலையில் வாங்கலாம்.

ஸ்டாப்லாஸ் ரூ.1,740 வைத்துக்கொள்ளவும்.

திஷ்மன் கார்போஜென் அம்சிஸ் (DCAL)

தற்போதைய விலை ரூ.187.10.

வாங்கலாம்.

இந்தப் பங்கை ஏற்கெனவே பரிந்துரைத்திருக்கிறோம். தற்போது மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது. இதன் டெக்னிக்கல் சிக்னல்கள் பங்கை ஏற்றத்தின் பாதையில் கொண்டு செல்லும் வகையில் வலுவாக இருக்கின்றன. எனவே, ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த இலக்கு விலையை எட்டிவிட்டது. இருந்தாலும், லாங் பொசிஷன்களைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். அதேபோல், புதிதாகவும் இதில் லாங் பொசிஷன்களை எடுக்கலாம்.

தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். பங்கின் விலை ரூ.225 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.173 வைத்துக் கொள்ளவும். ஏற்கெனவே இந்தப் பங்கை வைத்திருப்பவர்களும் ஸ்டாப்லாஸை இந்த நிலைக்கு உயர்த்திக்கொள்ளலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/2X7fAyc