Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

தற்போது சர்வதேச சந்தைகள் நல்ல ஏற்றத்தில் உள்ளன. எனவே, சந்தை காளையின் போக்கில் தொடர உதவுகின்றன.

பிரீமியம் ஸ்டோரி
ந்தியப் பங்குச் சந்தையின் போக்கு தொடர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருந்துவருகிறது. ஒவ்வொரு வாரமும் குறியீடுகள் புதிய உச்சத்தை எட்டுகின்றன. ஒருபக்கம் பங்குச் சந்தை இத்தகைய வலுவான போக்குடன் இருந்துவருவது உற்சாகத்தை அளிக்கிறது. ஆனால், அனைத்தும் மிக வேகமாக நடந்து வருவது ஒருவித எச்சரிக்கை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இது போன்ற உணர்வு ஏற்படுத்துகிற பயத்தால் பெரும்பாலானோருக்கு சந்தையில் பங்கெடுக்கத் தயக்கத்தை ஏற்படுத்துகிறது அல்லது தொடர்ந்து லாபத்தை எடுக்கும் போக்கை உருவாக்கி வருகிறது. பலருக்கு தற்போதுள்ள சூழல் இதற்கு மேலும் லாபத்தை எடுப்பதற்கான பங்குகள் ஏதுமில்லை என்பது போன்ற முடிவுக்கு வரவைக்கிறது.

மேலும், எஃப்.ஐ.ஐ மற்றும் எஃப்.பி.ஐ ஆகியோரின் முதலீடுகள் சந்தையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் முதலீடு செய்யப் பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திலும் இது குறைவதாகத் தெரியவில்லை. சந்தையை சமநிலைக்கு உள்ளாக்க இது நிகழ்வது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், இந்தப் போக்கு எப்போதும் முடிவுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இதுவும் உறுதி இல்லை என்பதால், முதலீடுகள் தொடர்ந்து செய்யப்படும் வரை சந்தையின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றே தெரிகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

இதனால் சந்தையில் இறக்கமே இருக்காது என்று அர்த்தமில்லை. சந்தையில் குறைந்த அளவிலும் குறுகிய காலத்திலும் இருப்பவர்களின் செயல்பாடு கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. காரணம், ஏதேனும் பிரச்னை வந்தால் உடனே இவர்கள் அதிலிருந்து வெளியேற முயற்சி செய்வார்கள். அந்த சமயங்களில் பெரிய அளவில் முதலீடுகள் வெளியேறும்போது சந்தை இறக்கத்துக்கு உள்ளாக லாம். தற்போது சர்வதேச சந்தைகள் நல்ல ஏற்றத்தில் உள்ளன. எனவே, சந்தையானது காளையின் போக்கில் தொடர உதவு கின்றன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஆர்.எஸ்.ஐ சார்ட்டுகளில் டைவர்ஜன்ஸ் காணப்பட்டாலும் தொடர்ந்து மீண்டுவருவதற்கான பாசிட்டிவ் பேட்டர்ன்களும் உருவாவதைப் பார்க்க முடிகிறது. விலைநகர்வுகள் பிட்ச்ஃபோர்க் சேனலின் சராசரி கோட்டின் வழியே பயணிக்கிறது. இதனால் தினமும் குறைந்தபட்ச நிழல் கேண்டில்களைக் காட்டுகிறது. இதிலிருந்து இந்தக் குறைந்தபட்ச நிலைகளில் டிமாண்ட் தொடர்ந்து உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது. நிஃப்டியின் அடுத்த இலக்கு வரும் வாரத்தில் 13340 என்ற நிலையில் இருக்கலாம். லாங் பொசிஷன்களில் இருப்ப வர்கள் அதில் தொடரலாம் அல்லது புதிதாக வாங்கலாம். 13000 புள்ளிகளில் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளலாம்.

சன் பார்மா (SUNPHARMA)

தற்போதைய விலை: ரூ.549.20

வாங்கலாம்

நீண்டகாலத்துக்குப்பிறகு இந்தப் பங்கு மீண்டுவருவதைப் பார்க்க முடிகிறது. முன்பு பார்மா துறையில் முன்னணி பங்காக இருந்துவந்த சன் பார்மா இந்த வருடத்தில் பின்தங்கியிருந்தது. ஆனால், தற்போது பங்கில் மாற்றங்கள் உருவாகியிருக்கிறது. அதன் சப்ளை நிலையானது ரூ.560 என்ற நிலைக்கு அருகே உள்ளது. இந்த நிலையை பங்கு கடந்து வரும்பட்சத்தில் தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் நகரும் என எதிர்பார்க்கலாம். பார்மா துறையில் நல்ல டிமாண்ட் இருப்பதால், இது நிகழ அதிக வாய்ப்புள்ளது. எனவே, குறுகிய காலத்தில் பங்கு ரூ.580 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.535 உடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் (GODREJIND)

தற்போதைய விலை: ரூ.420.50

வாங்கலாம்


கோத்ரேஜ் குழுமத்தின் பிற பங்குகள் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தாய் நிறுவனமான கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் நகர்வு மெதுவாகவே காணப்பட்டது. ஆனால், இதன் சமீபத்திய சார்ட் பேட்டர்ன்களைப் பார்க்கும்போது நகர்வுகள் மீண்டும் உற்சாகமாக இருப்பது தெரிகிறது.

பங்கின் இறக்கப்போக்கின் முடிவில் சிறிய ‘இன்வர்டட் ஹெட் அண்ட் சோல்டர்’ ் வடிவிலான பேட்டர்ன் உள்ளது. அதைத் தொடர்ந்து நல்ல மொமென்டமும் ஏற்படும்போது தொடர்ந்து வலுவான ஏற்றத்தைக் காணலாம். பங்கின் விலை குறுகிய காலத்தில் ரூ.480 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.400-ல் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

ஜே.எஸ்.எல் ஹைசர் (JSLHISAR)

தற்போதைய விலை: ரூ.128.25

வாங்கலாம்


மெட்டல் பங்குகள் தொடர்ந்து நல்ல செயல்பாட்டில் இருந்துவருகின்றன. பல பங்குகள் நல்ல ஏற்றத்தையும் கண்டிருக்கின்றன. ஜே.எஸ்.எல் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை சமீப வாரங்களில் பதிவு செய்துள்ள பங்காக இருக்கிறது. இதன் சார்ட் பேட்டர்னில் ஏற்றத்தின் போக்கானது அதன் பீட்ச்ஃபோர்க் சேனலில் வலுவாக உள்ளது.

மொமென்டமும் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதால், அதன் மே மாத இறக்கத்திலிருந்து நல்ல ஏற்றத்தையும் தற்போது பதிவு செய்திருக்கிறது. எனவே, பங்கு ரூ.165 என்ற நிலையைக் குறுகிய காலத்தில் எட்டும் என எதிர்பார்க்கலாம். ரூ.112-ல் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பிட்ஸ்

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சேர்பெர்ஷனும் சிவ் நாடாரின் மகளுமான ரோஷினி, இந்தியாவின் இரண்டாவது பெரும் பெண் பணக்காரர். அவரது சொத்து மதிப்பு ரூ.54,850 கோடி என ஹூரன் நிறுவனம் சொல்லி இருக்கிறது!

பிட்ஸ்

கோவிட்19-க்குப் பிறகு தற்போது விமானங்களில் 80% பயணிகளை ஏற்றிச் செல்லலாம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. விமானத் துறையில் இது பெரும் நிம்மதியைத் தந்துள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு