Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

நிஃப்டியின் அடுத்த இலக்கு இன்னமும் மீதமிருக்கிறது. ஸ்மால்கேப், மிட்கேப் அல்லது என்.எஸ்.இ 500 குறியீடுகளும் அவற்றின் முந்தைய உச்சத்துக்கு அருகில் உள்ளன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

நிஃப்டியின் அடுத்த இலக்கு இன்னமும் மீதமிருக்கிறது. ஸ்மால்கேப், மிட்கேப் அல்லது என்.எஸ்.இ 500 குறியீடுகளும் அவற்றின் முந்தைய உச்சத்துக்கு அருகில் உள்ளன.

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்தியப் பங்குச் சந்தையில், நவம்பர் மாதத்தில் தொடங்கிய ஏற்றத்தின் போக்கு கடந்த வாரத்திலும் தொடர்ந்தது. குறிப்பாக, சந்தை நகர்வின் வேகம் பல முதலீட்டாளர் களை வாயடைத்துப் போக வைத்துள்ளது.

இந்த வேகமான நகர்வு மற்றும் நிலையான போக்குக்குத் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே வரும் அந்நிய முதலீடுகள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அவை இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடுகளை குவித்துவருகின்றன. மலைபோல் குவியும் இந்த முதலீடுகளால் சந்தையின் நகர்வு எதனாலும் நிறுத்த முடியாத அளவுக்கு உள்ளது. பல பங்குகளின் விலை உயர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஒவ்வொரு ஏற்றமும் இறக்கம் என்பதற்கான காலம் கடந்துவிட்டது, அதாவது இப்போதைக்கு இறக்கத்துக்கான வாய்ப்பு இல்லை என்பதையே காட்டுகிறது. சந்தை செயல்பாடுகளிலும் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பேங்க் நிஃப்டி 30000 புள்ளிகள் என்ற நிலையைக் கடந்திருப்பதோடு, இந்த நிலையில் தன்னை நிலையாகத் தக்க வைத்துக்கொண்டும் இருக்கிறது. இது மிகவும் பாசிட்டிவான ஒன்றாகும். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் பேங்க் நிஃப்டியின் அடுத்த இலக்கு இன்னமும் மீதமிருக்கிறது. ஸ்மால்கேப், மிட்கேப் அல்லது என்.எஸ்.இ 500 குறியீடுகளும் அவற்றின் முந்தைய உச்சத்துக்கு அருகில் உள்ளன. எனவே, தொடர் ஏற்றம் இருப்பதற்கான வாய்ப்பு தெரிகிறது. கடந்த வாரத்தில் பொதுத்துறை வங்கிப் பிரிவிலும் நல்ல செயல்பாடு பார்க்க முடிந்தது. ஆனாலும், பேங்க் நிஃப்டி நகர்வுகளில் தனியார் வங்கிகளின் பங்குதான் அதிகமாக இருக்கிறது.

சந்தையின் செயல்பாடானது மெல்ல மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுளுக்கு மாறும் எனக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், பிரதான நிஃப்டியின் போக்கு சாதகமாக இருந்ததால் இந்த மாற்றத்துக்கான வேகம் மேலும் குறைந்துள்ளது. ஆனாலும், இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், பெரும்பாலான நல்ல பங்குகள் சிறப்பான சார்ட் பேட்டர்ன்களை உருவாக்கி இருப்பதோடு, நல்ல பிரேக் அவுட் ஏற்றங்களையும் பதிவு செய்திருக்கின்றன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

அதேசமயம், இண்டெக்ஸ் தற்போது அதன் கணிக்கப்பட்ட ரெசிஸ்டன்ஸ்களை இணைப் பதற்கான முயற்சியில் உள்ளது. இதற்கு கடந்த மார்ச்சின் பாட்டம் நிலையிலிருந்து உருவான ஏற்றங்களின் ஸ்விங் நிலைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. இவை 13550 - 13600 என்ற வரம்புகளில் நிகழ்கின்றன. எனவே, இந்த நிலையில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், எப்போது வேண்டுமானாலும் இறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இறக்கம் ஏற்படும் எனில், பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்று அர்த்தம். குறுகியகால முதலீட்டாளர்கள் வர்த்தகர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

ஐ.டி.சி (ITC)

தற்போதைய விலை: ரூ.213.15

வாங்கலாம்


நீண்டகாலமாகக் கவனிக்கப் படாமல் இருந்த ஐ.டி.சி நிறுவனப் பங்கு கடந்த மாதத்தில் நல்ல நகர்வுகளைப் பதிவு செய்தது. தற்போது புதிதாக பிரேக் அவுட் நிலைகளை உருவாக்கியுள்ளது. இதில் ஏற்றம் குறித்து பெரிய அளவில் நம்பிக்கை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இதில், மேலும் ஏற்றம் இருப்பதுக் கான வாய்ப்புகள் தெரிகின்றன.

எனவே, இந்தப் பங்கை 212 - 207 என்ற விலை வரம்புகளில் வாங்கலாம். ரூ.202-ல் ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் ரூ.225 - 235 வரை உயர வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

காஸ்மோ ஃபிலிம்ஸ் (COSMO FILMS)

தற்போதைய விலை: ரூ.458.80

வாங்கலாம்


காஸ்மோ ஃபிலிம்ஸ் பங்கின் பேட்டர்ன்களில் சிறப்பான ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது. இதனால் விலை தற்போது பிரேக் அவுட் ஆகி ஏற்றத்தை நோக்கி நகர தயாராக இருக்கிறது. பேட்டர்ன் உயரம் 200 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது எனில், ஏற்றத்துக்கான இலக்கு அதிகமாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இது நீண்டகால முதலீட்டுக் கான பங்காக எடுத்துக்கொள்ளலாம். இவை உச்ச நிலைகளின் அருகில் கன்சாலிடேஷனை உருவாக்குவதோடு கப் ஹேண்டில் பேட்டர்னையும் உருவாக்குகின்றன. எனவே, ரூ.430 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

ஸ்பைஸ்ஜெட் (SPICEJET)

தற்போதைய விலை: ரூ.100.25

வாங்கலாம்


கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவைத் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கருதப் படுகிறது. ஆனால், அப்படியாக தெரியவில்லை. இண்டிகோ நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது போலவே ஸ்பைஸ்ஜெட் ஏற்றத்தின் போக்கில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறது.

இப்பங்கு தற்போது அதன் பிரதான சப்ளை நிலையைக் கடந்து ஏற்றம் காண முயற்சி செய்கிறது.

இந்த முயற்சியால் மேலும் இறங்கி யிருக்கிறது. இதனால் பங்குகளின் செயல்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பங்கை ரூ.89 ஸ்டாப்லாஸுடன் வாங்கலாம். குறுகிய காலத்தில் 115 வரை உயர வாய்ப்புள்ளது

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பெரும்பாலான நல்ல பங்குகள் சிறப்பான சார்ட் பேட்டர்ன்களை உருவாக்கி இருப்பதோடு, நல்ல பிரேக் அவுட் ஏற்றங்களையும் பதிவு செய்து இருக்கின்றன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

றக்கம் ஏற்படும் எனில், பங்குகளைவாங்கும் வாய்ப்பு உருவாகிறது என்று அர்த்தம். குறுகியகால முதலீட்டாளர், வர்த்தகர் களுக்குஇது நல்ல வாய்ப்பாக இருக்கும்!