Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

INVESTMENT

பிரீமியம் ஸ்டோரி
ந்தியப் பங்குச் சந்தையில் தற்போதைய ஏற்றத்தைப் பார்க்கும்போது, ஊக்க மருந்து கொடுக்கப்பட்டது போலத்தான் தெரிகிறது. நிஃப்டியில் காணப்படும் ஏற்றம் முற்றிலும் தடுக்க முடியாத அளவில் உள்ளது. சந்தை நகர்வில் காணப்படும் தொடர்ச்சியான ஏற்றத்தின் போக்கு சந்தையின் எல்லா பிரிவுகளிலும் எதிரொலிப்பதையும் பார்க்க முடிகிறது.

சந்தையில் பெரும்பாலான துறைகளின் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டிருக்கின்றன. சில சமயங்களில் சந்தையின் செயல்பாடானது ஸ்மால் மற்றும் மிட்கேப் பிரிவுகளுக்கு மாறுவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஆனால், பிரதான சந்தைக் குறியீடுகள் அதிரடியாக நகர்ந்ததன் விளைவாக லார்ஜ்கேப் பங்குகளும் தொடர்ந்து ஏற்றத்தைப் பெரிய அளவில் கண்டுவந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பிற பிரிவுகளுக்கு தங்கள் கவனத்தைத் திருப்புவது கடினமானதாக இருந்தது.

குறியீடுகளில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தைப் பதிவுசெய்த நிஃப்டி ஃபின்சர்வீசஸ் அதன் 2020 ஜனவரி உச்சத்தைத் தாண்டியும் ஏற்றம் கண்டுள்ளது. பேங்க் நிஃப்டிகூட இந்த அளவுக்கு ஏற்றம் காணவில்லை. இந்தக் குறியீடு ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் கான்ட்ராக்ட் வரும் வாரத்தில் வெளியிடப்படுவது குறித்த செய்திகளும் இடம்பெற்றுள்ளன. இந்தச் செய்தி காரணமாகவும் இந்தக் குறியீடு ஏற்றம் கண்டிருக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், இந்தப் பெயரில் வெளியாகும் கான்ட்ராக்ட் செய்திக்கு ஏன் இத்தனை வரவேற்பு என்பது ஆச்சர்யமாக உள்ளது. இந்தக் குறியீடு பேங்க் நிஃப்டியின் சந்தை பங்களிப்பைக் கணிசமாக எடுத்துக்கொள்ளுமோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. வங்கித் துறையில் தனியார் வங்கிகள் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. ஆனால், பொதுத்துறை வங்கிப் பங்குகளில் இருந்த வலுவான ஏற்றத்தின் போக்கு லாபத்தை எடுத்த தன் காரணமாகத் தடைபட்டுள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ரியல் எஸ்டேட் துறை பங்கு களிலும் கணிசமான ஏற்றத்தைப் பார்க்க முடிந்தது. வீடுகளின் விற்பனை உயர்ந்திருப்பதன் காரணமாக இந்த ஏற்றம் சாத்தியமாகி உள்ளது. அதேபோல், பார்மா துறையிலும் புதிய உச்சங்களைப் பார்க்க முடிந்தது. தடுப்பு மருந்து விநியோகம் துரிதப்படுத்தப்பட்டதன் காரணமாக பார்மா பங்குகளில் மீண்டும் டிமாண்ட் அதிகரித்துள்ளது.

சந்தை தற்போது நல்ல வலுவான போக்கில் ஏற்றமடைந்து வருவதால், ஏற்கெனவே கூறியதுபோல் அடுத்த கட்ட ரெசிஸ்டன்ஸ் நிலைகளை எட்டலாம் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்த ரெசிஸ்டன்ஸ் நிலை களில் சந்தை நகர்வுகள் தடைபடாமல், மேலும் உடைத்து ஏற்றம் அடையும் பட்சத்தில் சந்தையின் போக்குக்கு ஏற்ப நம் செயல்பாடுகளை வைத்துக் கொள்வது நல்லது.

சந்தை அபரிமிதமான ஏற்றத்தில் இருந்துவரும் நிலையில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றாலும், சந்தையில் பங்கெடுக் காமல் இருக்க வேண்டாம். சந்தையில் லிக்விடிட்டி தொடர்ந்து நல்ல போக்கில் இருந்துவரும் நிலையில், தற்போதுள்ள ஏற்றத்தின் போக்கில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. சந்தையின் நகர்வுகள் அகலமான வரம்புகளைத் தற்போது உருவாக்கியிருப்பதால், வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித் துள்ளன. வரும் வாரத்தில் பேங்க் நிஃப்டி அடுத்த உச்சத்தை எட்டுவதற்கு முயற்சி செய்யலாம் என்று எதிர் பார்க்கலாம்.

எல்.டி.டி.எஸ் (LTTS)

தற்போதைய விலை: ரூ.1,969.95

வாங்கலாம்


கடந்த வாரம் ஐ.டி துறை பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன. அவற்றில் பிரேக் அவுட் ஆகி உச்சத்தை நோக்கி நகரும் சாட்சியங்களுடன் எல்.டி.டி.எஸ் நீண்ட காலமாகக் காத்திருக்கிறது. இந்தப் பங்கின் போக்கைப் பார்க்கும் போது, 2018 மே மாதத்தில் அடைந்த உச்சத்துக்குப் பிறகு, வீழ்ச்சி கண்டு கன்சாலிடேஷன் நிலையில் இருந்து வருகிறது. தற்போது இதில் வலுவான பிரேக் அவுட் நகர்வுக்கான வாய்ப்பு தெரிகிறது. வரும் வாரங்களில் இந்தப் பங்கு ரூ.2,250 வரை உயர வாய்ப்பு உள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.1,900.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL)

தற்போதைய விலை: ரூ.120.50

வாங்கலாம்


சமீபத்தில் சந்தையில் மீண்டும் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான பங்குகள் நல்ல ஏற்றத்தைப் பதிவு செய்திருக்கும் நிலையில், வரும் நாள்களில் நல்ல ஏற்றத்தை அடையும் சாத்தியங்களுடன், நம்பகமான சார்ட் பேட்டர்ன்களுடன் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளது.

இந்தப் பங்கின் விலை வெற்றிகரமாக பிரேக் அவுட் ஆகும்பட்சத்தில் 160- 170 வரை குறுகிய காலத்தில் ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது. ரூ.113-ல் ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்.

ஜே.கே பேப்பர் (JKPAPER)

தற்போதைய விலை: ரூ.108.25

வாங்கலாம்


பேப்பர் விலை உயர்வு குறித்த செய்திகள் வெளியான பிறகு பேப்பர் தயாரிப்பு நிறுவனப் பங்குகளும் கவனத்தைப் பெற்றன. இதில் முன்னணியில் இருக்கும் ஜே.கே பேப்பர் பங்கு அதன் மார்ச் மாத பாட்டம் நிலைக்குப் பிறகு கன்சாலிடேஷனில் இருந்தது, தற்போது பிரேக் அவுட் ஆகி ஏற்றம் அடையத் தயாராக இருக்கிறது. ரூ.130-க்கு உயர வாய்ப்புள்ளது. ரூ.99-ல் ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்!

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ரியல் எஸ்டேட் துறை பங்குகளில் கணிசமான ஏற்றத்தைப் பார்க்க முடிந்தது. வீடுகளின் விற்பனை உயர்ந்ததன் காரணமாக இந்த ஏற்றம் சாத்தியமாகி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு