Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தால், இண்டெக்ஸ் அதிசயத்தை நிகழ்த்தலாம்!

ந்தையில் ஏற்றமானது அந்நிய முதலீடுகள் தீவிரமாக இருந்ததன் காரணமாகத் தொடர்ந்து நீடித்தது. நவம்பர் மாதத்தில் மட்டும் அந்நிய முதலீடுகள் ரூ.50,000 கோடியை எட்டியிருக்கிறது. இது இதுவரை இல்லாத அளவிலான முதலீடாகக் கருதப்படுகிறது.
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

மேலும், பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இத்தகைய தீவிரமான அந்நிய முதலீட்டுப் போக்கில் எந்தவிதத் தொய்வும் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் இந்த ஏற்றம் தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறிக் கொண்டிருக்கும் சமயத்திலும் அந்நிய முதலீடுகள் சிறப்பாக இருப்பதால்தான், சந்தை ஏற்றத்தில் இருந்துவருகிறது. உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தால், இண்டெக்ஸ் மிகப்பெரிய அதிசயத்தை நிகழ்த்த வாய்ப்பிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

இருந்தபோதிலும் நிஃப்டி 13,000 புள்ளிகளைக் கடந்த வாரத்தில் எட்டியது. இந்த நிலையை எட்டியதோடு மட்டுமல்லாமல், வாரம் முழுவதும் இந்த நிலையைத் தக்கவைத்துக் கொண்டது. அப்போதும்கூட புதனன்று அந்நிய முதலீடுகள் பங்குகளை விற்று வெளியேறுவதாக எழுந்த வதந்தி காரணமாகத் திடீர் விலை இறக்கம் காணப்பட்டது. இதனால் கரடியின் போக்கு உருவாவதை நம்மால் பார்க்க முடிந்தது. இது தொடர்ந்திருந்தால் சந்தை மேலும் இறக்கத்தைக் கண்டிருக்கக் கூடும். ஆனால், வியாழனன்று வர்த்தகத் தொடக்கத்திலிருந்தே இறக்கத்துக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாறாக, ஏற்றம் அடைந்து வர்த்தகம் ஆனது. எனவே, இந்தச் சூழல் வர்த்தகர்களின் திடீர் பதற்றம் காரணமாக நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பேங்க் நிஃப்டியும் ஓரளவுக்கு சிறப்பாகவே செயலாற்றியது. ஆனால், பெரிய அளவில் ஏற்றம் காணப்படவில்லை. நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி இரண்டின் வாராந்தர கேண்டில் பேட்டர்ன் தயக்கமான டோஜி வகையைச் சார்ந்தவையாக உள்ளன. எனவே, புதிய உச்சங்கள் காணப்பட்டாலும் போக்கு ஒரு வரம்புக்கு உள்ளேயே இருந்தது. ஒருவேளை, சந்தையில் பயமும் பதற்றமும் தொடர்வதால், இந்த ரியாக்‌ஷன் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், கடந்த எட்டு மாதங்களாக சந்தை பெரிய அளவில் ரியாக்‌ஷன் ஏதும் நடக்காமல் இயங்கி வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஆனால், கடந்த வார சார்ட்டைப் பார்க்கும் போது கடந்த வாரத்தில் ஏற்பட்ட ரியாக்‌ஷன் அவற்றின் சராசரி சப்போர்ட் நிலைகளுக்கு நகர்ந்திருக்கிறது. மேலும், அந்த நிலைகளில் தொடர்ந்து டிமாண்ட் மீண்டும் உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது. மொமென்டம் சார்ட்டைப் பார்த்தால், சந்தையில் பாசிட்டிவ் போக்கானது ஆர்.எஸ்.ஐ 60-க்கு மேலேயே தொடர்கிறது. எனவே, மொமென்டம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து ஏற்றத்தின் போக்கிலிருந்து வருகிறது. எனவே, நிஃப்டி உடனடி இலக்காக 13200 உள்ளது. இந்த இலக்கில் தொடர்ந்து லாங் வர்த்தகத்தைத் தொடரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாக்ஹார்ட் பார்மா (WOCKPHARMA)

தற்போதைய விலை ரூ.434.65

வாங்கலாம்

வாக்ஹார்ட் பார்மா நிறுவனப் பங்கில் கடந்த வாரத்தில் திடீர் செயல்பாடு காணப்பட்டது. இதனால், விலை நகர்வு திடீர் ஏற்றத்தை எட்டியதுடன், அதன் மொமென்டம் காரணி களிலும் ஏற்றத்தின் போக்கை உண்டாக்கி யிருக்கிறது. இதனால் பங்கில் மேலும் ஏற்றத்தின் நகர்வு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் நாள்களில் இறக்கம் ஏற்படும்போது பங்கை வாங்குவதற்கான வாய்ப்புகளாக எடுத்துக் கொள்ளலாம். குறுகிய காலத்தில் ரூ.475 – ரூ.500 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.410-ஆக வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஜி.எஸ்.எஃப்.சி (GSFC)

தற்போதைய விலை. ரூ.71.50

வாங்கலாம்

மார்ச் மாதத்தில் இந்தப் பங்கு வெகுவாக இறக்கம் கண்டது. ரூ.30 என்கிற அளவுக்கு இறங்கியது. இந்தச் சரிவை சரிசெய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டதை அடுத்து தற்போது பங்கில் நல்ல முன்னேற்றம் காணப் படுகிறது. தற்போது நல்ல ஏற்றத்தைக் காண்பதுடன், மொமென்டத்துக்கான அறிகுறிகளும் நன்றாக இருக்கிறது. எனவே, ரூ.90- ரூ.100 என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.60-ஆக பங்கை வாங்கலாம்.

பல்ராம்பூர் சீனி (BALRAMCHIN)

தற்போதைய விலை ரூ.161.25

வாங்கலாம்

இந்த நிறுவனப் பங்கை ஏற்கெனவே பரிந்துரை செய்திருக்கிறோம். அதன்படி தொடர்ந்து நிலையான ஏற்றத்தின் போக்கில் இருந்து வருகிறது. துறைசார்ந்த செய்திகள் பெரிய அளவில் பாசிட்டிவ் போக்கை உருவாக்கி யிருக்கிறது. இதனால் ஏற்றம் தொடர்ந்து காணப்படுகிறது. தற்போது இந்தப் பங்கில் சில கன்சாலிடேஷன் நிகழ்வுக்குப் பிறகு புதிய ஏற்றத்தின் போக்கு மீண்டும் உருவாகியுள்ளது. எனவே, ஸ்டாப்லாஸ் ரூ.151-ஆக பங்கை வாங்கலாம். புதிய உச்சமாக ரூ.185 வரை உயர வாய்ப்புள்ளது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.