Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

டந்த வாரம் சனிக்கிழமை, பட்ஜெட்டுக்குப் பிறகு இறக்கத்தால் பாதிக்கப்பட்டது சந்தை. அது பரந்துபட்ட அளவில் பெரிதும் இறங்கி, முதலீட்டாளர்களின் சென்டிமென்ட்டைக் காயப்படுத்தி, நம்பிக்கையையும் சிதைத்தது. அன்றைய தினம் பலரும் வெளியேறியதால், சந்தை பலவீனமாகி இறங்கியது. ஆனால், அந்த வார இறுதி நாள்களில் சந்தை நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கினார்கள். அதன் பிறகு ஒவ்வொருவரும் மீண்டும் சந்தைக்குள் நுழைந்ததால், சந்தை கடந்த வாரம் முழுக்க மேல்நோக்கி ஏறியது. இந்த ஏற்றப்போக்கு மேலும் தொடர வாய்ப்பிருக்கிறது. நிஃப்டி மீண்டும் ஒரு முறை 12,000 புள்ளிகளுக்கு மேலான வரம்புக்குள் நுழைந்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முந்தைய வாரத்தில் நிஃப்டியின் ஏற்றத்தைத் தடுத்ததில் வங்கிகள் முக்கியப் பங்குவகித்தன. ஆனால், இந்த வாரத்தில் வங்கிகள் தங்களைத் திருத்திக்கொண்டு நிஃப்டியையும் வழிநடத்திச் சென்றன. ஸ்டேப் பேங்க் ஆஃப் இந்தியாவைப்போல தனியார் வங்கிகளும் நல்லமுறையில் செயல்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

சீனாவிலிருந்து வரும் செய்திகள் சாதகமாக இல்லாததால், உலோகங்களின் செயல்பாடுகள் மிதமாகவே இருந்தன. ஐ.டி மற்றும் பார்மசூட்டிக்கல்துறை பங்குகள் வழக்கம்போல பாதுகாப்பான நகர்வுகளைக்கொண்டிருந்தன. நுகர்வோர் பொருள்கள் தயாரிப்புத்துறைப் பங்குகள் நல்ல காலாண்டு முடிவுகளைக் தந்ததால், சந்தையின் ஏற்றத்துக்கு உதவிகரமாக இருந்தன.

ஒட்டுமொத்தமாக, தற்போதைய நிலைமை நன்றாக இருக்கிறது. பட்ஜெட் என்னும் முக்கிய நிகழ்வு முடிந்துவிட்டது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை. வெளியாகும் செய்திகளும் சாதகமாகவே உள்ளன. வெளிநாட்டுப் பங்குச் சந்தைகள் சீராகவும், நல்ல நிலையிலும் செயல்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்த செய்திகள் சாதகமானவையாகவே இருக்கின்றன. பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றப்போக்கில் செயல்பட்டால், குறிப்பிட்ட நிறுவனப் பங்குகள் மீண்டும் காளையின் போக்குக்குத் திரும்பக்கூடும்.

பங்குச் சந்தை தொடர்ந்து ஏற்றப்போக்கில் செயல்பட்டால், குறிப்பிட்ட நிறுவனப் பங்குகள் மீண்டும் காளையின் போக்குக்குத் திரும்பக்கூடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராடிகோ கைத்தான் (RADICO)

தற்போதைய விலை: ரூ.415.00

வாங்கலாம்.

சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களின் பங்குகளுக்கு, பங்குச் சந்தையில் என்றைக்குமே டிமாண்ட் இருக்கும். அந்த மாதிரியான நிறுவனம்தான் இது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் கவர்ச்சிகரமானதாக இருந்ததால், புதிய முதலீட்டாளர்கள் இதன் பங்குகளில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

இதன் துறை சார்ந்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் கவர்ச்சியான முறையில் வெளியாகியிருப்பதால், பங்கு விலை ஏற்றத்தின் போக்கில் இருக்கிறது. இந்தப் பங்கின் விலை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகியகாலத்தில் ரூ.450-க்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.395 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்
பங்குகள்

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் (CHOLAFIN)

தற்போதைய விலை: ரூ.339.95

வாங்கலாம்.

இந்த நிறுவனத்தின் பங்கு நீண்டகாலமாக நிலையான ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்தது. கடந்த வாரத்தில் புதிய உச்ச விலையைப் பதிவுசெய்திருக்கிறது. இந்த ஏற்றம் தொடரும் எனத் தெரிகிறது. முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில் இந்தப் பங்கை வாங்கலாம். பங்கின் விலை உச்சத்தில் இருந்தாலும், விலை இன்னும் உயரலாம். இலக்கு விலை ரூ.360. ஸ்டாப்லாஸ் ரூ.315 வைத்துக்கொள்ளவும்.

ட்ரென்ட் (TRENT)

தற்போதைய விலை: ரூ.662.55

வாங்கலாம்.

இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கின்றன. வெஸ்ட்சைடு மற்றும் ஜுடியோ ஆகிய துணை பிராண்டுகளின் செயல்பாடுகளும் சிறப்பாக இருப்பதால், காலாண்டு முடிவுகள் சிறப்பாக வெளிவந்திருக்கின்றன. இந்த நிறுவனப் பங்கின் மீதான மதிப்பீடு நன்றாக இருப்பதால், நிகழ்காலத்தைவிட, எதிர்காலத்தில் இதன் விலை ஏற்றம் அதிகமாக இருக்கும் என முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள்.

தற்போதைய நிலையில் இந்தப் பங்கை வாங்கலாம். பங்கின் விலை வரும் மாதத்தில் ரூ.730-க்குப் போக வாய்ப்பிருக்கிறது. ஸ்டாப்லாஸ் ரூ.625 வைத்துக்கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism