பிரீமியம் ஸ்டோரி

ந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தையின் தொடக்கம் மிதமாக இருந்தாலும், பின்னர் காளையின் பாய்ச்சலால் மாற்றம் ஏற்பட்டது. நிஃப்டி இண்டெக்ஸ் 12000 புள்ளிகளுக்கும் மேலே உயர்ந்து, வார இறுதிவரை அதே வரம்பைத் தக்கவைத்துக்கொண்டது. முதலீட்டாளர்களைத் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருப்பதற்கேற்ப பங்குகளின் செயல்பாடுகள் இருந்தன. சாதகமான போக்கு இருந்தால், கடந்த வாரத்தைவிட சற்று மேலே ஏற முடியும் என்பதே உண்மை. எனினும், ஏற்றப்போக்குக்கு ஆதரவாக வங்கிப் பங்குகள் செயல்படவில்லை. எனவே, வாரத்தின் இறுதியில் நீண்டகால முதலீட்டாளர்கள் சில நிறுவனப் பங்குகளைவிட்டு வெளியேறினார்கள்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வங்கிகள் குறித்து வெளியான செய்திகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே, லாப நோக்கம் கருதி விற்பனை செய்து வெளியேறியதன் பாதிப்பு உணரப்பட்டது. எனவே, அவர்களால் ஏற்பட்ட இழப்பு நிஃப்டியையும் பாதித்தது.

காலாண்டு நிதிநிலை முடிவுகள் சீஸன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. காலாண்டு முடிவுகளின் கணக்கீடு, நாணயத்தைச் சுண்டுவதுபோல் 50% லாபம் ஈட்டிய நிறுவனங்கள், 50% இழப்பைச் சந்தித்த நிறுவனங்கள் என்று இருந்தன. வருமான வளர்ச்சியும் சொற்பமாக 0.4% என்று இருந்தது. எனவே, இந்தக் காலாண்டும் சந்தையின் போக்குக்கும், சென்டிமென்ட்டுக்கும் எந்தவிதத்திலும் சாதகமாக இல்லை.

பங்குகள்
பங்குகள்

கொரோனா வைரஸ் விவாதத்துக்குரிய முக்கிய தலைப்பாக மாறியுள்ளது. சீனச் சந்தை பேரழிவிலிருந்து விரைவில் மீண்டு வந்தால், உலகச் சந்தைகள் உற்சாகத்துக்கு மாறக்கூடும். எனினும், அந்த பாதிப்பு குறைவதாகத் தெரியவில்லை. இது இப்படியே தொடர்ந்தால் சந்தையின் போக்கை அது தொந்தரவு செய்யக்கூடும். அது, தற்காலிகப் பிரச்னையாகவே இருக்கும் என்று தற்போதைக்கு அனைவரும் நம்புகிறார்கள்.

தூண்டுதல்கள் குறைவதால் சந்தை ஒரு நிலைப்புத்தன்மைக்குச் செல்வதுபோல் தெரிகிறது. கரடியின் போக்கைத் தாங்கக்கூடிய அளவில் சந்தையின் மனநிலை இருப்பதால், பெரிய அளவிலான இறக்கங்களுக்கு வாய்ப்பில்லை. எனினும் இறக்கங்களில் வழக்கம்போல் முதலீடு செய்வதைத் தொடர வேண்டும்.

இந்த காலாண்டும் சந்தையின் போக்குக்கும், சென்டி மென்ட்டுக்கும் எவ்விதத்திலும் சாதகமாக இல்லை.
பங்குகள்
பங்குகள்

இந்தியா மார்ட் (INDIAMART)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.2,501.75.

டிஜிட்டல் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளுக்கு இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து தேவையிருந்து வருகிறது. பட்டியலிடப்பட்ட பங்குகளில் சில சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் ஒன்று இந்தியா மார்ட். இந்தப் பங்கின் விலை நீண்டகாலமாக அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் காணப்பட்டது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தப் பங்கின் விலையில் பிரேக்அவுட் ஏற்பட்டது. அதன் பிறகு பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுவருகிறது. வெள்ளிக் கிழமை மீண்டும் விலை ஏற்றம் கண்டது. இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.2,400 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ. 2,700.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஏ.ஐ.ஏ இன்ஜினீயரிங் (AIAENG)

தற்போதைய விலை ரூ.1,874.05

வாங்கலாம்.

பொறியியல்துறையைச் சேர்ந்த புளூசிப் நிறுவனப் பங்குகளில் இதுவும் ஒன்று. பங்கின் விலையில் மந்தநிலை மாறி, ஏற்றப்போக்கு காணப்படுகிறது. இறக்கத்திலிருந்து ஏறத் தொடங்கியிருக்கிறது. பங்கின் விலையில் பாலிங்கர் பாண்ட் கடந்த வாரம் மீண்டும் உருவாகியிருக்கிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.1,750 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.2,100.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நவீன் ஃபுளோரின் இன்டர்நேஷனல் (NAVINFLUOR)

தற்போதைய விலை ரூ.1,216.75

வாங்கலாம்.

ரசாயனத்துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்குச் சந்தையில் நல்ல ஆதரவு காணப்படுகிறது. அவற்றில் பல புதிய உச்ச நிலையைத் தொட்டிருக்கின்றன. அதிக இறக்கத்துக்குப் பிறகு நவீன் ஃபுளோரின் இன்டர்நேஷனல் பங்கு விலை சமீபத்தில் ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. பங்கின் விலை சார்ட்டில் பாலிங்கர் பாண்ட் உருவாகியிருக்கிறது. இது பங்கின் விலை ஏறக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.1,160 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.1,350.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு