Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

BUY & SELL

பிரீமியம் ஸ்டோரி
டந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தை சிறு பயத்தை ஏற்படுத்திய பிறகு, மீண்டும் அதன் ஏற்றத்தின் போக்கில் நகரத் தொடங்கி நிஃப்டி 14000 என்ற நிலையை நெருங்கியது. தொடர் ஏற்றமானது பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்கள், ஈடுபட விரும்பு பவர்கள் அனைவரையும் ஏற்றத்தின் போக்கு மேலும் தொடர்ந்து இருக்கும் என்று உறுதியாக நம்ப வைக்கிறது.

இதற்கு, பங்குச் சந்தை இறக்கம் காணும்போதெல்லாம் முதலீட் டாளர்கள் பங்குகளை வாங்க முடியும் என்பதற்கான அர்த்தம் அல்ல. ஏனெனில், எப்போதெல்லாம் சந்தையை இழக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் முதலீட்டாளர் களைப் பயமுறுத்துகிறது. அதே சமயம், சந்தையின் போக்கு ஏற்றத்தின் பிடியிலிருந்து மாறவில்லை என்பதை உணரவும் வைக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

சாட் நகர்வுகளைப் பார்க்கும்போது கடந்த வாரத்தில் ஏற்பட்ட இறக்க மானது கிட்டத்தட்ட பிட்ச்ஃபோர்க் சேனலின் ஏறுமுகத்தின் முடிவாகவே பார்க்க முடிகிறது. காளையானது மீண்டும் தனது பிடியை தக்கவைத்துக் கொண்டு குறியீடுகளை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. கடந்த சில வர்த்தக நாள்களின் கேண்டில் பேட்டர்ன் ஆனது, சிறிய அளவு கேண்டில்களாக இருக்கின்றன. எனவே. மேலும் ஏற்றத்தைச் சந்திப்பதற்கான பதற்றமும் நீடிக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

ஆயினும், தற்போதைய சூழலில் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் தெளிவாக இருந்தால்தான், சந்தை தடுமாறும்போது சரியான முடிவு களை எடுக்கத் தயாராக இருக்க உதவும். எனவே, சார்ட்டில் ஏறுமுகமான பிட்ச்ஃபோர்க்கின் ரெசிஸ்டன்ஸ் நிலை தொடர்ந்து உயர்கிறது. எனவே, இந்தச் சூழலில் விலை இலக்கானது மீடியன் கோட்டுக்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே, மேலும் சில உச்சங் களுக்கான வாய்ப்புகள் உள்ளன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

சந்தையின் சென்டிமென்ட் இன்னும் மாறாமல் இருக்கிறது. குறிப்பாக, வயதான முதலீட்டாளர்கள் இன்னும் தீவிரமாகச் சந்தையில் ஈடுபடவில்லை எனும் போதிலும் சென்டிமென்ட் தொடர்கிறது. இது தொடரும்பட்சத்தில் மேலும் ஏற்றத் துக்கான சாத்தியங்களை உண்டாக்கு வதன் மூலம் முதலீட்டாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க வாய்ப் புள்ளது. சந்தையில் நிலையற்ற தன்மைக்கான அறிகுறி எதுவும் அருகில் இல்லை. மேலும், எஃப்.ஐ.ஐ முதலீடுகளும் தொடர்ந்து சிறப்பாக இருந்துவருவதால், சந்தை தற்போதுள்ள ஏற்றத்தின் போக்கில் இருந்து விலகுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

எனவே, 2021 புத்தாண்டு நமக்கு மேலும் பல ஏற்றங்களைக் கொண்டு வரும் என்று நம்பலாம். வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் (CHEMCON)

தற்போதைய விலை ரூ.499.15

வாங்கலாம்


கெம்கான் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனப் பங்கு, நல்ல விலை அதிகரிப்பில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்தப் பங்கு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. அதன் பிறகு படிப்படியாக இறங்கி ரூ.400 என்ற நிலைக்கு வந்தது. ஒரு செவ்வக வடிவ கான்சாலிடேஷன் மண்டலம் உருவானது. இந்த நிலை இரண்டு மாதங்களுக்கு நீடித்தது. அதன் பிறகு, பங்கின் விலையில் பிரேக் அவுட் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பங்கின் விலை வியாழக் கிழமை மட்டுமே 15% ஏற்றம் கண்டிருக்கிறது. அடுத்த ஒரு வாரக் காலத்தில் பங்கின் விலை ரூ.625-க்கு ஏற்றம் காண வாய்ப்பிருக்கிறது. ஸ்டாப்லாஸ் ரூ.445 வைத்துக் கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

தீபக் நைட்ரேட் (DEEPAKNTR)

தற்போதைய விலை ரூ.941.85

வாங்கலாம்


ரசாயன நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் இப்போதும் டிமாண்ட் இருந்துகொண்டிருக்கிறது. அதில் முக்கியமான பங்கு தீபக் நைட்ரேட் ஆகும். இந்த நிறுவனப் பற்றிய பாசிட்டிவ் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால், இந்த நிறுவனப் பங்கின் விலை ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து புதிய விலை உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனப் பங்கின் மூவிங் ஆவரேஜ் நன்றாக ஆதரவு நிலையில் உள்ளது. இந்தப் பங்கில் தற்போதைய நிலையில் முதலீடு செய்யலாம். குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.1040-க்கு உயரக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ. 900 வைத்துக்கொள்ளவும்.

ஷீலா ஃபோம் (SFL)

தற்போதைய விலை ரூ.1,739.90

வாங்கலாம்

ஷீலா ஃபோர்ம் நிறுவனம் பயன் படுத்தும் மூலப்பொருள்களின் விலை கணிசமாகக் குறைந்திருப்பதால், இந்த நிறுவனப் பங்கு காளையின் பிடிக்குத் திரும்பியிருக்கிறது.

இந்தப் பங்கின் விலையில் பிரேக் அவுட் ஏற்பட்டிருக்கிறது. வார சார்ட்டில் ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகியிருப்பது இதை உறுதிப்படுத்தியுள்ளது.

பங்கின் விலை புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மேலும், பங்கின் விலையில் புதிய மொமென்டம் காணப்படுகிறது.

தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.1,850-க்கு உயரக் கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.1,675 வைத்துக்கொள்ளவும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு