பிரீமியம் ஸ்டோரி

முந்தைய வாரத்தில் தரப்பட்ட 14440 என்ற இலக்கை நிஃப்டி குறியீடு மிக எளிதாக எட்டியது. அத்துடன் அடுத்த இலக்கான 14650 என்ற நிலையையும் நோக்கி நகர்ந்தது. அப்போது வர்த்தகர்கள் லாபம் பார்க்கும் நடவடிக்கைகளையும் பார்க்க முடிந்தது. ஆனால், சந்தையின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் அதன் முன் வைக்கப்படும் அத்தனை இலக்குகளையும் நெருங்கும் என்பதை உறுதி செய்வதாக இருப்பதால், சந்தையின் போக்குக்கு எதிரான முடிவுகளை எடுக்கத் தேவையான ஆதாரங்களை நாம் கண்டடைய முடியாத வரை சந்தையின் போக்கிலேயே செயல்படவே நம்மைத் தூண்டுகிறது.

மேலும், இன்ட்ராடே ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும் சிறிது காலம் மட்டுமே இருக்கிறது. இதனால் ஒவ்வொரு இறக்கத்தின்போதும் முதலீடுகள் உள்ளே வருவதற்கான வாய்ப்புகளைப் பார்க்க முடிகிறது. இதனால், தொடர்ச்சியாக சிறிய அளவிலான நிழல் கேண்டில்கள் உருவாவதைப் பார்க்க முடிகிறது. பெரிய அளவில் விலைநகர்வுகளில் இறக்கம் காணப்படாத வரை தொடர்ந்து சந்தை காளையின் போக்கில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவரும் காலம் தொடங்கியிருக்கிறது. வரும் வாரங்களில் பங்குச் சந்தையை நகர்த்துவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். முந்தைய காலாண்டைக் காட்டிலும் இந்தக் காலாண்டில் நிதிநிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, ஏமாற்றமளிக்கும் நிகழ்வுகளுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், முன்னணி நிறுவனப் பங்குகள் சந்தையின் நகர்வைப் பெரிய அளவில் தீர்மானிக்கும். அதே சமயம், அதிகபட்ச சிறு முதலீட்டாளரின் பங்களிப்பு ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளில் இருப்பதால், அவை நல்ல நிதிநிலை முடிவுகளுடன் வரும் பட்சத்தில் அவற்றில் நல்ல ஏற்றம் காணப்படும்.

பட்ஜெட் தாக்கல் செய்யப் படும் நாளும் விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, அதுவும் சந்தையின் நகர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக இருக்கும். பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் இருப்பதால், சந்தையின் நகர்வில் முக்கிய காரணியாக இருக்கும். எனவே, ஜனவரி இறுதி வரை சந்தையின் போக்கு காளையின் ஆதிக்கத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பேங்க் நிஃப்டியும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ஒன்று. மேலும், இந்த வாரத்தில் இருந்து புதிய ஃபின்நிஃப்டி (Finnifty) குறியீடும் எஃப் அண்ட் ஓவில் வர்த்தகமாகத் தொடங்கி யிருக்கிறது. இது வர்த்தகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருவதாக இருக்கிறது.

நிஃப்டியின் நகர்வை பொறுத்தவரை, தற்போதைய ஏற்றத்தின் போக்கு தொடரும் பட்சத்தில் 14700 - 14800 என்ற வரம்பை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கிடப்பில் உள்ள லாங் பொசிஷன் களுக்கு ஸ்டாப்லாஸ் 14350 என்ற நிலையில் வைத்துக்கொள்ளலாம்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

ஜூபிலன்ட் லைஃப் (JUBILANT)

தற்போதைய விலை: ரூ.987.00

வாங்கலாம்


சமீப காலமாகவே ஜூபிலன்ட் லைஃப் பங்கில் வாலட்டைலிட்டி அதிகமாக இருந்து வந்தது. அதன் உச்ச விலையிலிருந்து கால் பங்கு அளவுக்கு சரிவைச் சந்தித்து 250 என்ற நிலைக்கு இறக்கம் கண்டது. அதன் பிறகு, பங்கில் விலைநகர்வு இறக்கத்திலிருந்து மீண்டுவரத் தொடங்கியது. ஏறக் குறைய அதன் ரீட்ரேஸ்மென்ட் நகர்வு முழு இறக்க நிலையில் இருந்தும் மீண்டுவந்தது. இந்த அளவுக்கு வேகமான மீட்சியைப் பார்க்கும்போது, பங்கில் மேலும் ஏற்றத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகப் பார்க்க முடிகிறது. கூடவே பங்குக்குச் சாதகமான பாசிட்டிவ் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. எனவே, இப்பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,500 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.925-ல் ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்.

பேங்க் ஆஃப் பரோடா (BANKBARODA)

தற்போதைய விலை: ரூ.75.35

வாங்கலாம்


பொதுத்துறை வங்கிப் பங்குகள் கடுமையான இறக்கத்தை மார்ச் 2020 காலகட்டத்தில் சந்தித்தன. இதனால் இந்தப் பங்கு அப்போது பல ஆண்டு முந்தைய குறைந்தபட்ச விலையை எட்டியது. அதன் பிறகு, நவம்பர் வரை கன்சாலிடேஷன் நிலையிலிருந்து வந்தது. பின்னர் பங்கில் வலுவான ஏற்றம் ஆரம்பித்தது. இந்த நகர்வுகளில் குறிப்பிடத்தக்க வால்யூமும் அதன் பாட்டம் நிலையில் காணப்பட்டது. பங்கின் தற்போதைய ரீட்ரேஸ்மென்ட் நிலையானது அதை ரூ.105 என்ற உச்சத்துக்குக் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.67-ல் வைத்துக் கொள்ளவும்.

சார்ட்
சார்ட்

குவெஸ் கார்ப் (QUESS)

தற்போதைய விலை: ரூ.568.15

வாங்கலாம்


இந்தப் பங்கில் இறக்கமானது 2018-ல் ஆரம்பமானது. அதன் பிறகு மே 20-ம் தேதி அதன் குறைந்தபட்ச விலையாகரூ.160 என்ற நிலையை எட்டியது.

பின்னர் அதனுடைய நீண்ட இறக்கம் முடிவுக்கு வந்து ஏற்றம் ஆரம்பித்தது. பங்கின் கடைசி இலக்கான 620 என்ற நிலையை, அதன் நகர்வுகளின் வேகத்தைப் பார்க்கும்போது எளிதில் எட்டும் எனத் தெரிகிறது.

பங்கு அதன் இறக்கத்திலிருந்து 50 சதவிகித ரீட்ரேஸ்மென்ட் ஆகியிருப் பதால் பங்கின் இலக்கு விலை ரூ.700 ஆக உள்ளது.

பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.545-ல் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

சந்தை
சந்தை

பெரிய அளவில் விலை நகர்வுகளில் இறக்கம் காணப்படாத வரை தொடர்ந்து சந்தை காளையின் போக்கில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு