Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

தற்போதுள்ள சந்தை போக்கு எட்டு மாதங்களுக்கு ஏற்றத்தின் சாத்தியங் களுடன் இருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி
டந்த வாரத்தில் புதிய வைரஸின் தாக்கம் பரவத் தொடங்கியது என்கிற செய்தியால் இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஐரோப்பிய பகுதிகளில் புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், ஐரோப்பிய சந்தைகளில் உடனடியாக எதிரொலித்தது. ஐரோப்பிய சந்தைகள் சரிவைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளிலும் திங்களன்று கணிசமான இறக்கம் காணப்பட்டது.

இதேபோல, நவம்பரில் ஒரு வதந்தி பரவியதன் காரணமாக பங்குச் சந்தை இதே அளவு இறக்கத்தைச் சந்தித்தது. தற்போது புதிய வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றம் அன்றைய தின சந்தை வர்த்தகத்தில் ஆதிக்கம் செய்தது.

முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தங்களுடைய பொசிஷன்களை செட்டில் செய்ய விரைந்தனர். ஆனாலும் பங்கு விற்பனை தொடர்ந்து நீடிக்காத நிலையில், பழைய சென்டிமென்ட் மீண்டும் சந்தையில் வெளிப்பட ஆரம்பித்தது. பங்கு விலைகளும் மீண்டும் பழைய நிலையை எட்டின. இதனால் கடந்த வார வர்த்தகப் போக்கு ‘தொங்கும் மனிதன்’ பேட்டர்னில் முடிவடைந்தது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

கடந்த முறை நடந்ததுபோல், பங்குச் சந்தையின் இந்த திடீர் பதற்றத்துக்கு ஆளானதால், லாங் பொசிஷன்கள் வெளியேற ஆரம்பித்தன. அன்றைய தினத்தில் மீதமிருந்தவை அடுத்த நாள் விற்கப்பட்டன. பிறகு, இந்தத் தொங்கும் பேட்டர்ன் முடிவுக்கு வந்ததும் பங்கு விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பின. பேங்க் நிஃப்டி குறியீட்டிலும் இதே போன்ற நகர்வு காணப்பட்ட நிலையில் நிலையற்ற தன்மையைக் குறிக்கும் டோஜி பேட்டர்ன் உருவானது. இவை மட்டுமல்லாமல் பிற ஸ்மால்கேப், மிட் கேப், ஆல்பா 50 ஆகிய குறியீடுகளிலும் ‘தொங்கும் மனிதன்’ அல்லது டோஜி பேட்டர்னே உருவானது. இதன் மூலம் பங்குச் சந்தையில் பங்கு விற்பனை பரவலாகக் காணப்பட்ட அதே சமயம், அனைத்துமே சமமாக மீண்டு வந்திருக்கின்றன என்பதையும் காட்டுகிறது.

இந்தப் போக்கு வரும் வாரத்திலும் தொடர்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருப் பதைக் காட்டுகிறது. விடுமுறைக் காலம் என்பதால், அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், திங்கள்கிழமை இறக்கத்தின்போதும் அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை மிகக் குறைவாகவே இருந்ததையும் இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

இதிலிருந்து அந்நிய முதலீட் டாளர்கள் இந்திய சந்தைகளில் வைத்துள்ள முதலீடுகளை விற்று வெளியேறுவதற்குத் தயாராக இல்லை என்பதை உணர முடிகிறது.

இதன் பின்னணியில் பார்க்கும் போது, பங்குச் சந்தை காளையின் போக்கில் இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம். மேலும், சார்ட் நகர்வை ஆராயும்போது ட்ரெய்லிங் தடுப்புக் கோட்டை எட்ட இன்னும் காலமிருக்கிறது. தற்போதுள்ள சந்தைப் போக்கு எட்டு மாதங்களுக்கு ஏற்றத்தின் சாத்தியங்களுடன் இருக்கிறது. இது சந்தையில் முதலீட்டாளர் களின் ஈடுபாட்டையும் உள்வரும் முதலீடுகளையும் பார்க்கும்போது உறுதியாகிறது. எனவே, லாங் பொசிஷனில் தொடரலாம். நிஃப்டி 13000 என்ற நிலையைக் குறுகியகால ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளலாம்.

குஜராத் கேஸ் (GUJGASLTD)

தற்போதைய விலை: ரூ.375.00

வாங்கலாம்


நிலையான அதேசமயம், முதலீட்டாளர்களை ஈர்க்கக் கூடிய வகையிலான நகர்வின் போக்கு குஜராத் கேஸ் பங்கில் காணப்படுகிறது. இதில் காணப் படும் உச்சநிலை பாட்டம் பேட்டர்னும் முதலீட்டாளர் களின் ஈடுபாடு அதிகமாக இருப்பதை உறுதி செய்கிறது.இதனால், மேலும் ஏற்றம் அடையும் சாத்தியங்கள் உருவாகியுள்ளன. கடந்த வாரத்தில் பங்கு 52 வார உச்சத்தை எட்டியது. மேலும், ஏற்றம் அடைந்து வரும் நாள்களில் ரூ.425 என்ற நிலையை எட்டலாம். ஸ்டாப்லாஸ் ரூ.362-ல் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ரிலாக்ஸோ (RELAXO)

தற்போதைய விலை: ரூ.806.00

வாங்கலாம்


நிறுவன முதலீட்டாளர்கள் இந்தப் பங்கின் மீது அதிக ஈடுபாடு காட்டுவதால், தொடர்ந்து ஏற்றத்தின் போக்கு நிலையாக இருந்து வருகிறது. இதில் ஏற்படும் இறக்கங்களும் தொடர்ந்து முதலீடுகள் உள்ளே வருவதற்கான அறிகுறிகளுடன் உள்ளன. இதனால் இதில் ‘இசிமோக்கு பிளவுஸ் பேட்டர்ன்’ நிலையாக இருந்து வருகிறது. தற்போது இதில் சில ரவுண்டிங் பேட்டர்ன்கள் உருவாகியிருப்பது புதிதாக பிரேக் அவுட் ஆகி ஏற்றம் அடைவதற்கான சாத்தியங்களை உருவாக்கியுள்ளன. புதிய உச்சமாக ரூ.1,050 என்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.770-ல் வைத்துக்கொள்ளவும்.

கெடிலா ஹெல்த்கேர் (CADILAHC)

தற்போதைய விலை: ரூ.490.00

வாங்கலாம்


கொரோனா தடுப்பு மருந்து வரவுள்ள நிலையில், கெடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் மீது கவனம் ஏற்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் பிரதமர் இந்த நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டது இதன்மீதான முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்தப் பங்கின் சார்ட் பேட்டர்னைப் பார்க்கும்போது விலை நகர்வு நிலையான போக்கில் இருந்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்தப் பங்கில் அக்யும்லேட் ஆகியுள்ள நகர்வின் போக்கு தற்போது பிரேக் அவுட் ஆகி ஏற்றம் அடைவதற்கு தயாராகி யிருக்கிறது. எனவே, தற்போதைய விலையில் வாங்கலாம். வரும் வாரங்களில் ரூ.530 என்ற நிலையை எட்ட வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.475-ல் வைத்துக்கொள்ளவும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பிட்ஸ்

2020-ல் 16 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் ஐ.பி.ஓ வெளி யிட்டதன் மூலம் ஏறக்குறைய31,000 கோடி ரூபாயைத் திரட்டி உள்ளன. 2021-ல் இன்னும் கூடுதலான தொகையை ஐ.பி.ஓ மூலம் திரட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பிட்ஸ்

மிஸஸ் பெக்டார் ஃபுட் ஸ்பெஷா லிட்டீஸ் நிறுவனப் பங்கு ஐ.பிஓ வந்து கடந்த வியாழன் அன்று வர்த்தகமாகத் தொடங்கியது. முதல் நாளிலேயே 106% விலை உயர்ந்து, முதலீட் டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது இந்தப் ஐ.பிஓ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு