Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

வர்த்தகத்தின் இடையே பங்கு விலை இறங்கினால் வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

வர்த்தகத்தின் இடையே பங்கு விலை இறங்கினால் வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள்.

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்தியப் பங்குச் சந்தை மீண்டும் ஏற்றத்தின் போக்குக்கு வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் இதற்குக் காரணமாக இருக்கலாம். நிஃப்டி அதன் இறக்கத்திலிருந்து 62% உயர்ந்து மறுசீரமைப்பு மண்டலத்தை நோக்கித் திரும்பியிருக்கிறது. இதனால், ஒரு வாரத்தில் நிஃப்டி ஒரு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

பங்குகளின் விலை குறைந்தன. ஆனால், அதிகம் குறையவில்லை. இது ஆச்சர்யமாக இருந்தது. காரணம், இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்துக்கு பதில், பக்கவாட்டு நகர்வில் செல்லத் தொடங்கியதாகும். அதுவும் சுமார் 150 புள்ளிகள் என்ற பக்கவாட்டு ஒருங்கிணைப்பில் செயல்பட்டது. துறை சுழற்சி இந்தச் சிறிய வரம்புக்குள் தொடர்ந்தது. அது ஏற்ற இறக்க விஷயங்களைச் சற்றுக் கடினமாக்கியது. பங்குச் சந்தை உண்மையில் என்ன செய்ய விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எது எப்படியிருந்தாலும் இறுதியாக, சந்தை மீண்டும் முன்னேறும் மனநிலையில் இருப்பதாகத் தெரிகிறது. புதன்கிழமை இந்தப் பக்கவாட்டு ஒருங்கிணைப்பு மண்டலத்தை உடைத்தது.தற்போதைய ஏற்றத்தின் ஒரு முக்கிய அங்கம், பேங்க் நிஃப்டியின் மோசமான செயல்பாடு. இந்த அம்சத்தைக் கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளோம்.

பேங்க் நிஃப்டி இறக்கத்திலிருந்து 38% ஏற்றம் கண்டிருக்கிறது. தொடர்ந்து அது அழுத்தத்தில் இருக்கிறது. நிதிச் சேவை நிறுவனப் பங்குகளின் செயல்பாடும் மந்தமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தனியார் வங்கிகளுக்கு மட்டுமல்ல, நிதிச் சேவை பிரிவிலுள்ள அனைத்து நிறுவனப் பங்குகளுக்கும் பொருந்தும். அவை அனைத்தும் மாறுபட்ட போக்குச் சூழ்நிலைகளில் இருக்கின்றன. எனவே, அவற்றின் போக்கைப் பொதுமைப்படுத்துவது சற்றுக் கடினம். பங்குகளில் துறை சுழற்சி தெரிகிறது. ஜூன் காலாண்டு முடிந்துவிட்டது. இப்போது நடப்பு ஆண்டின் முதல் காலாண்டு நிதிநிலை முடிவுகள் பற்றிய ஆரூடங்கள் தொடங்கும்.

பங்குகள்
பங்குகள்

யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை என்பதால், முதல் காலாண்டு நிதி முடிவுகளின் எதிர்பார்ப்புகள் கணிசமாகக் குறைந்திருக்கும். எனவே, நல்ல நிதிநிலை முடிவுகளுடன் பங்குச் சந்தையை ஆச்சர்யப்படுத்தும் எந்தவொரு நிறுவனப் பங்கையும் முதலீட்டாளர்கள் கணிசமாக வாங்க வாய்ப்பிருக்கிறது.

எனவே, வரவிருக்கும் முதல் காலாண்டு நிதிநிலை முடிவுகளின்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். நிஃப்டி சமீபத்திய ஸ்விங் ஏற்றத்துடன் வியாழக்கிழமை அன்று சிறப்பாக முடிந்திருக்கிறது.

நிஃப்டி 200 டி.எம்.ஏ நிலைகளுக்கு மேலே தொடர்வது இப்போது சவாலாக இருக்கிறது.அது 10800 - 10900 மண்டலத்தில் இருக்கிறது. இதுவே அடுத்த இலக்கு. இந்த முயற்சியை ஆதரிக்க, பேங்க் நிஃப்டி இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு என்பது ஒரு ஹெவிவெயிட் ஆகும். அது இன்னும் சிறப்பான செயல்பாட்டில் உள்ளது. மேலும், அது நிஃப்டி உயர்ந்த இலக்குகளை அடைய உதவும் எனலாம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தை ஏறும் என்ற நேர்மறையான சென்டிமென்ட்டுடன் இருங்கள். வர்த்தகத்தின் இடையே பங்கு விலை இறங்கினால் வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள்.

யூ.பி.எல் (UPL)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.442.45.

மார்ச் மாத இறக்கத்திலிருந்து பங்கின் விலை ஏற்றம் கண்டுவருகிறது. இப்போது ஏற்றத்தின் போக்கிலிருக்கிறது.

இதற்கு முன்னர் மூன்று முறை ஏற்றத்துக்குத் தயாராகி இறக்கம் கண்டு, இப்போது மீண்டும் ஏற ஆரம்பித்திருக்கிறது. இறக்கத்திலிருந்து 0.618 ஏற்ற மண்டலத்துக்கு வந்திருக்கிறது.

தற்போதைய நிலையில், இந்தப் பங்கின் விலை தொடர்ந்து ஏறும் வாய்ப்பிருக்கிறது.

குறுகியகால நோக்கில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ரூ.460 வரை பங்கின் விலை ஏறக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.410 வைத்துக்கொள்ளவும்.

எம்.எஸ்.டி.சி (MSTCLTD)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.136.90.

ஊரடங்கு முடக்கம், டிஜிட்டல்மயமாக்கல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஆன்லைன் தொடர்பான சில பங்குகளை வாங்க விரும்புகிறார்கள்.

இந்தப் பிரிவில் பல பங்குகள் பட்டியலிடப் படவில்லை. இந்த வாரம் ஆதரவைக்கண்ட நிறுவனப் பங்கு ஒன்று எம்.எஸ்.டி.சி.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பாலிங்கர் பாண்ட் ஆதரவு மண்டலத்தில் வலிமையான புல்லிஷ் கேண்டில் பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து பங்கின் போக்கில் நல்ல மொமென்டமும் உருவாகியிருக்கிறது. இது பங்கின் விலை தொடர்ந்து ஏறும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. உடனடி இலக்கு ரூ.155-ஆக உள்ளது. ஆனால், அதையும் தாண்டி பங்கின் விலை உயரக்கூடும். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.130 வைத்துக் கொள்ளவும்.

கே.ஆர்.பி.எல் (KRBL)

வாங்கலாம்

தற்போதைய விலை ரூ.265.75

அரிசி ஏற்றுமதி நிறுவனப் பங்குகளுக்கு மீண்டும் தேவை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் முன்னணி பங்குகளில் ஒன்று கே.ஆர்.பி.எல்.

மார்ச் மாத இறக்கத்திலிருந்து நல்ல ஏற்றம் கண்டுவருகிறது. சில காலம் பக்கவாட்டு நகர்வுக்குப் பிறகு, தற்போது இந்தப் பங்கின் விலை ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. கூடவே அதிக வால்யூம் மற்றும் நிலையான மொமென்டம் காணப்படுகிறது. இது பங்கின் விலை மேலும் ஏறும் என்பதைக் காட்டுகிறது.

குறுகியகாலத்தில் இந்தப் பங்கின் விலை ரூ.300-க்கு உயரக்கூடும். தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.250-ஆக வைத்துக்கொள்ளவும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism