Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

சந்தையின் தற்போதைய போக்கு காளையின் பக்கம் தொடரும் என்பதால், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் கவனம் செலுத்தலாம்.

ந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் இந்த வாரம் சிறப்பாகவே தொடங்கியது. திங்கள்கிழமை அதிக இடைவெளியுடன் வர்த்தகம் தொடங்கி, ஏற்றத்தை அடைந்தது.

ஆனால், அடுத்த சில தினங்களில் வர்த்தகம் அதிக ஏற்றமும் இல்லாமல், அதிக இறக்கமும் இல்லாமல் வர்த்தகமானது. சரியாகச் சொன்னால், சந்தை நகர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எந்தப் பெரிய செய்திகளும் வரவில்லை. சில காரணிகள் மட்டுமே பங்குகளின் விலை நகர்வுகளைத் தீர்மானித்தன. முந்தைய வாரத்தில் குறிப்பிட்டதுபோல், துறைசார்ந்த சுழற்சி என்பதைக் கண்கூடாக தற்போது பார்க்க முடிந்தது. அது வார இறுதிவரையிலும் தொடர்ந்ததையும் பார்த்தோம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தத் துறை சுழற்சியானது காளையின் போக்குக்கான அம்சம். எனவே, இப்போதைக்கு சந்தையின் போக்கு காளையின் பக்கம் இருப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம்.

நிஃப்டி வாராந்தர ஆப்ஷன்ஸ் எக்ஸ்பைரி, வியாழக்கிழமை அன்று சந்தைக் குறியீடுகளை மூன்று நாள்கள் இருந்த நிலையிலிருந்து உடைத்து ஏற்றத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஏற்றம் வலுவாகவும் அதேசமயம் வால்யூம் அதிக அளவிலும் நன்றாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. எனவே, நிஃப்டி மேலும் ஏற்றத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கலாம். நிஃப்டி 200 டி.எம்.ஏ அளவை நோக்கி நகர்ந்து, 10850 என்ற நிலைக்கு ஏற்றமடையலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மேலும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம், பேங்க் நிஃப்டி தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பது. முன்பு பேங்க் நிஃப்டி 38% ரீடிரேஸ்மென்ட் நிலையில் திணறிக் கொண்டிருந்தது. அதேநேரம், நிஃப்டி 62% ரீடிரேஸ்மென்ட் நிலையை நோக்கி வலுவாக நகர்ந்தது. இந்த வித்தியாசத்தில் பேங்க் நிஃப்டியின் செயல்பாடு இருந்ததை நீண்ட காலமாக நாம் பார்க்கவில்லை.

பங்குகள்
பங்குகள்

தற்போது வங்கிப் பங்குகளின் ஏற்றம் நிஃப்டிக்கு நிகராக மாறத் தொடங்கியுள்ளன. கடந்த வாரத்தில் பொதுத்துறை வங்கிப் பங்குகளும் நன்றாக ஏற்றம் கண்டதைப் பார்த்தோம் (சில மாதங்களாக மிகுந்த அழுத்தத்தில் இவை இருந்தன). குறிப்பாக, எஸ்.பி.ஐ., கனரா பேங்க் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன. இது தொடர்ந்தால், வரும் நாள்களிலும் நகர்வுகள் ஏற்றத்தை நோக்கி இருப்பதைப் பார்க்கலாம்.

வரும் வாரத்தில் ஜூன் காலாண்டு (2020 ஏப்ரல், மே, ஜூன்) நிதிநிலை முடிவுகள் வரவுள்ளன. அவற்றில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இல்லை. எனவே, சிறப்பாகச் செயல்படும் பங்குகளே சந்தையின் நகர்வைத் தீர்மானிக்கும். தற்போது எதிர்பார்ப்புகள் குறைவாக இருப்பதால், பெரிய அளவில் ஏற்றமோ, இறக்கமோ இல்லாமல் இருக்கும். ஆனால், சந்தை கோவிட்-19 பாதிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கத்துக்கு எதிர்வினை ஆற்றும் வாய்ப்புகளும் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தையின் தற்போதைய போக்கு காளையின் பக்கம் தொடரும் என்பதால், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் கவனம் செலுத்தலாம். வாரத்தின் இடையில் வரும் இறக்கங்களை, பங்குகளை வாங்கும் வாய்ப்புகளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நிஃப்டி சார்ட்டில் தற்போது ஏற்றத்துக்கான நல்ல சப்போர்ட் இருப்பதால், 200 டி.எம்.ஏ நிலையை உடைத்து நகரும்போது நிஃப்டியில் வலுவான நகர்வுகளைக் காணலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

கிரானூல்ஸ் இந்தியா (GRANULES)

தற்போதைய விலை: ரூ.226.45.

வாங்கலாம்.

முன்பே சில முறை கிரானூல்ஸ் பங்கை ரூ.200-225 இலக்கு விலையில் முதலீடு செய்யலாம் எனப் பரிந்துரைத்தோம். அந்த இலக்கு தற்போது எட்டப்பட்டுள்ளது. ஆனாலும், பங்கில் எந்தப் பலவீனமான அறிகுறிகளும் தென்படவில்லை. எனவே, புதிய ஏற்றத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. எனவே, ரூ.250 என்ற இலக்கு விலையுடன் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.200 வைத்துக்கொள்ளவும்.

கஃபிக் பயோசயின்சஸ் (GUFICBIO)

தற்போதைய விலை: ரூ.90.45.

வாங்கலாம்.

பங்குகள்
பங்குகள்

பார்மா சார்ந்த ஸ்மால்கேப் பங்குகள் சந்தையில் சிறப்பாகச் செயல்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க நகர்வுகளுடன் கஃபிக் பயோசயின்ஸ் நிறுவனப் பங்கு உள்ளது. நல்ல வால்யூம் மற்றும் வலுவான நகர்வு என ஏற்றத்தை நோக்கி நகர்வதற்கான அறிகுறியுடன் உள்ளது. தற்போதைய விலையில் வாங்கலாம். வரும் நாள்களில் ரூ.125-க்கு ஏற்றமடைய வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.80 வைத்துக்கொள்ளவும்.

ஷில்பா மெடிகேர் (SHILPAMED)

தற்போதைய விலை: ரூ.515.05.

வாங்கலாம்.

இது மற்றுமொரு பார்மா துறை மிட்கேப் பங்கு. மார்ச் மாதத்தில் இறக்கத்தைச் சந்தித்த இந்தப் பங்கு தற்போது சிறப்பாக ஏற்றம் கண்டிருக்கிறது. கீழ் போலிங்கர் பேண்டிலிருந்து எழுந்து வலுவாக ஏற்றத்தை நோக்கி நகர்கிறது. தற்போது விலை மிட் பேண்டைக் கடந்துள்ளது எனவே, தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும். ரூ.575 வரை ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது. ரூ.500 ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். நீண்டகால முதலீட்டையும் மேற்கொள்ளலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.