நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது நிதிச் சேவை நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயல்படவில்லை.

ந்தியப் பங்குச் சந்தையில் முந்தைய வாரத்தில் காளைகளின் உறுதியான உந்துதலை நாம் கண்டோம். அது நிஃப்டி புள்ளிகளை 10000-க்கு மேல் தீர்க்கமாகக் கொண்டு செல்ல உதவியது.

மேலும், இந்த வாரம் பல நாள்கள் ஏற்றத்தில் காணப்பட்டது. வியாழக்கிழமை காலையில் அதிக இறக்கத்துடன் காணப்பட்டாலும், வர்த்தக முடிவில் அதிக இறக்கம் இல்லாமல் ஏப்ரல் இறுதி உச்சத்தைவிட சற்று அதிக புள்ளிகளில் நிறைவுபெற்றது. இவ்வளவுக்கும், நிஃப்டியால் டெக்னிக்கல்ரீதியாக இறக்கத்திலிருந்து சரியாக 0.618 ஏற்றம்கண்டு பெரிய சரிவை மீட்டெடுக்க முடிந்திருக்கிறது. அந்த நிலை மிகவும் நன்கு அறியப்பட்டதால், அந்த நிலையில் சில விற்பனை நடந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

உண்மையில், அந்த விற்பனை மிகவும் வலிமையாகத் தோன்றியது. ஆனால் அதற்குப் பின்னர் வந்த வர்த்தக தினத்தில் அது தொடரவில்லை.

இப்போது, இது இந்தியப் சந்தைகளில் ஒரு பொதுவான சூழ்நிலையாக மாறியுள்ளது. காரணம், ஊரடங்கு முடக்கத்தால் பல புதிய வர்த்தகர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள். இதனால், நாள் வர்த்தகம் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் அதிக மூலதனம் இல்லாத வர்த்தகர்கள். எனவே, சாதகமற்ற நகர்வுகளைச் சமாளிக்கும் அவர்களின் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக அவர்களில் பலர் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பங்குகள்
பங்குகள்

இது சந்தையில் மீண்டும் லிக்விடிட்டியை அதிகரிக்க வழிவகுக்கிறது. அதோடு, பொசிஷன் இல்லை என்பதால், அடுத்த நாளில் எந்தவொரு பின்தொடர்தல் நடவடிக்கையும் இல்லை.

சந்தையின் போக்கை பின்பற்றித் தொடர்ந்து வருபவர்களுக்கு இது மிகவும் குழப்பமானதாகி விடுகிறது. ஏனெனில், இது இயல்பாக இருந்தால், தொடர்ந்து இயங்குவதற்கான சென்டிமென்ட்டை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால், இங்கே முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சென்டிமென்ட்டுகளில் விரைவான மாற்றங்களைக் காண்பிக்கும் சந்தையைக்கொண்டிருக்கிறோம். மேலும் ஆபரேட்டர்கள் இதை வலுவாகப் பயன்படுத்துகிறார்கள் போலவும் தெரிகிறது.

கடந்த வாரத்தில் காணப்பட்ட மற்றொரு அம்சம் 21500 புள்ளிகளில் மூன்று மாத காலமாக ஒருங்கிணைப்பிலிருந்து பேங்க் நிஃப்டி பிரேக்அவுட் ஆகியிருப்பது. அதேநேரத்தில், பிரேக்அவுட் ஒரு நாளைக்கு மேல் நீடிக்க முடியவில்லை. மீண்டும் இறக்கம் காண ஆரம்பித்தது.

வங்கிப் பங்குகளுக்கு காளைகள் ஊக்கம் அளிக்கவில்லை. மேலும், பேங்க் நிஃப்டி இறக்கத்திலிருந்து 38% மட்டுமே ஏற்றம் கண்டிருக்கிறது.

பங்குகள்
பங்குகள்

நிஃப்டி குறியீட்டுடன் ஒப்பிடும்போது நிதிச் சேவை நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயல்படவில்லை. சந்தை பலவீனமாகும் போது, வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனப் பங்குகள் மீண்டும் அழுத்தத்துக்கு வரக்கூடும்.

பயோகான் (BIOCON)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.404.30.

நிதானமாக மற்றும் நிலையான செயல்திறன்கொண்ட பார்மா நிறுவனப் பங்கு பயோகான். நீண்டகால ரெசிஸ்டன்ஸ் ரூ.360-–ஐ உடைத்து பங்கின் விலை ரூ.400 என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது. இறங்கியதிலிருந்து ஏற ஆரம்பித்திருக்கிறது. சில மாதங்களில் பங்கின் விலை ரூ.450-க்கு உயரக்கூடும். ஸ்டாப் லாஸ் ரூ.380 வைத்துக்கொள்ளவும். ஸ்டாப்லாஸ் நிலை வரைக்கும் விலை இறங்கினாலும்கூட வாங்கிச் சேர்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஜே.கே சிமென்ட் (JKCEMENT)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.1,397.05

சிமென்ட் பங்குகளில் சிறிது காலமாக விலை உயர்ந்துவரும் பங்காக ஜே.கே சிமென்ட் உள்ளது. அதன் விலைப்போக்கு மிகவும் வலுவாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகு இறக்க ஆரம்பித்தது. தற்போது மார்ச் மாத இறக்கத்திலிருந்து வலிமையாக ஏற்றம் கண்டுவருகிறது. தற்போது சந்தையில் சிமென்ட் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருப்பதோடு உற்பத்தித்திறனிலும் சிறப்பாக உள்ளது. தற்போதைய விலையில் முதலீட்டு நோக்கில் வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,500-க்கு உயரக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.1,350 வைத்துக்கொள்ளவும்.

வெஸ்ட்லைஃப் டெவலப்மென்ட் (WESTLIFE)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.318.70.

மெக்டொனால்ட்ஸ் (McDonalds) அனைவருக்கும் பிரபலமான பெயர். வெஸ்ட் லைஃப் இதன் ஃப்ரான்சைஸ் எடுத்து நடத்துகிறது. பங்கின் விலை கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் சிறிது ஏற ஆரம்பித்தது. ஆனால், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பங்கின் விலை இறங்க ஆரம்பித்தது. சில காலம் பங்கின் விலை அதிக ஏற்றம் மற்றும் இறக்கம் இல்லாமல் ஓர் ஒருங்கிணைப்பு நிலையில் காணப்பட்டது. இப்போது பங்கின் விலை மீண்டும் ஏற ஆரம்பித்திருக்கிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகியகாலத்தில் ரூ.350-க்கு உயரக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.300.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.