Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
முந்தைய வாரத்தின் வலுவான உயர்வுக்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து முன்னேறியது. இந்தப் புதிய வேகம் நிஃப்டி 10000 புள்ளிகளைத் தாண்ட உதவியது. இந்த வகையான ஏற்றம் எதிர்பார்க்கப்படவில்லை என்பதுடன், அசாதாரண வேகத்திலும் சந்தை உயர்ந்திருக்கிறது.

வங்கிப் பங்குகளின் வலுவான மீள் எழுச்சியால் குறியீட்டு எண் உயர்ந்தது. குறிப்பாக, பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆகிய இரண்டு முக்கியமான குறியீடுகளும் ஏப்ரல் மாத அதிகபட்சப் புள்ளிகளைக் கடந்திருக்கின்றன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்தை ஏற்றப் போக்கில் தொடர்ந்ததால், ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளும் இந்த உயர்வில் இணைந்தன.

முதலீட்டாளர்களின் சென்டிமென்ட் வலுவான முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது. சந்தையின் பரந்த ஏற்றமும், விலை ஏற்றமும் ஆதிக்கம் செலுத்தியதால், சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகம் அதிகமாகத் தெரிந்தது. `ஒரு புதிய காளைச் சந்தை நடைமுறைக்கு வருகிறதா...’ என்று முதலீட்டாளர்கள் கேட்கத் தொடங்கினர்.

இந்த நடவடிக்கையை, `புதிய சாதகமான போக்கு’ என்று அழைக்க விரும்பவில்லை. ஏனென்றால், முந்தைய காளைச் சந்தையின் நீளத்துடன் ஒப்பிடும்போது இறக்கத்துக்கான நேரம் மிகக் குறைவு. அதேநேரத்தில், இது ஒரு வலுவான உயர்வு என்றாலும், இது ஒரு சரியான உயர்வு என்று நாங்கள் நம்புகிறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிஃப்டி புள்ளிகள் இப்போது இறக்கத்திலிருந்து 50% ஏற்றத்தைத் தாண்டியிருக்கின்றன. 62% ஏற்றம் என்பது நிஃப்டி 10500 நிலைகளில் காணப்படுகிறது. ஏற்றத்தின் வேகத்தைத் தக்கவைக்க முடிந்தால் இது நிகழலாம்.

பங்குகள்
பங்குகள்

இந்தச் சந்தை ஏற்ற நடவடிக்கையின் பெரும்பகுதி ரிலையன்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. ஆனால், `இப்போது உரிமைப் பங்கு வெளியீடு முடிவடைந்துள்ள நிலையில், நிஃப்டி குறியீடு தொடர்ந்து ஏற முடியுமா...’ என முதலீட்டாளர்கள் கேட்கக்கூடும்.

சந்தை ஏற்றத்தில் வங்கிகளும், நிதிச் சேவை நிறுவனப் பங்குகளும் சிறப்பாகச் செயல்பட்டன. ஆனால், அவை மட்டுமே இப்போது ஏற்றத்தின் போக்கில் உள்ளன.

சந்தை ஏற்றத்தில் இருந்தபோதிலும், மே மாதத்தில் நிதிச் சேவை நிறுவனப் பங்குகள் ஒரு பெரிய இழப்பைப் பதிவு செய்தன. எனவே, நிஃப்டி ஏற்றத்துக்குப் பங்களிக்கும் அந்தப் பங்குகளின் திறனும் குறைவாகவே இருக்கலாம். ஆகவே, சந்தை தற்போதைய நிலையில் தொடர்ந்து முன்னேறுவது மிகவும் கடினமாக இருக்கலாம் என்பது எங்கள் நம்பிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பிட்ட சில பங்குகளை வாங்குவது மற்றும் அவற்றில் வர்த்தகம் செய்வது என்ற அணுகுமுறையை ஒருவர் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியும். என்றாலும், அதிக வர்த்தக இழப்புகள் ஏற்படாமல் ஸ்டாப்லாஸ் நிர்ணயித்துக்கொண்டு செயல்படுவது அவசியம். இண்டிகேட்டர்கள் அதிகப்படியாக வாங்கிய சூழ்நிலையைக் காட்டுகின்றன. எனவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்புளோரேஷன் கம்பெனி (HINDOILEXP)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.59.30.

சமையல் எரிவாயு நிறுவனப் பங்குகளுக்கு தேவை ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று, மிகப் பழைமையான நிறுவனப் பங்கான ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்புளோரேஷன் கம்பெனி. அதிக இறக்கத்துக்குப் பிறகு அதன் போக்கு மாறுவதாகத் தெரிகிறது. பங்கின் விலை ரூ.125-லிருந்து ரூ.30 வரைக்கும் இறக்கம் கண்டது. அந்த இறக்கத்திலிருந்து ஏற்றம் கண்டு வருகிறது. தொடர்ந்து ஏறும் நிலை காணப்படுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போதைய விலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.49 வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.75-க்கு உயரக்கூடும்.

காதிம் இந்தியா (KHADIM)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.134.30

நீண்டகாலமாக இறக்கத்திலிருந்த பங்குகளில் சில புத்துயிர் பெறுவதற்கான பருவமாக இது தோன்றுகிறது. அவற்றில் காலணித் தயாரிப்பு நிறுவனமான காதிம் இந்தியா லிமிடெட் உள்ளது. காலணித் தயாரிப்பு நிறுவனப் பங்குகள் பல (ரிலாக்ஸோ, லிபர்ட்டி, பாட்டா போன்றவை) சந்தையில் நன்றாகவே செயல்பட்டுவருகின்றன.

காதிம் நிறுவனப் பங்கு விலை பட்டியலிடப்பட்ட பிறகு நீண்டகாலமாக இறக்கத்தில், அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒருங்கிணைப்பு நிலையிலேயே காணப்பட்டது.

தற்போது இந்தப் பங்கு திடீரென அதிகம் வாங்கப்பட்டுவருகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.125 வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.190-200-க்கு உயரக்கூடும்.

தாம்பூர் சுகர் (DHAMPURSUG)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.108.20.

சர்க்கரைப் பங்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஒருசில முன்னணி நிறுவனப் பங்குகள் வர்த்தகர்கள் மற்றும் குறுகியகால முதலீட்டாளர்களின் வாங்கும் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

சமீபத்திய சந்தை ஏற்றத்தின்போது தாம்பூர் சுகர் நிறுவனப் பங்கின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. மேலும், சமீபத்திய ஸ்விங் உயர்வைக் கடந்த பிரேக்அவுட்களை நிலைநிறுத்தத் தயாராக உள்ளது. பங்கில் மொமன்டம் மேம்பட்டுள்ளது மேலும் அதிக விலை ஏற்றத்துக்கு வழிவகுக்கும்.

தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.100 வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.135-க்கு உயரக்கூடும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism