Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

பேங்க் நிஃப்டியின் தற்போதைய முயற்சியில் ஏற்பட்டிருக்கும் தோல்வி, சாத்தியமான இறக்கம் இருப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம்!

டந்த வாரத்தில், “தற்போதைய நிலையில் இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து முன்னேறுவது மிகவும் கடினமாக இருக்கலாம் என்பது எங்கள் நம்பிக்கை. குறிப்பிட்ட பங்குகளை வாங்குவது மற்றும் அவற்றில் வர்த்தகம் செய்வது என்ற அணுகுமுறையை ஒருவர் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

என்றாலும், அதிக இழப்புகள் ஏற்படாமல், ஸ்டாப்லாஸ் நிர்ணயித்துக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். பங்குகள் அதிகப்படியாக வாங்கிய சூழ்நிலையை இண்டிகேட்டர்கள் காட்டுகின்றன. எனவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என்று எழுதியிருந்தோம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிஃப்டி புள்ளிகள் திங்கள்கிழமை அன்று அதிகபட்ச புள்ளிகளுக்கு அருகில் வர்த்தகத்தைத் தொடங்கின. அதே நாளில் தற்போதைய ஊசலாட்டத்துக்கான உயர்வை நிஃப்டி பதிவு செய்தன. அதன் பின்னர் மீதமுள்ள வர்த்தக தினங்களில் வியாழன் வரை குறைந்துவந்தது. வியாழக்கிழமை நிஃப்டி வாராந்தர எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி குறியீடுகளின் ஏற்றத்தை பாதித்தது மற்றும் காளைகளால் நன்கு பாதுகாக்கப்பட்டுவந்த நிஃப்டியின் 10000 நிலை, அந்த நாளில் 9900 அளவுக்கு இறக்கம் கண்டது. பல பங்குகளின் விலை குறைந்தது. இவ்வாறு காளைகளின் கோட்டைகள் தகர்க்கப்பட, இப்போது அந்த ஏற்றம் முடிவடைந்து, ஒரு கரெக்‌ஷன் (இறக்கம்) தொடங்கும் சூழல் காணப்படுகிறது. நிஃப்டி புள்ளிகள் 9800 நிலைகளுக்குக் கீழே குறையும்போதுதான் இதை நாம் உறுதி செய்துகொள்ள முடியும். ஏனெனில், விளக்கப்படத்தில் காட்டப்பட்டுள்ள பிட்ச்ஃபோர்க் சேனல் (Pitchfork Channel) மீறப்படும். இது சமீபத்திய ஏற்றம் முடிவுக்கு வரப்போகிறது என்பதையே காட்டுகிறது.

பங்குகள்
பங்குகள்

நிஃப்டி போல பேங்க் நிஃப்டியும் ஏற்றத்தின் போக்குக்குச் செல்ல முடியாமல் போனதுடன், 21400 நிலைகளுக்கு அருகில் வந்ததும், விற்பவர்கள் திரும்பிவந்ததால் இறக்கம் கண்டது. இந்த நிலை இப்போது, இந்த ஆண்டு மார்ச் நடுப்பகுதியில் இருந்த பேங்க் நிஃப்டி நிலைக்கு முன்னேறத் தடையாகச் செயல்பட்டுள்ளது.

பேங்க் நிஃப்டியின் தற்போதைய முயற்சியில் ஏற்பட்டிருக்கும் தோல்வி, சாத்தியமான இறக்கம் இருப்பதாகவே எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மற்ற நிதிச்சேவைக் குறியீடும், பி.எஸ்.யூ மற்றும் தனியார் வங்கிகளுக்கான குறியீடுகளும் பலவீனமான ஏற்றத்தில் காணப்படுகின்றன. இங்கிருந்து அவை இறங்கக்கூடும். ஒட்டுமொத்தமாக நிதிச் சேவைக் குறியீடுகள் அடுத்த முறை வங்கியை வழிநடத்தக்கூடும் என்று தெரிகிறது.

பங்குகள்
பங்குகள்

கடந்த வாரத்தில், “சந்தையின் இந்த ஏற்ற நடவடிக்கையை ஒரு புதிய பாசிட்டிவ்வான போக்கு என்று நாங்கள் அழைக்க விரும்பவில்லை. ஏனெனில், முந்தைய காளை சந்தையின் நீளத்துடன் ஒப்பிடும்போது, இறக்கத்தின் காலம் மிகக் குறைவு’’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிஃப்டி மற்றும் குறிப்பாக பேங்க் நிஃப்டியின் இந்த உயர்வு சரியான ஏற்றத்தின் அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது. இப்போது அந்த ஏற்றம் முடிந்ததா இல்லையா என்பது மட்டுமே முக்கியக் கேள்வியாக இருக்கிறது. முதலீடுகளைத் தக்கவைப்பதற்கும், புதிய முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கவும் இது சரியான நேரமாக இருக்கலாம்.

பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ் (BEPL)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.46.35.

இதற்கு முன்னர் ஆக்டிவ்வாகச் செயல்பட்ட பங்குகள் புத்துயிர் பெறும் நேரமாக இது இருக்கிறது. அது போன்ற ஒரு பங்குதான் பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர்ஸ்.

பங்கின் விலைப் போக்கின் விளக்கப்படம் சமீபத்தில் உயர்ந்த அடிப்பகுதியை (Higher Bottom) உருவாக்குவதையும், இப்போது அங்கிருந்து புறப்படுவதையும் வெளிப்படுத்துகிறது.

நல்ல மொமென்டம் மற்றும் அதிக வால்யூம் காணப்படுவதால், பங்கின் விலை ஏற்றத்தின் போக்கில் இருக்கிறது எனலாம்.

தற்போதைய விலையில் வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ.40 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.60.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஃப்யூச்சர் ரீடெய்ல் (FRETAIL)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.109.60.

ஃப்யூச்சர் ரீடெய்ல் பங்கு விற்பனைக்குப் புத்துயிர் நேரம் நெருங்கிவிட்டது. இதற்கு முன்னர் பங்கின் விலை தொடர்ந்து இறக்கம்கண்டது. ரூ.60 வரைக்கும் இறங்கி, அதன் பிறகு மெதுவாக ஏற்றம் கண்டுவருகிறது.

இந்தக் குழுமம், தங்கள் காப்பீட்டு வணிகத்திலிருந்து வெளியேறக்கூடும் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இது சந்தையில் இந்தப் பங்குக்கு ஆதரவைப் பெறுவதாகத் தெரிகிறது. ஏனெனில், இது குழும நிறுவனங்களுக்கு மிகவும் தேவையான பணப்புழக்கத்தைத் தரக்கூடும்.

தற்போதைய விலையில் வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ.95 வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.130-135.

டாடா எலெக்ஸி (TATAELXSI)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.889.55.

தொழில்நுட்பத்துறைப் பங்குகள் சற்று அழுத்தத்தில் இருக்கின்றன. ஆனால், விலை ஏறுவதற்கான முயற்சியைக் காட்டும் பங்குகளில் ஒன்று டாடா எலெக்ஸி.

பங்கு விலை நீண்டகால மூவிங் ஆவரேஜுக்கு மேலே வந்திருக்கிறது.

ரூ.910-க்கு மேல் வெற்றிகரமான பிரேக்அவுட் இருந்தால் இது வாங்குவதற்கான ஒரு பரிந்துரையாகும்.

அது நடந்தால், ஒருவர் ரூ.895 ஸ்டாப்லாஸ் வைத்து முதலீடு செய்யலாம். இலக்கு விலை ரூ.1,100.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.