Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

சந்தையின் உண்மையான நோக்கம் ஏற்றமா, இறக்கமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

சந்தையின் உண்மையான நோக்கம் ஏற்றமா, இறக்கமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்தியப் பங்குச் சந்தையின் ஆரம்பம் திங்கள் கிழமை அன்று மோசமாக இருந்தது. இதற்குக் காரணம், அன்று காலையில் அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீடான டவ் ஜோன்ஸ் இறக்கம் கண்டதுதான். சந்தை அதிக இறக்கத்தைச் சந்திக்கும் என்பதுபோல அன்று தோற்றமளித்தது.

`பங்குகள் விலை நல்ல இறக்கம் காணும்; முதலீடு செய்யலாம்’ எனப் பலரும் காத்திருந்தார்கள். ஆனால், மாலையில் சந்தை நன்றாக ஏறி முடிந்தது. காலையில் இறக்கத்தில் வாங்கிய டிரேடர்கள் இரு கை நிறைய லாபத்துடன் சென்றிருப்பார்கள்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாரம் முழுக்க நிலையற்றதன்மை (அதிக ஏற்ற இறக்கம்) ஓர் பெரிய அம்சமாக இருந்தது. சந்தையின் உண்மையான நோக்கம் ஏற்றமா, இறக்கமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இருபுறமும் (ஏற்றம் மற்றும் இறக்கம்) உள்ள இடைவெளிகள் ஒரு முக்கிய அம்சமாக இருந்தன. பங்கு வர்த்தகர்கள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் தூக்கி எறியப்பட்டனர்.

இந்த வகையான விரைவான மற்றும் வேகமான இயக்கம் ஒன்றைத் தெரிவிக்கிறது. அதாவது, முற்றிலும் புதிய நபர்களால் சந்தை வசப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. எப்படியிருந்தாலும், போக்குகள் நாளுக்கு நாள் வேகமாக மாறி வருவதால், நிச்சயமாகத் தொடர்ந்து மேலே செல்வது மிகவும் கடினம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியா-சீனா எல்லைப் போரால் வியாழக்கிழமை அன்று காலையில் இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தில் காணப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை நிஃப்டி எஃப் அண்ட் ஓ வார எக்ஸ்பைரி என்பதால், புதிய அப்சைட் பொசிஷன்கள் உருவாக்கப்பட்டன. இதனால், நிஃப்டி மீண்டும் 10000 புள்ளிகளைத் தாண்டியிருக்கிறது. வியாழக்கிழமை 1091 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது.

பங்குகள்
பங்குகள்

இப்போது இந்த மண்டலம் ஒரு சப்ளை மண்டலமாக நிறுவப்பட்டுவருகிறது. எனவே, இங்கு விலை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம். இதேபோல், பேங்க் நிஃப்டியும் கடந்த சில மாதங்களாக 21000-க்கு அருகில் உள்ளது. இந்த ரெசிஸ்டன்ஸ் பகுதிகளுக்கு மேலாக நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி குறியீடுகள் இயங்கிவந்தால், வால்யூம் இருந்தால் ஏற்றத்தின் போக்கு தொடரக்கூடும்.

குறியீடுகள், மாற்றியமைக்கப்பட்ட பிட்ச்ஃபோர்க் சேனலுக்குள் (Pitchfork Channel) இருக்கும் இயக்கத்தை விளக்கப்படம் காட்டுகிறது.

கீழ்நிலை சேனல், அண்மையில் உருவாக்கப்பட்ட லாங் பொசிஷன்களுக்கு ஸ்டாப்லாஸாகப் பராமரிக்க வேண்டும்.

தற்போது இது கிட்டத்தட்ட 9650-9700 மண்டலத்தில் இருக்கிறது. சமீபத்திய இறக்கம் இந்த நிலை நன்றாகப் பாதுகாக்கப்படுவதைக் காட்டுகிறது. பிட்ச்ஃபோர்க்கின் சராசரி லைன் ரெசிஸ்டன்ஸாக இருக்கிறது. அது இப்போது 10400 நிலைகளைச் சுற்றியுள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

சோழ மண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி (CHOLAFIN)

தற்போதைய விலை ரூ.178.

வாங்கலாம்.

இந்தப் பங்கு விலை விளக்கப் படத்தில், ஒரு தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நிலைக்குப் பிறகு பிரேக்அவுட் நோக்கிச் செல்வது தெரிகிறது. பங்கின் விலை நீண்ட காலமாக அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் காணப்பட்டது. அதே நேரத்தில், மார்ச் மாதம் பங்கு விலை அதிகமாக இறக்கம்கண்டது. பிரேக்அவுட் நடந்த இந்த இறக்கத்திலிருந்து ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்கத்திலிருந்து 38% ஏற்றம் கண்டால், பங்கின் விலை ரூ.205-க்கும், 50% ஏற்றம் கண்டால் பங்கின் விலை ரூ.233-க்கும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ. 167 வைத்துக்கொள்ளவும்.

வேதாந்தா (VEDL)

தற்போதைய விலை ரூ.107.

வாங்கலாம்.

அதிக இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம் கண்டுவரும் மற்றொரு பங்கு இது. பங்குகளை நிறுவனம் திரும்ப வாங்கும் (Buyback) அறிவிப்பை வெளியிட்டபோது நாம் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தோம். அதன் பிறகு இந்தப் பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம்கண்டு வந்தது.

தற்போதைய நிலையில் பங்கின் விலை மேலும் உயரக்கூடும். தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.100 வைத்துக் கொள்ளவும். குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.120-125-க்கு உயரக்கூடும்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HINDPETRO)

தற்போதைய விலை ரூ.222.90.

வாங்கலாம்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்கின் விலை வரைபடத்தில் தெளிவான இரட்டைக் கீழ் நிலை (Double Low) ரூ.165-ல் உருவாகியிருக்கிறது. இந்தப் பங்கின் விலை சமீபத்தில் மிகக் குறைந்த அளவிலிருந்து ஏற ஆரம்பித்திருக்கிறது.

பங்குகள்
பங்குகள்

இப்போது வாராந்தர வரைபடத்தில் மேல்நிலை ரெசிஸ்டன்ஸ் டிரெண்ட் லைனைக் கடந்துவிட்டது. நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவு மோசமாக வந்திருக்கிறது. அதற்கும் சேர்த்து ஏற்கெனவே விலை இறங்கிவிட்டது.

எனவே, பங்கின் விலை ஏற்றத்தின் போக்குக்கு மாறியிருக்கிறது. தொடர்ந்து ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பங்கை, தற்போதைய விலையில் வாங்கலாம். குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.250-க்கு உயரக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.215 வைத்துக்கொள்ளவும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.