Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் திங்கள்கிழமை தொடங்கிய விதம், அந்த வாரம் எவ்வாறு முடிவடையும் என்பது குறித்து எந்த அறிகுறியையும் காட்டவில்லை.

முதல் இரண்டு வர்த்தக தினங்களில் மந்தமான வர்த்தகம் நடந்தது. பெரும்பாலான டிரேடர்கள் எஃப் அண்ட் ஓ நிறைவு வரை சில மந்தமான இறக்கங்களுக்குத் தயாராகி வந்தனர்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டிரேடர்களின் நிதி கணிசமான அழுத்தத்தில் இருந்தது. அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று தோன்றியது. எனவே, பங்குகளில் நிறைய சார்ட்டுகள் சேர்ந்தன.

ஆபரேட்டர்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டதுடன், பெரிய நிறுவனப் பங்குகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிகிறது. அவர்கள் பேங்க் நிஃப்டியில் குறிப்பாக, ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மற்றும் எஸ்.பி.ஐ போன்றவற்றில் இந்தத் தந்திரத்தைச் செய்தனர்.

கடந்த வாரத்தில், “நிஃப்டி 9000-க்குக் கீழே ஏற்பட்டிருக்கும் சரிவு என்பதை ஏற்றத்தின் போக்குக்கு மாற்றினால் 9300-9400 நிலைகளில் இருக்கக்கூடும்” என்று எழுதியிருந்தோம். ஆனால், மே மாதத்தின் மத்தியில் ஏற்பட்ட இடைவெளியைத் தள்ளி, தொடர்ந்து உயரக்கூடிய அளவுக்கு இந்த உயர்வு வலுவாக இருந்தது. மே மாத எஃப் அண்ட் ஓ முதிர்வு வலுவான ஒன்று.

இப்போது எழுந்திருக்கும் கேள்வி என்னவென்றால், இந்த ஏற்றம் தொடர்ந்து தொடருமா என்பது. நிஃப்டி இறக்கத்திலிருந்து 38% மீண்டிருக்கிறது. அடுத்த நிலை 50%. இதை ஏப்ரல் மாத இறுதியில் நாம் சோதித்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்கு முன்னர் அது தொலைவில் இருப்பதாகத் தோன்றியது. ஆனால், இப்போது திடீரென்று அணுகக்கூடியதாகத் தெரிகிறது! இது சந்தைகளால் உருவாக்கப்பட்டதேயாகும். சமீபத்தில் சாத்தியமற்றதுபோல் தோன்றியது, திடீரென்று முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தை ஏற்படுத்துவதாக பங்குச் சந்தை இருக்கும்.

வாங்கலாம்...
விற்கலாம்
வாங்கலாம்... விற்கலாம்

உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து வரும் கொரோனா பற்றிய செய்தி ஓட்டத்தைப் பொறுத்தே சந்தையின் போக்கு இனி அமையும். இது எப்படியிருக்கும் என்று முன்கூட்டியே சரியாகக் கணிப்பது கடினம்.

வாரத்தின் கடைசி இரண்டு வர்த்தக தினங்களை வைத்துப் பார்க்கும்போது, முதலீட்டாளர்களின் சென்டிமென்ட், இறக்கத்தில் மீண்டும் வாங்குவதற்கு மாறியிருக்கிறது. காலாண்டு நிதிநிலை அறிவிப்புகள் வெளியாவது விரைவில் முடிவுக்கு வருகிறது. சந்தையை ஒளிரச் செய்வதற்கு இதுவரை எதுவும் இல்லை. ஆனால், மிகவும் மோசமான ஒன்றும் வரவில்லை. இதை நினைத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வரும் வாரத்தில் குறிப்பிட்ட பங்குகளின் விலை நகர்வுகள் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பல பங்குகள் தற்போது ஆக்டிவ்வாக இருப்பதால் டிரேடர்கள் வர்த்தகத்தில் சுறுசுறுப்பாக இறங்கத் திட்டமிடலாம்.

நெஸ்கோ (NESCO)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.445.65.

மும்பையில் கண்காட்சி இடங்களை வாடகைக்குவிடும் சந்தையில் ஒரு முக்கிய நிறுவனம். சில நல்ல செய்திகளை எதிர்பார்த்து, வர்த்தகர்களால் இந்தப் பங்கு அதிகமாக வாங்கப்படுகிறது. வியாழக்கிழமை திடீரென பங்கு விலை மேல்நோக்கி சுமார் 14% ஏற்றம் கண்டிருப்பது, சமீபத்திய வீழ்ச்சியைத் தலைகீழாக மாற்றப்படுவதற்கான சாத்தியமான போக்குக்கு வழிவகுத்தது.

பங்குகள்
பங்குகள்

தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.420-க்குக் கீழே ஸ்டாப்லாஸ் பராமரிக்கவும். குறுகியகாலத்தில் ரூ.530-க்கு உயரக்கூடும்.

பாலாஜி அமின்ஸ் (BALAMINES)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.408.55.

ரசாயன பங்குகளுக்குச் சந்தையில் தொடர்ந்து தேவை இருந்துகொண்டிருக்கிறது. இதில், வலுவான பங்குகளில் பாலாஜி அமின்ஸ் ஒன்று.

பாலாஜி அமின்ஸ் பங்கின் விலை இறக்கத்துக்குப் பிறகு, சார்ட்டில் ஒரு நல்ல விலை உருவாக்கத்தைக் காட்டுகிறது. சார்ட்டில் இரட்டை இறக்கம் உருவாகியிருக்கிறது. தற்போது பங்கின் விலை பிரேக்அவுட் ஆகி ஏற்றத்தின் போக்குக்கு மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மூவிங் ஆவரேஜ் இண்டிகேட்டர்கூட சுட்டிக்காட்டுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.395 வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் ரூ.450-க்கு உயரக்கூடும்.

டால்மியா பாரத் (DALBHARAT)

வாங்கலாம்.

தற்போதைய விலை ரூ.560.90.

சிமென்ட் பங்குகள் மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. லார்ஜ்கேப் பங்குகள் விலை உயர்ந்த பிறகு, மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் திருப்பமாகத் தெரிகின்றன.

டால்மியா சிமென்ட் நிறுவனப் பங்கின் வால்யூம் நல்ல அளவைக் கண்டுள்ளது. இப்போது சமீபத்திய ஸ்விங் உயர்விலிருந்து, விலை ஏற்றம் மூவிங் ஆவரேஜுக்கும் மேலாக ஒரு நல்ல இடைவெளியைக் கொண்டிருக்கிறது.

தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.395 வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் ரூ.650-675-க்கு உயரக்கூடும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.