Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

டந்த வாரம், ‘கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமெங்கும் பரவும் நிச்சயமற்ற தன்மையே தற்போது அனைவரையும் பயமுறுத்துவதாக இருக்கிறது;

தெரியாத ஒன்றின் மீதான பயம்தான் கரடியின் போக்கை சந்தையில் ஏற்படுத்திவிடுகிறது; இந்த மாதிரியான சூழலைக் கையாள்வது மிகவும் கடினம்’ என்று குறிப்பிட்டிருந்தோம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாரத்தின் தொடக்கத்தில் சந்தை சிறிது மேல்நோக்கி நகர முயன்றது. ஆனால், முயற்சி விரைவிலேயே தோல்வியில் முடிந்ததும், குறுகியகால முதலீட்டாளர்கள் அனைவரும் வெளியேறினார்கள். அதன் பிறகு யாரும் பங்குகளை வாங்க முன்வராததால், சந்தை மீண்டும் பெரிய சரிவைச் சந்தித்தது. கொரோனா வைரஸ் குறித்த செய்திகள் நாம் எதிர்பார்த்ததைவிட அதிக வேதனையளிப்பதாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நம் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.

பங்குகள்
பங்குகள்

இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும்போது, இந்தப் பிரச்னை மேலும் மோசமான சூழலை எதிர்கொள்ளும். இந்த வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நோய் எதிர்ப்புசக்தி கொண்டவர்கள் என நம்மைக் கருதினோம். ஆனால் அது உண்மையல்ல என்பது தெரியவந்திருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறுவது இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பும் சரிவைச் சந்தித்தது. இத்தகைய பாதகமான செய்திகள் சந்தையைப் பெரிதும் பாதித்தன. அதனால் வெள்ளிக்கிழமை அன்று காலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன.

சிறிய அளவிலான முதலீடு மற்றும் பைபேக் செய்பவர்கள், வாரத்தின் இடையே கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த இறக்கத்தைப் பலரும் முதலீட்டுக்கான வாய்ப்பாகத் தொடர்ந்து கருதினாலும்கூட, மிக நீண்டகால முதலீட்டாளர்கள் மட்டுமே முதலீடு செய்வதற்கு முன்வருவதைப் பார்க்க முடிகிறது. சிறு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் குறுகியகால முதலீட்டாளர்களாக இருப்பதால் அவர்கள் சந்தையிலிருந்து வெளியேறினார்கள். கொரோனா வைரஸின் தாக்கம் எப்படியிருக்கப் போகிறது, அது உலக பங்குச் சந்தைகளில் எப்படி எதிரொலிக்கப்போகிறது என்பதைப் பொறுத்துதான் சந்தை மீண்டுவரும் சூழல் காணப்படுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வரும் வாரத்துக்கு முதலீட்டாளர்களுக்கான அறிவுரை, கிட்டத்தட்ட கடந்த வாரத்தில் சொல்லப்பட்டதைப்போலத்தான் இருக்கும். ‘வர்த்தகத்தைப் பொறுத்தவரை சற்று ஒதுங்கி, கவனமாக இருக்க வேண்டும். சிறிய அளவிலான முதலீடு மற்றும் பைபேக் செய்பவர்கள், வாரத்தின் இடையே கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம். நீண்டகால முதலீட்டாளர்கள் மற்றும் வேல்யூ முதலீட்டாளர்கள் தற்போது முதலீடு செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிரானூல்ஸ் இந்தியா (GRANULES)

தற்போதைய விலை: ரூ.171.45

வாங்கலாம்.

அண்மைக் காலமாக, இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு இறக்கத்தில் இருந்துவருகிறது. ஆனால், இந்தப் பங்கின் விலை ஏற்றத்தில் இருந்துவருகிறது. படிப்படியாக ஏற்றத்தைச் சந்தித்து வந்த பங்கின் விலை, இனி வேகமெடுக்கும் என்பதை இந்தப் பங்கின் விலை வரைபடம் சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 165 ரூபாய். குறுகியகாலத்தில் இதன் விலை 195 ரூபாய்க்கு உயரக்கூடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஐ.ஓ.எல்.சி.பி (IOLCP)

தற்போதைய விலை: ரூ.256.55

வாங்கலாம்.

இந்தப் பங்கு தொடர்பாக வெளிவந்த பாசிட்டிவ் செய்திகளால் பங்கின் விலை 315 ரூபாய் வரை ஏற்றம்கண்டது. ஆனால் கொரோனா வைரஸ் பதற்றம் காரணமாக, அரசாங்கம் ஏற்றுமதிக்கு சில நிபந்தனைகளை விதித்தது. இதில் இந்த நிறுவனத்தின் பொருள்கள் ஏற்றுமதியும் பாதிப்புக்குள்ளானது. இதனால் பங்கின் விலை குறைந்தது. முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளை தொடர்ந்து விற்பதாலும், பங்கின் விலை இறங்குமுகத்தில் இருக்கிறது. இது முதலீடு செய்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பு. தற்போதைய விலையில் வாங்கலாம். வரும் வாரங்களில் 300 ரூபாய் வரை போகலாம். ஸ்டாப்லாஸ் ரூ.248.

துவார்கேஷ் சுகர் (DWARKESH)

தற்போதைய விலை: ரூ.24.60

வாங்கலாம்.

சர்க்கரைப் பங்குகளுக்கு பங்குச் சந்தையில் நல்ல தேவை இருக்கிறது. ஆனால், தற்போதைய சந்தையின் இறக்கத்துக்கு இணையாக இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் இறங்கியது. இது முதலீட்டுக்கு ஏற்ற வாய்ப்பு. தற்போது உள்நுழைபவர்களுக்கு ரிஸ்க் அளவு குறைவு. நீண்டகால முதலீட்டு ஏற்ற பங்காக இதைக் கருதலாம். ஸ்டாப்லாஸ் 20 ரூபாய். குறுகிய காலத்தில் பங்கின் விலை 40 ரூபாய் வரை போகும் என எதிர்பார்க்கலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.