பிரீமியம் ஸ்டோரி
ந்த வாரத்தின் தொடக்கத்தை மிக மோசமானதாக நாம் கருதினால், கடந்த வாரத்தை என்னவென்று சொல்வது? முன்னெப்போதும் இல்லாத வரலாற்றுச் சரிவை சந்தித்திருந்தது இந்தியப் பங்குச் சந்தை.

மிக நீண்ட சரிவுகளோடு மிகவும் இறங்கியிருக்கிறது. பனிச்சரிவுபோல, அதிக அளவிலான விற்பனையால் கிட்டத்தட்ட அனைத்துப் பங்குகளும் இறக்கத்தைச் சந்தித்ததைப் பார்த்தோம். நம்மில் பலரும் இதே போன்ற வலுவான சரிவை 2008-ம் ஆண்டில் பார்த்திருப்போம். ஆனால், தற்போதுள்ள நிலையுடன் ஒப்பிட்டால், முந்தையது சற்றுக் கட்டுப்பாடானதாகவே தெரிகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

‘பொதுவாக, இத்தகைய ஒட்டுமொத்த வீழ்ச்சி, ஓர் இறுதிக்கட்டத்தைக் குறிக்கும். எனவே, தற்போதைய சரிவில் நாம் அடிமட்ட இறக்கத்துக்கு அருகே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது’ என்று சென்ற வாரம் எழுதியிருந்தோம். நாம் சொன்ன வரிகள் கிட்டத்தட்ட மிகச் சரியான ஒன்றுதான் என்பதையே முன்னெப்போதும் இல்லாத இந்த வீழ்ச்சி காட்டுகிறது.

மேலும், ‘இ.டி.எஃப்-கள் விற்பனை மிகப்பெரிய அளவில் நடக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் பங்குச் சந்தைகள் மேலும் மோசமான சூழலை அடையக்கூடும்’ என்றும் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், இது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சார்ட்டுகளும், பேலன்ஸ் ஷீட்டுகளும் வரலாற்றுத் தரவுகள் மற்றும் உண்மைகளை அடிப்படையாகக்கொண்டவை.

எனினும், தினமும் புதுப்புது வரலாறுகள் உருவாக்கப்படும் போது உண்மையில் எப்படித்தான் பகுப்பாய்வு செய்வது?
பங்குகள்
பங்குகள்

ஒருவர் பங்குகளை வாங்குவதற்குத் தயாராக இல்லாதபட்சத்தில், தற்போதிருக்கும் நிலை அடிமட்டமாக இருக்கும் என்பது பொருத்தமாக இருக்காது. மேலும், புதிய இறக்கங்களுக்குச் செல்லாதபடி தரகர்கள்தான் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற உண்மையை இந்த நேரத்தில் குறிப்பிடலாம்.

ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில் மார்ஜின்கள் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால், பங்குகளில் வர்த்தகம் செய்வது அதிக செலவு வைப்பதாக மாறியிருக்கிறது. தினசரி வர்த்தகம் பெரும்பாலான பங்குத் தரகர்களால் குறைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் சில நிதி வசதியுள்ள பங்குத் தரகர்கள் மற்றும் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமே சந்தையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

பங்குகள்
பங்குகள்

தற்போது கரடியின் போக்கு காணப்படுகிறது. இயல்பான வர்த்தகச் சந்தையாக மாறுவதற்குச் சிறிது காலம் எடுக்கக்கூடும். தற்போதுள்ள நிலையில் வெற்றிகரமாக வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கவனமாகப் பங்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.

கெடிலா ஹெல்த்கேர் (CADILAHC)

தற்போதைய விலை: ரூ.285.80

வாங்கலாம்.

பொதுவாக, பார்மா துறை சார்ந்த பங்குகள் பங்குச் சந்தை இறக்கத்தின்போது, அதிகம் இறங்காமலிருக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பால், பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும்போதும், பார்மா துறையின் முக்கிய பங்குகளில் ஒன்றான கெடிலா நிறுவனத்தின் பங்கு புதிய குறைந்தபட்ச விலைக்கு இறங்கவில்லை.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த வாரத்திலிருந்து இந்தப் பங்கை அதிகம் பேர் வாங்கிவருவது இதற்கு ஒரு முக்கியக் காரணம். முதலீட்டாளர்கள் வாங்குவது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப்லாஸ் 265 ரூபாய். இலக்கு விலை ரூ.310.

வெஸ்ட்லைஃப் டெவலப்மென்ட் (WESTLIFEDEV)

தற்போதைய விலை: ரூ.318.90

வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிறுவனத்தின் கடந்த காலாண்டு முடிவுக்குப் பிறகு பங்கின் விலை ஏற ஆரம்பித்தது. பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தப் பங்கை அதிகம் வாங்க ஆரம்பித்ததுதான் அதற்கான முக்கியக் காரணம். சமீபத்திய இறக்கத்துக்குப் பிறகு மீண்டும் ஏற ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் ரெஸ்டாரன்ட் பங்குகளுக்குத் தேவை அதிகரித்திருப்பதால், இந்தப் பங்குக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பங்கின் விலை ஆதரவு விலை வரை வந்திருக்கிறது.

ஆறு மாதங்கள் வரை இந்தப் பங்கை வைத்திருக்கலாம் என நினைப்பவர்கள், தற்போது இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் 280 ரூபாய் வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை 400 ரூபாய்.

டோரன்ட் பவர் (TORENTPOWER)

தற்போதைய விலை: ரூ.286.75

வாங்கலாம்.

தற்போதைய சந்தையின் வீழ்ச்சியில் அதிகம் பாதிக்கப்படாத மின்சாரத்துறை சார்ந்த பங்குகளின் ஒன்றாக இது இருக்கிறது. தற்போதைய விலை இறக்கத்துக்குப் பிறகு, மெதுவாகவும் நிலையாகவும் மேலே ஏற ஆரம்பித்திருக்கிறது. இறக்கத்திலிருக்கும் பங்குச் சந்தை ஏற ஆரம்பிக்கும்போது, இந்தப் பங்கின் விலையும் ஏற ஆரம்பிக்கும். தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 272 ரூபாய் வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை 325 ரூபாய்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு