Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

டைசியாக, கொரோனா வைரஸின் தாக்கம் நம் பங்குச் சந்தையிலும் நுழைந்துவிட்டது. சிறிதாகத் தொடங்கிய இந்தச் சரிவு, வெள்ளிக்கிழமை அன்று மிகப்பெரிதாக இருந்தது. சந்தை பெரிதாக இறங்கியதால், முதலீட்டாளர்கள் முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளச் சந்தையிலிருந்து வெளியேறினார்கள். பணமதிப்பு நீக்க நாள்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பிறகு இது மிகப்பெரிய சரிவாக இருப்பது எதையோ உணர்த்துவதாக இருக்கிறது. ஏனெனில், பணமதிப்பிழப்புக்குப் பிறகு எவ்வளவோ நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் சந்தை பெரும்பாலும் பரபரப்பாகவே இருந்திருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமெங்கும் பரவும் நிச்சயமற்றதன்மையே தற்போது அனைவரையும் பயமுறுத்துவதாக இருக்கிறது. தெரியாத ஒன்றின்மீதான பயம்தான் கரடியின் போக்கை சந்தையில் ஏற்படுத்திவிடுகிறது. சந்தையில் ‘என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை’ என்ற எண்ணம்தான் அனைவரிடமும் இருக்கிறது. இந்த மாதிரியான சூழலைக் கையாள்வது மிகவும் கடினம். `கொரோனா வைரஸால் மற்ற நாடுகளைப்போல் இந்தியா பாதிக்கப்படவில்லை’ என்று ஒரு கருத்து நிலவுகிறது. எனினும், அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறியது இந்த வாரத்தில் அதிக அளவில் நடந்தது; இது பெரும்பாலான பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்களின் சென்டிமென்ட்டில் பாதிப்பு ஏற்படும்போது விலைகள் ஆதரவு மண்டலத்தில் இருந்தாலும், யாரும் பங்குகளை வாங்க முன்வர மாட்டர்கள். வெளிநாட்டில் உருவான பிரச்னை இது என்பதால், இதற்குத் தீர்வு கிடைக்கும் வரை கவனமாக இருக்க வேண்டும். எனவே, உலகச் செய்திகளை கவனிக்க வேண்டியது முக்கியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்குகள்
பங்குகள்

சிறிய அளவிலான முதலீடு மற்றும் பைபேக் செய்பவர்கள், வாரத்தின் இடையே கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தலாம். நீண்டகால முதலீட்டாளர்களும், பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்புபவர்களும் தற்போது முதலீடு செய்யாமலிருப்பது நல்லது.

நீண்டகால முதலீட்டாளர்களும், பெரிய அளவில் முதலீடு செய்ய விரும்புபவர்களும் தற்போது முதலீடு செய்யாமலிருப்பது நல்லது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பங்குகள்
பங்குகள்

ஸ்பந்தனா ஸ்பூர்த்தி ஃபைனான்ஷியல் லிமிடெட் (SPANDANA)

தற்போதைய விலை: ரூ.1,084.80.

வாங்கலாம்.

ஸ்பந்தனா ஸ்பூர்த்தி ஃபைனான்ஷியல் லிமிடெட்
ஸ்பந்தனா ஸ்பூர்த்தி ஃபைனான்ஷியல் லிமிடெட்

பங்குச் சந்தை பெரிய அளவில் சரிவைச் சந்தித்துவரும் நிலையிலும் இந்தப் பங்கின் விலையில் பாட்டம் பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இருப்பினும், பாட்டம் பேட்டர்ன் பங்கின் விலை இறங்க வாய்ப்பில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

அண்மைக் காலமாக இந்தப் பங்கின் விலை ஏற ஆரம்பித்துள்ளது. இதன் விலை பிரேக்அவுட் ஆவதற்கான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. தற்போதைய சந்தையின் இறக்கம், இந்தப் பங்கின் விலை ஏற்றத்தில் பாதிப்பை உருவாக்கவில்லை. இதனால் தொடர்ந்து ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் ரூ.1,250 வரை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.1,000 வைத்துக்கொள்ளவும்.

நீல்கமல்
நீல்கமல்

நீல்கமல் (NILKAMAL)

தற்போதைய விலை: ரூ.1,402.55.

வாங்கலாம்.

இந்தப் பங்கின் விலையில் இரண்டு சப்போர்ட் நிலைகள் இணைந்து வந்திருக்கின்றன. இந்த மாதிரியான நிலை உருவாவது, பங்கின் விலை ஏற வாய்ப்பிருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. இது ஆர்.எஸ்.ஐ சார்ட்டிலும் வெளிப்பட்டிருக்கிறது. இவ்விரு அறிகுறிகளையும் வைத்துப் பார்த்தால், பங்கின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கலாம்.

இந்தப் பங்கை வாங்கியவர்கள் தொடர்ந்து வைத்திருக்கவும். தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.1,500-க்குப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.1,350-ஆக வைத்துக்கொள்ளவும். 

இன்ஃபோ எட்ஜ் 
இந்தியா லிமிடெட்
இன்ஃபோ எட்ஜ் இந்தியா லிமிடெட்

இன்ஃபோ எட்ஜ் இந்தியா லிமிடெட் (NAUKRI)

தற்போதைய விலை: ரூ.2,593.35

வாங்கலாம்.

கடந்த காலத்தில் இந்தப் பங்கின் விலை சரிவைச் சந்தித்தது. ஏனெனில், லாபத்திலிருந்த இதன் முதலீட்டாளர்கள் கைவசமிருந்த பங்குகளை விற்று லாபம் பார்த்தார்கள். தற்போது இந்தப் பங்கு எஃப் அண்டு ஓ பிரிவில் வர்த்தகமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதற்கான தேவைகள் புதிதாக உருவாகி, பங்கின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.2,900 வரை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாப்லாஸ் ரூ.2,400-ஆக வைத்துக்கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism