Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்த வார இந்தியப் பங்குச் சந்தை கேண்டில் சார்ட் கவனிக்கத்தக்கது.

சந்தை நகர்வு எங்கு தொடங்கியதோ, அதே வரம்புக்கு அருகிலேயே இறுதி கேண்டில் சார்ட் முடிந்திருக்கிறது. செவ்வாய் அன்று சந்தையில் ஏற்பட்ட ஆரம்ப இடைவெளி அதன் பிறகு தொடரவில்லை. வர்த்தக வாரத்தின் மற்ற தினங்கள் அந்த இடைவெளியை நிரப்புவதாகவே இருந்தன.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கிப் பங்குகள் மோசமாகச் செயல்பட்டதால், பேங்க் நிஃப்டியின் வாராந்தர நகர்வில் கரடியின் போக்கு சூழ்ந்திருந்தது. நிதித்துறையில் வெளியான சில பாதகமான செய்திகள் வெள்ளி அன்று ஒட்டுமொத்தமாக இறக்கத்தைத் தந்ததால், பேங்க் நிஃப்டியின் மதிப்பு மொத்தமாகச் சரித்தது.

பங்குகள்
பங்குகள்

துறைவாரியாகப் பார்க்கும்போது, பார்மா துறை தொடர்ச்சியாக நன்கு செயல்பட்டது. வர்த்தக வார இறுதியில் சில சாதகமான செய்திகள் வெளியானதால், தொடர்ந்து லாபகரமாகச் செயல்பட அது உதவியது. பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஸ்மால்கேப் மற்றும் பல மிட்கேப் பார்மா பங்குகள் நன்கு செயல்பட்டன.

சில ஐ.டி நிறுவனப் பங்குகளில் ஷார்ட் கவரிங் நடந்திருப்பதால் விலை ஏறியிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோவுக்கும், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இடைப்பட்ட ஒப்பந்தம் நல்ல செய்தியாக இருந்ததால், அந்த நிறுவனத்தின் பங்கு விலையில் கணிசமான ஏற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக எரிசக்தித் துறை இண்டெக்ஸும் இந்த வாரத்தில் ஓரளவு நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகும் சீஸன் சற்று தெளிவாகவே தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே கடந்த காலாண்டில் சில நிறுவனங்கள் ஏமாற்றம் அளித்ததால், தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானத்தில் நம் எதிர்பார்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. சில பங்குகள் விலை கடுமையாக இறங்கக்கூடும். இதனால், நீண்டகால முதலீட்டாளர்கள்கூட பங்குகளை விற்றுவிட்டு வெளியேற வாய்ப்பிருக்கிறது. எனவே, மோசமான காலாண்டு முடிவுகள் காரணமாகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுணர்வுடன் இருக்க வேண்டும்.

பங்குகள்
பங்குகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான எண்ணிக்கையைச் சார்ந்தே சந்தையின் செயல்பாடு இருக்கும். எண்ணிக்கை குறையும்பட்சத்தில் இண்டெக்ஸ்கள் சற்று மேம்பட வாய்ப்பிருக்கிறது. ஒரு சின்ன சாதகமான செய்தி வந்தாலும், அதன் தாக்கம் சந்தையில் பெரிதாக இருக்கும். நிஃப்டி 9000 என்ற வரம்பில் ஏற்பட்டுள்ள இறக்கம், முதலீட்டாளர்களை மீண்டும் சந்தைக்குள் இழுப்பதன் மூலம் ஓரளவு ஆதரவை ஏற்படுத்தக் கூடும். ஏற்றநிலையில் பார்க்கும்போது, நிஃப்டி 9350-9400 என்ற வரம்பைக் கடந்து சந்தை மேலேறுவது சற்று கடினமானதாகத் தெரிகிறது.

அலெம்பிக் பார்மா (APLLTD)

தற்போதைய விலை: ரூ.760.20

வாங்கலாம்.

அண்மைக்காலமாக பார்மா நிறுவனப் பங்குகள் நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. கூடவே, இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகளும் முதலீட்டாளர்களைச் சந்தோஷப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கின்றன. அந்த வகையில், அண்மையில் வெளியான அலெம்பிக் பார்மா நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவுகளும் அந்த நிறுவனத்தின் பங்கு விலையை ஏற்றத்தின் போக்கில் வர்த்தகமாகச் செய்திருக்கின்றன.

தற்போதைய விலையிலும், 700 ரூபாய்க்கு அருகில் இறங்கும்போதும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 680 ரூபாய் வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை 840 ரூபாய்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வி.பி.எல் (VBL)

தற்போதைய விலை: ரூ.651.05

வாங்கலாம்.

நிதி நிறுவனங்கள் தற்போதைய சந்தை இறக்கத்தில் முதலீடு செய்வதற்காக நல்ல பங்குகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்ற பங்காக இது இருக்கிறது. கடந்த வாரத்தில் இந்தப் பங்கில் மொத்த முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இது, `பெரிய முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்கில் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்’ என்பதைக் குறிக்கிறது. பங்கின் விலை வரைபடமும் இதைத்தான் குறிப்பிடுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 620 ரூபாய் வைத்துக்கொள்ளவும். இதன் இலக்கு விலை 730 ரூபாய்.

லாரஸ் லேப்ஸ் (LAURUSLABS)

தற்போதைய விலை: ரூ.494.80

வாங்கலாம்.

பார்மாதுறையைச் சார்ந்த பங்கு என்பதால், இந்தப் பங்குக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. ஒரு கீழ்நிலைக்கு இறங்கி, நீண்டகாலமாக அதே மந்தநிலையில் வர்த்தகமாகிவந்தது இந்தப் பங்கு. தற்போது அந்த நிலை மாறி, பிரேக் அவுட் ஆகியிருக்கிறது. பங்கின் விலை ஏற்றப் போக்குக்கு வந்திருக்கிறது.

இதே நிலை தொடர்ந்தால், இந்தப் பங்கின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் பங்குக்கான இலக்கு விலை ரூ.845.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.