இந்த இரண்டு மாதங்களில்தான் இந்தியப் பங்குச் சந்தையின் போக்கில் எவ்வளவு மாற்றங்கள்! மார்ச் மாதம் முழுக்க பயம் சூழ்ந்திருந்தது; பெரிய இறக்கங்கள் ஏற்பட்டன.

ஆனால், ஏப்ரல் மாதத்தில் பங்குகளை வாங்கியவர்களுக்குக் கிடைத்த வருமானமும், சந்தையின் நகர்வும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. மார்ச் மாதத்தில் சந்தையில் இருந்த போக்கைப் பார்க்கும்போது, நாம் திரும்பவும் நிஃப்டி 10000 என்ற வரம்புக்கு விரைவில் மீண்டுவருவோம் என்று கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாது. ‘எல்லாம் கடந்து போகும்’ என்ற வரிகளுக்கேற்ப அதைக் கடந்து வந்திருக்கிறோம்.

இந்த வாரத்தில் வலுவான போக்கு இருந்ததால், கடந்தகால ரீட்ரேஸ்மென்ட் மண்டலங்கள் மற்றும் சில தடைகளைக் கடந்து சந்தை மேலேறியிருக்கிறது. தற்போது, ஜனவரி மாதத்திலிருந்து ஏற்பட்ட இறக்கத்திலிருந்து மீண்டு, 50% அளவுக்கு மேலேறி வந்திருக்கிறது. இந்த ஏற்றம் மிகக் குறுகியகாலத்தில் ஏற்பட்டிருக்கிறது. முந்தைய இறக்கங்களின்போது ஒருவர் முதலீடுகளைச் செய்திருந்தால் தவிர பழைய வரம்புகளுக்குச் சந்தை உடனடியாக மீண்டு வந்திருப்பதைப் பார்த்து பெரிதும் சந்தோஷப்பட முடியாது. எனினும், சந்தை இறங்கத் தொடங்கியபோது முதலீடு செய்து, நீண்டகாலமாக முதலீட்டை வைத்திருப்பவர்களுக்கு, விற்றுவிட்டுத் தப்பிக்கக்கூடிய மகிழ்ச்சியான வாய்ப்பாக அமையக்கூடும்.

கொரோனா வைரஸ் பரவுவது குறித்து இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலை இன்னும் பாதகமானதாகவே இருப்பதால், சந்தை மேலும் உயர்வதற்கான நம்பிக்கை குறைவாகவே இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

எனவே, சந்தையின் இந்த உயர்வுக்கு எது காரணியாக இருக்கும் என்பது சரியாகத் தெரியவில்லை.

எனினும் இந்த வாய்ப்பைத் தவறவிட விரும்பாததால், முதலீட்டாளர்கள் இன்னமும் சந்தையில் இருக்கிறார்கள்.

எனினும், ரிஸ்க் அதிகமாக இருப்பதால் யாரும் பங்குகளை அதிக காலம் வைத்திருப்ப தில்லை. எனவே, சந்தை உயர்ந்தாலும்கூட அதிக அளவில் பங்குகள் வாங்கப்படவில்லை. சந்தேகத்தின் சுவரில் ஏறி அமர்ந்திருக்கும் நிலைக்கு இது உதாரணம். முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வரை இந்த நிலை தொடரும்.
.பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!.
எனினும், தற்போது சந்தையில் காளையின் போக்கு தென்படுவதால் நாமும் அதேபோலச் செயல்பட வேண்டும். ஏதேனும் புதிய சிக்னல் தென்படும்வரை எச்சரிக்கையுணர்வுடன் முதலீட்டைச் செய்ய வேண்டும்.

அப்பாட் இந்தியா (ABBOTINDIA)

தற்போதைய விலை ரூ.17,730.75

வாங்கலாம்.

சந்தையில் சில எவர்கிரீன் பங்குகள் உள்ளன, அவற்றில் அப்பாட் இந்தியாவும் ஒன்று. விளக்கப் படத்தில் பங்கின் விலைப்போக்கைப் பார்க்கும்போது, இந்தப் பங்கை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பது தெளிவாகிறது. கடந்த வாரத்தில் பங்கின் விலை, இறக்கத்திலிருந்து ஏற்றத்தின் போக்குக்கு திரும்பியதால் புதிதாக வாங்குபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

பங்கின் விலையில் புதிய உச்சம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கவும். ஸ்டாப்லாஸ் ரூ.17,000 வைத்துக்கொள்ளவும்.

வெஸ்ட்லைஃப் டெவலப்மென்ட் (WESTLIFE)

தற்போதைய விலை ரூ.312.40

வாங்கலாம்.

இப்போது டோமினோ மற்றும் மெக்டொனால்டு நிறுவனங்களின் உணவுப் பொருள்களின் ஹோம் டெலிவரி வணிகம் அதிகரித்துவருகிறது எனச் சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்கள் எப்போதும் சுகாதாரம் மற்றும் தயாரிப்புகளுக்கு ஒரு சிறந்த முறையைப் பராமரித்துவருவதால், வாடிக்கையாளர்கள் அதிகரித்துவருவதைக் காண முடிகிறது. பங்கின் விலை அதன் குறைந்தபட்ச விலை அருகே சில காலம் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் வர்த்தகமாகிவந்தது. இப்போது பங்கு விலை ஏற்றத்துக்குத் திரும்பியிருக்கிறது. தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.295 வைத்துக்கொள்ளவும். குறுகியகாலத்தில் பங்கின் விலை ரூ.360-க்கு உயரக்கூடும்.

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் (JSWSTEEL)

தற்போதைய விலை: ரூ.180.65

வாங்கலாம்.

மெட்டல் பங்குகள் வார இறுதியில் சில மறுமலர்ச்சியைக் காட்டின. அடுத்த வாரங்களில் மேலும் விலை உயரக்கூடும். பல பங்குகளின் விலை இதற்கு முன்பு கடுமையாக இறங்கிக் காணப்பட்டது. அவற்றில், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனப் பங்கும் ஒன்று. பங்கின் விலை சார்ட்டில் சிறிய ரவுண்டிங் அமைப்பு உருவாகியிருக்கிறது. இது பங்கின் விலை ஏற்றம் காணும் எனச் சுட்டிக் காட்டுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.168. குறுகிய காலத்தில் பங்கின் விலை ரூ.225-க்கு உயரக்கூடும்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.