Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்த வாரம் முழுவதும் சந்தை பலவீனமாகவே இருந்தது. முக்கியக் குறியீடுகள் இறக்கத்திலேயே வர்த்தகமாகின.

பின்னர் பிரதமரின் `ரூ.20 லட்சம் கோடி நிதியுதவி’ அறிவிப்பால் மீட்கப்பட்டு மேலேறியது. ஆனால், அதன் பிறகு தொடர் ஏற்றம் ஏதும் இல்லாததால் வியாழன் அன்று கீழிறங்கியது. வர்த்தக ஆரம்பத்தில் அதிக இடைவெளிகள் ஏற்பட்டுவருவதால், இந்தியப் பங்குச் சந்தையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதையே கணிக்க முடியவில்லை. சந்தை ஏற்றம் பெற, இறங்கியதிலிருந்து சிறிதாவது ஏற்றம் ஏற்பட வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிஃப்டி வாராந்தர சார்ட், முந்தைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் இறங்கியிருக்கிறது. இந்த இறக்கம் தொடரும் என்பதையே இது காட்டுகிறது. எனினும், இந்த வாரத்தில், பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு வந்த வர்த்தக நாள்களில் சந்தையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. எனவே, திட்டத்தை விரிவாக அறிவித்த பிறகு, அதற்கேற்ப சந்தையின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு, பங்குகளின் விலைகளிலும் மாற்றம் ஏற்படக்கூடும்.

பங்குகள்
பங்குகள்

அடுத்த வாரத்தில் எப்படியிருக்கும் என்று ஒருவருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. சந்தையின் போக்கு மிகவும் மாறுபட்டிருக்கிறது. இத்தகைய சூழலில், எது வேண்டுமானாலும் குழப்பங்களைத் தீர்க்கக்கூடியதாக இருக்கலாம். ஏதேனும் ஒரு செய்திகூட பெரிய அளவில், நீண்டகாலத்துக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அது, அரசுத் தரப்பிலிருந்து சில கணிசமான செய்திகளுடன் வரக்கூடிய நிதி ஒதுக்கீட்டுத் திட்ட அறிவிப்பாகக்கூட இருக்கலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் கலவையாக இருக்கின்றன. சமீபத்திய, நிதி நிறுவனங்களின் மோசமான காலாண்டு முடிவுகளால் ஏற்கெனவே சந்தை பாதிக்கப்பட்டுவிட்டதால், அநேகமாக அடுத்ததாகச் சந்தையின் செயல்பாடு மந்தமாகவே இருக்கும். இது இப்படியே மேலும் தொடரும்பட்சத்தில் அரசுத் தரப்பிலிருந்து தரப்படும் நிதி ஒதுக்கீட்டுத் திட்ட அறிவிப்புகள் அல்லது சர்வதேச நிகழ்வுகளால் மட்டுமே பெரிய அளவிலான ஏற்றப்போக்கு ஏற்படக்கூடும்.

தற்போது நிஃப்டி 9000 என்ற நிலை நல்ல ஆதரவாக உள்ளது. 9500 என்ற நிலையை இப்போதைக்குக் கடப்பது சற்று கடினமாக இருக்கலாம்.

எனவே, ஒரு வரம்புக்குள்ளேயே பங்குகளின் விலை நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆர்த்தி டிரக்ஸ் (AARTIDRUGS)

தற்போதைய விலை: ரூ.835.55

வாங்கலாம்.

பார்மா மற்றும் பார்மா துறை சார்ந்த பங்குகளுக்குத் தொடர்ந்து சந்தையில் தேவை இருந்துகொண்டிருக்கிறது. தற்போதைய தேவையின் காரணமாக, பார்மா பங்குகளின் விலை உயர்ந்துவருகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆர்த்தி டிரக்ஸ். வெள்ளிக்கிழமை இதன் விலை அதிகரித்துக் காணப்பட்டது. இப்போது பங்கின் விலை பிரேக்அவுட் ஆகியிருப்பதால், புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதன் வால்யூம் மற்றும் மொமென்டம் அதிகமாக இருக்கிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 800 ரூபாய் வைத்துக்கொள்ளவும். இலக்கு விலை ரூ.1,100.

ஹீரோ மோட்டார் (HEROMOTOCO)

தற்போதைய விலை: ரூ.2,241.35

வாங்கலாம்.

சமீபகாலமாக இருசக்கர வாகனப் பங்குகளின் விலை ஏற ஆரம்பித்திருக்கிறது. கிராமப்புறங்களில் ராபி பருவத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுவதால், வாகன விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த நிறுவனப் பங்கின் விலை ஏற ஆரம்பித்திருக்கிறது. வரும் வாரங்களில் 2,400 ரூபாயை நோக்கி விலை ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 2,100 ரூபாய் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்
பங்குகள்

பி.ஹெச்.இ.எல் (BHEL)

தற்போதைய விலை: ரூ.27.45

வாங்கலாம்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளுக்குப் பிறகு பொதுத்துறை நிறுவனப் பங்குகளுக்குத் தேவை அதிகரித்திருக் கிறது. இந்தப் பங்கின் விலை சார்ட்டில் லாங் டேர்ம் பாட்டம் உருவாகியிருக்கிறது. இது பங்கின் விலை மேலும் உயரும் என்பதைக் குறிக்கிறது. இந்தப் பங்கின் விலை நீண்டகாலமாக 20 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமாகிவந்தது. இப்போது இதன் வால்யூம் அதிகரித்து, மீண்டும் விலை ஏறுவதற்கான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்தப் பங்கை ஓராண்டுக்கு இலக்கு வைத்து வாங்கலாம். 20-25 ரூபாய்க்கு இறங்கினால்கூட வாங்கலாம். இலக்கு விலை 45 ரூபாய்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.