Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்தியப் பங்குச் சந்தையின் இந்த வாரத் தொடக்கம் மிக மோசமாக, பெரிய இறக்கத்துடன் அமைந்தது. காளையின் போக்குக்கான நம்பிக்கை அனைத்தும் சிதைந்து, அச்சுறுத்தும்படி மிகவும் கீழாக இறங்கியது.

நிஃப்டி 9000 புள்ளிகள் என்ற வரம்பு தகர்க்கப்பட்டு அதற்கும் கீழிறங்கியிருப்பது நிச்சயமாக நல்ல செய்தியல்ல. ஏனெனில், இந்த நிலை சில காலமாக நன்கு பாதுகாக்கப்பட்டு வந்திருந்தது. முன்னதாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டால் சந்தையின் நகர்வு வலுவாக இருந்தது. ஒருவேளை, கடந்த வாரத்தில் இந்தப் பங்கு மென்மையாகச் செயல்பட்டதும்கூட இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். மேலும், வங்கி மற்றும் நிதிச்சேவை நிறுவனப் பங்குகளும் சற்று மோசமாகச் செயல்பட்டதும் சந்தையின் இறக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெளிவந்துகொண்டிருக்கும் நான்காம் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சீரற்றதாகத்தான் இருக்கின்றன. இதில், அதிக எதிர்பார்ப்பு இல்லையென்றாலும், ஆச்சர்யப்படுத்தும் முடிவுகளை வெளியிடும் நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே வாங்கக்கூடிய ஆர்வத்தை ஓரளவுக்குத் தூண்டுகின்றன. குறிப்பாக, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு பயனாளிக்கான சராசரி வருவாய் அதிகரித்திருப்பதுகூட சந்தையின் போக்கை ஆச்சர்யப்படுத்தியிருக்கலாம். எந்த நிறுவனங்களெல்லாம் நல்ல முடிவுகளைத் தருகின்றனவோ, அவற்றுக்கெல்லாம் சந்தை தகுந்த வெகுமதியை அளிக்கிறது. ஏற்கெனவே பங்கு விலைகள் குறைவாக இருப்பதாலோ என்னவோ இதுவரை எந்தப் பங்குமே விலை மிக அதிகமாகக் குறையவில்லை.

பங்குகள்
பங்குகள்

தனிப்பட்ட பங்கு சார்ந்த செயல்பாடுகள் முடிந்து, துறைவாரியான சுழற்சி தெளிவாகத் தெரிகிறது. முதலீட்டாளர்களுக்கு பார்மா துறை விருப்பமான துறைகளில் ஒன்றாக இருக்கிறது. இது சற்று நிலையாக இருந்தபின் மீண்டும் ஏற்றப்போக்கில் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதேபோல, நிதி நிறுவனங்களின் துறையிலும் விலை ஏற்றத்தை ஓரளவு நாம் காணமுடிகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சந்தை தற்போது வர்த்தக வரம்பில் இருக்கிறது. நிஃப்டி 9000 புள்ளிகளுக்குக் கீழான இறக்கமானது, மேல்முனையில் உறுதியுடன் பற்றி ஏறி 9300-9400 புள்ளிகளுக்கிடையே முன்னேறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. கீழ்முனையில் ஏதேனும் மோசமான செய்தி காரணமாக, சந்தை மீண்டும் சரிவடைந்து நிஃப்டி 8750 புள்ளிகள் வரை இறங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

பங்குகள்
பங்குகள்

தற்போதைய நிலையில் வர்த்தகச் சந்தையில், இறக்கம், ஏற்றம் என இரண்டிலும் வர்த்தகம் செய்ய சில திறமைகள் வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்களிடம் அது இல்லை. எனவே, தற்போது திறமையான வர்த்தகர்கள் மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.

கிரானுல்ஸ் இந்தியா (GRANULES)

தற்போதைய விலை: ரூ.168.50

வாங்கலாம்.

சில வாரங்களுக்கு முன் சந்தை சிறப்பாகச் செயல்பட்டது. அப்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஏற்றம்கண்டது. சந்தை இறக்கத்தில் இருக்கும்போது இந்தப் பங்கின் விலையும் இறக்கத்தில் இருந்தது. இப்போது மீண்டும் மேலே ஏற ஆரம்பித்திருக்கிறது. சமீபத்திய ஸ்விங் உச்சத்தை நோக்கி இந்தப் பங்கின் விலை ஏற ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து மேலே ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்மா பங்குகளுக்கு அண்மைக்காலத்தில் தேவை அதிகம் இருப்பதால் இந்தப் பங்கின் விலை குறுகியகாலத்தில் ரூ.220 வரை போகும். தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.160.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஏஃபிள் இந்தியா (AFFLE)

தற்போதைய விலை: ரூ.1,476.20

வாங்கலாம்.

டெக்னாலஜி நிறுவனப் பங்குகள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்புடைய நிறுவனப் பங்குகளுக்குச் சந்தையில் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே, இந்த நிறுவனத்தின் பங்குக்கும் சந்தையில் தேவை அதிகரித்திருக்கிறது. இந்த நிறுவனம், டிஜிட்டல் விளம்பர சேவையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சந்தை அதிக இறக்கத்தைச் சந்திக்கும்போது, இந்தப் பங்கின் விலையும் இறக்கத்தைச் சந்தித்தது. தற்போது மறுபடியும் ஏற்றத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. குறுகியகாலத்தில் 1,600 ரூபாய் முதல் 1,700 ரூபாய் வரை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,400 வைத்துக்கொள்ளலாம்.

வோடாஃபோன் ஐடியா (IDEA)

தற்போதைய விலை: ரூ.5.55

வாங்கலாம்.

சமீபத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு அதிகமாக இறங்கி, மீண்டும் மேலே ஏறியிருக்கிறது. மேலும் ஏறுவதற்கான அறிகுறி தெரிகிறது. பங்கின் விலைப்போக்கு இறக்கத்திலிருந்து ஏற்றத்தை நோக்கி மாறியிருப்பதால், இந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5.50 ரூபாயிலிருந்து 4.50 ரூபாய் வரை இறங்கினாலும், அதுவரை வாங்கலாம். ஸ்டாப்லாஸ் 3.75 ரூபாய் வைத்துக் கொள்ளவும். அடுத்த ஒரு வருடத்துக்குள் இந்தப் பங்கின் விலை 12 ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism