Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

கேண்டில் பேட்டர்ன் காளையின் போக்குக்கு வழிவிட்டால், ஏற்றம் அடையலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

கேண்டில் பேட்டர்ன் காளையின் போக்குக்கு வழிவிட்டால், ஏற்றம் அடையலாம்!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
றுதியாக, சில மோசமான நகர்வுகளுக்குப் பிறகு, நிஃப்டி 12000 என்ற ரெசிஸ்டன்ஸ் நிலையைக் கடந்து வியாழன் அன்று ஏற்றம் அடைந்திருக்கிறது. இடையில் சில இன்ட்ராடே இறக்கங்கள் காணப்பட்ட போதிலும் காளையின் போக்கு தன்னை நிலைப்படுத்திக்கொண்டது.

சந்தையைத் தனது கட்டுப்பாட்டிலிருந்து விலகாமல் பார்த்துக் கொண்டது. இதற்குக் காரணம், கடந்த வாரத்தில் மூன்று வர்த்தக நாள்களிலும் கரடியின் முயற்சிகள் அனைத்தையும் டோஜி வகை கேண்டில் பேட்டர்ன் உருவாகி நிறுத்திவைத்தது. திங்களன்று இது போன்ற கேண்டில் பேட்டர்ன் காளையின் போக்குக்கு வழிவிட்டால், தொடர்ந்து ஏற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதே நேரம், தவிர்க்க முடியாத குறிப்பிடத்தக்க பங்களிப்பு வங்கித் துறையிலிருந்து சந்தைக்குக் கிடைத்துள்ளது. வங்கிப் பங்குகளின் ஏற்றம் கடந்த வாரம் முழுவதுமே சிறப்பாக இருந்தது. இதனால் பேங்க் நிஃப்டி ஏற்றத்தைக் கண்டதுடன், நிஃப்டியின் ஏற்றத்துக்கும் உதவியது. முக்கிய வங்கிகளின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. கோட்டக் மஹிந்திரா வங்கியின் முடிவுகள் அதன் ஏற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. இண்டஸ்இண்ட் பேங்க் முடிவுகள் எதிர்பார்த்தபடியே சிறப்பாக இல்லாததால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எஸ்.பி.ஐ பங்கின் செயல்பாடு துடிப்பாக இருந்தது. எனவே, பேங்க் நிஃப்டியில் நல்ல ஏற்றத்தைக் காண முடிந்தது. இன்னும் மேல்நோக்கி நகர்வதற்கான சாத்தியங்களுடன் பேங்க் நிஃப்டி உள்ளது. இதன்மூலம் நிஃப்டியும் வரலாற்றுச் உச்சத்தை எட்ட வாய்ப்பிருக்கிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

காலாண்டு நிதிநிலை முடிவுகள் சிறப்பாகவே வந்துகொண்டிருக்கின்றன. பங்குச் சந்தையில் அதிகப் பங்களிப்புக் கொண்ட நிறுவனங்களின் முடிவுகள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வருவதால், சந்தையின் போக்கு பாசிட்டிவாக இருக்கிறது. இனிவரும் முடிவுகளும் இந்த சென்டிமென்ட்டை பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். மேலும் மிட்கேப், ஸ்மால்கேப் பங்கு பிரிவுகளிலும் செயல்பாடு நன்றாகவே இருக்கிறது. கூடவே, அமெரிக்க தேர்தல் முடிவுகளும் வந்தவண்ணம் உள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னணி பெரு நிறுவனங்களின் முடிவுகள் வந்துவிட்டதால், இனி கவனம் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகளின் பக்கம் திரும்பலாம் என்பதால், அவற்றில் செயல்பாடு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சந்தைக் குறியீடுகள் அவற்றின் வரலாற்று உச்சங்களுக்கு சவால்விட முயற்சி செய்யலாம். அப்படி அவற்றைக் கடந்து ஏற்றம் கண்டால், சந்தையில் சென்டிமென்ட் இன்னும் சிறப்பாக இருக்கும். இதனால் சந்தையின் போக்கும் நன்றாக இருக்கும் என எதிர் பார்க்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஹிண்டால்கோ (HINDALCO)

தற்போதைய விலை ரூ.187.10

வாங்கலாம்

சந்தையில் மெட்டல் பங்குகள் தொடர்ந்து நல்ல செயல்பாட்டுடன் இருந்துவருகின்றன. ஸ்டீல் அதைத் தொடர்ந்து அலுமினிய பங்குகள் நல்ல ஏற்றத்தைக் கண்டுள்ளன. அவற்றில் ஹிண்டால்கோ மற்றும் நால்கோ பங்குகள் வியாழன் அன்று அதிக ஏற்றம் கண்டன. ஹிண்டால்கோ தொடர்ந்து ஏற்றம் காண்பதற்கான சாத்தியங்களுடன் இருக்கிறது. பிரேக் அவுட் நிலையை உடைத்து ஏறினால் ரூ.210-க்கு உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.180-உடன் பங்கை வாங்கலாம்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL)

தற்போதைய விலை ரூ.93.40

வாங்கலாம்

இந்த வாரத்தில் கவனிக்க வேண்டிய பங்காக இது உள்ளது. காரணம், இது தன் முக்கிய ரெசிஸ்டன்ஸ் டிரெண்ட்லைனைக் கடந்து ஏற்றம் கண்டுள்ளது. நல்ல மொமென்டத்துடன் ஏற்றம் கண்டுள்ள இந்தப் பங்கு கடந்த ஆகஸ்ட் மாத இடையிலிருந்து ரியாக்‌ஷனில் இருந்து வருகிறது. அதன் 120 என்ற உச்சத்திலிருந்து இறங்கிய பிறகு தொடர்ந்து மீண்டு ஏற்றத்தின் போக்கில் இருக்கிறது. எனவே, இந்தப் பங்கு மீண்டும் அந்த உச்சத்தை நோக்கி நகரத் தொடஙகியிருக்கிறது. ரூ.105 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.88-உடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பிரிகேட் என்டர்பிரைஸ் (BRIGADE)

தற்போதைய விலை ரூ.199.25

வாங்கலாம்

ரியல் எஸ்டேட் பங்குகள் எல்லாம் ஜனவரி 2020 என்ற நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், தற்போது அவற்றின் மீது கவனம் மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளது. பல நிறுவனப் பங்குகள் மிக மோசமாக விழுந்துள்ள நிலையிலும் அவை அனைத்தும் ஏற்றம் அடைவதற்கான சாத்தியங்களுடன் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக பிரிகேட் உள்ளது.

இந்தப் பங்கின் விலையில் கடந்த வாரத்தில் கன்சாலிடேஷன் முடிந்து பிரேக் அவுட் நடந்துள்ளது. எனவே, மேலும் ஏற்றம் காணும் வாய்ப்பு உள்ளது. ரூ.230-240 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.192-ல் வைத்துக்கொள்ளவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism