Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

பேங்க் நிஃப்டி கடந்த ஏழு வர்த்தக நாள்களில் 5000 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது.

ந்தியப் பங்குச் சந்தை, கடந்த வாரத்தில் மிகவும் நன்றாகச் செயலாற்றியது. நகர்வுகள் உற்சாகமாக இருந்ததோடு, யாரும் எதிர்பாராத புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்தன. நவம்பர் 5-ம் தேதி ஆரம்பித்த ஏற்றத்தை நோக்கிய வரம்பிலான நகர்வுகள் கடந்த வாரம் வரையிலும் தொடர்ந்தது. இது சற்று வழக்கத்துக்கு மாறானது மற்றும் அக்டோபர் 1 முதல் 12 வரை அடைந்த நகர்வை அப்படியே நகல் எடுத்ததுபோல இருந்தது.

இத்தகைய திடீர் ஏற்றத்துக்குப் பிறகு, சந்தை சற்று பின்வாங்கியதையும் பார்க்க முடிந்தது. சந்தேகமே இல்லாமல் இதுபோன்ற திடீர் வழக்கத்துக்கு மாறான ஏற்றத்துக்குப் பின் இறக்கம் உண்டாகும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். எனவே, அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிஃப்டி குறியீட்டோடு சேர்ந்து பேங்க் நிஃப்டியும் நல்ல ஏற்றத்தைச் சந்தித்தது. குறிப்பாக, பேங்க் நிஃப்டி கடந்த ஏழு வர்த்தக நாள்களில் 5000 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. இது மிக அதிக ஏற்றமாகும். மேலும், முற்றிலும் சந்தை எதிர்பாராத ஏற்றமாகவும் இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தத் திடீர் எதிர்பாராத ஏற்றத்தில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், இதுபோன்ற ஏற்றத்தை உண்டுபண்ணக்கூடிய வகையிலான செய்திகள் எதுவுமே பெரிதாக இல்லை என்பதுதான். பைஷர் கொரோனா தடுப்பு மருந்து செய்தி வந்தது. ஆனால், அது ஒரு வர்த்தக நாளுக்கானது மட்டுமே. செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளும் வழக்கமாகவே இருந்தன. எதிர்பார்த்தபடிதான் இருந்தனவே தவிர, சந்தையைப் புரட்டிப்போடும் அளவுக்கு முடிவுகள் எதுவும் இல்லை. சந்தையின் ஏற்றத்துக்கு லிக்விடிட்டியும் ஒரு காரணமாக இருக்கிறது. குறிப்பாக, டாலர் மதிப்பு அழுத்தத்தில் இருந்துவருவதால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளில் தொடர்ந்து அதிக முதலீடுகளைச் செய்து வருகின்றனர். இனிவரும் காலங்களிலும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

எனவே, வரும் நாள்களில் சந்தை பாசிட்டிவ்வான அறிகுறிகளுடன் இருக்கிறது.

தற்போது பேங்க் நிஃப்டி அதன் வரலாற்று உச்சத்தை நோக்கி நகர்வதற்காகக் காத்திருக்கிறது. வரும் நாள்களில் அது நடக்கலாம். மேலும், பார்மா, ஐ.டி துறை பங்குகள் தற்போது மந்தமாக இருந்தாலும் வரும் நாள்களில் ஏற்றத்தை நோக்கி நகர்ந்து மேலும் நிஃப்டியை ஏற்றத்தின் போக்கில் கொண்டு செல்லும் சென்டிமென்டை உருவாக்கலாம். நிஃப்டி மிட் ஸ்மால் 400 குறியீடு இந்த ஆண்டில் கண்ட அதிகபட்ச இறக்கத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வந்திருக்கிறது.

சந்தையில் சென்டிமென்ட் நன்றாக இருப்பதால் வாரத்தின் இடையே நடக்கும் இறக்கங்களை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளாக எடுத்துக்கொள்ளலாம். நிஃப்டி 13270 வரை உயர வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெக் மஹிந்திரா (TECHM)

தற்போதைய விலை ரூ.837.50

வாங்கலாம்

அனைத்து முன்னணி ஐ.டி பங்குகளும் அவற்றின் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளன. டெக் மஹிந்திராவும் அதில் இணைந்துள்ளது. இதன் வாராந்தர சார்ட் பேட்டர்ன் கவர்ச்சிகரமாக இருக்கிறது. பிரேக் அவுட் ஆகி புதிய உச்சத்தை அடைவதற்கான சாத்தியத்துடன் உள்ளது. குறுகியகாலத்தில் ரூ.1,000 என்ற நிலையைத் தாண்டி உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.800-ல் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

எய்ஷர் மோட்டார்ஸ் (EICHERMOT)

தற்போதைய விலை ரூ.2,326.70

வாங்கலாம்

பெரு நிறுவன பங்குகள் பிரேக் அவுட் ஆகி மேலே ஏற்றம் காணும்போது அதில் வழக்கமாக நிறுவன முதலீடுகளுக்கான அறிகுறி இருக்கும். எய்ஷர் மோட்டார்ஸ் பங்கிலும் இதுதான் நிகழ்கிறது. கடந்த மூன்று மாத உச்சத்தைக் கடந்து இந்தப் பங்கு ஏற்றம் கண்டிருக்கிறது. மொமென்டமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எனவே, மேலும் ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது. ரூ.2,450 வரை உயரலாம். ஸ்டாப்லாஸ் ரூ.2,290-ல் வைத்துக்கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

லாரஸ் லேப்ஸ் (LAURUSLABS)

தற்போதைய விலை ரூ.282.25

வாங்கலாம்

இந்த நிறுவனம் கடந்த காலாண்டில் சிறப்பான நிதி நிலை முடிவுகளுடன் வந்திருந்தாலும், அது எதிர்பார்த்தது என்பதால் பெரும்பாலும் லாபத்தை எடுக்கும் நடவடிக்கை காணப்பட்டது. இதனால் பங்கின் விலை ரூ.345-லிருந்து ரூ.260-க்கு விழுந்தது. தற்போது பங்கு விற்பனை குறைந்துள்ளது.

இனி பங்கில் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். குறுகியகாலத்தில் மீண்டும் ரூ.300 - 315 என்ற நிலைக்கு உயர வாய்ப்புள்ளது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.