சர்வதேச சந்தைகள், இந்திய பங்குச் சந்தை குறியீடுகளைக் கீழ்நோக்கி இழுத்துவிட்டன. இறக்கத்தின் வேகமும் மந்தமாக இல்லாமல் கடந்த சில நாள்களாகவே கடுமையாக இருந்தது. சந்தையின் இத்தகைய ஏற்ற இறக்கமான சூழல் கரடியின் போக்கை கட்டவிழ்த்துவிட்டதால் இறக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பேங்க் நிஃப்டி ரொம்பவே மோசமாகச் செயலாற்றியது. மேலும், அதில் கரடியின் அலை வலுவாக இருப்பதோடு, சந்தையை மேலும் இறக்கத்தை நோக்கி இழுக்க காரணமாக அமைந்தது. பெரும்பாலான சந்தைக் குறியீடுகள் அனைத்திலும் போக்கு எதிர்மறையாக இருந்ததால் சந்தை இறக்கத்தை நோக்கி நகர்ந்தது.

கடந்த வாரம் சந்தை நகர்வுகள் கொடூரமாகவே இருந்தது எனலாம். எக்ஸ்பைரி தினத்தன்று (செப்டம்பர் 24) நிஃப்டி 11000 சப்போர்ட் நிலையை உடைத்து இறங்குவது அவ்வளவு கடுமையானதாகவே இல்லை. கண்டிப்பாக முதலீடுகள் உள்ளே வரவில்லை என்பது இதிலிருந்து நன்றாகவே தெரிகிறது. இரண்டாவது நீண்ட லிக்விடேஷன் செயல்பாடு தொடர்ந்ததையும் காட்டுகிறது. இறக்கத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் வலியை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதோடு தற்போது மீண்டு வர முடியாதபடி மாட்டிக்கொள்ளும் நிலைக்கு ஆளாகும் சூழலாகிவிட்டது.
அனைத்துத் திட்டங்களும் தோல்வியடைந்த நிலையில் சந்தை வரும் வாரத்திலும் கடும் சவாலைச் சந்திக்க உள்ளது. கடந்த வாரத்தில் பார்த்த தினசரி சார்ட் பேட்டர்னில் ஆர்.எஸ்.ஐ தொடர்ந்து இறக்கத்தை நோக்கிய போக்கில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் 30-க்கும் கீழே நகர்வதற்கான அச்சுறுத்தலும் உள்ளது. இந்த ஆண்டில் மார்ச்சுக்குப் பிறகு, இந்தப் போக்கு நிகழவே இல்லை. போலிங்கர் பேண்ட் மேலும் விரிவடைவதிலிருந்து இறக்கத்தின் தீவிரமும் அது ஏற்படுத்தும் வலியும் அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேங்க் நிஃப்டி 21000 என்ற நிலையை உடைத்து இறங்குவது என்பதும் நல்ல செய்தி இல்லை. தற்போது இது முந்தைய அதிகபட்ச இறக்கத்தை விடவும் மேலும் இறக்கமடைய உள்ளது. அடுத்த நல்ல சப்போர்ட் நிலை 20000 புள்ளிகள் வரை தெரியவில்லை. எனவே, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து கரடியின் போக்கிலேயே தொடரும்.
அதாவது, இறக்கநிலைகளில் பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. சந்தையை அவ்வப்போது மீண்டு வரச் செய்யும் ஷார்ட் நடவடிக்கைகளும் பெரிய அளவில் இல்லை. இவை எதுவுமே சந்தையின் போக்குக்குச் சாதகமான செய்திகளாக இல்லை. மேலும், பங்கு விற்பனை தொடர்ந்தால் அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள எந்த வழியும் இல்லை.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஎனவே, பங்குகளைப் பொறுத்தவரை தேர்ந்தெடுத்துதான் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும். சந்தைக் குறியீடுகள் நிற்கவே இடம் தேடக்கூடிய தடுமாறும் சூழலில் மிட்கேப் பங்குகள் சிலவற்றில் காளையின் போக்கு தெரிகிறது. எனவே, பங்குகளை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்ற இறக்கம் சற்று அதிகமாகவே தொடரும் சூழலில் பங்குகள் சார்ந்து சாதகமான செய்திகள் வராவிட்டால் அவற்றின் போக்கும் மாற வாய்ப்புள்ளது. எனவே, கவனமாக இருக்கவும்.

அதானி கிரீன் எனர்ஜி (ADANIGREEN)
தற்போதைய விலை ரூ.616.95
வாங்கலாம்
கடந்த சில மாதங்களாக இந்தப் பங்கில் நீண்ட ஏற்றம் இருந்ததால், பெரும்பாலான நாள்கள் லாபத்தை எடுக்கும் போக்கு நிலவிவந்தது. இந்தப் போக்கின் காரணமாகப் பங்கின் பாட்டம் நிலையில் கவர்ச்சிகரமான பேட்டர்ன் உருவாகியுள்ளது. இது ஏற்றத்தை நோக்கி நகர்வதற்கான அறிகுறியாக உள்ளது. தற்போது இந்தப் பங்கின் நகர்வு சில ரிட்ரேஸ் மென்ட் நிலையைக் கடந்துள்ளது.
எனவே, ரூ.725 என்ற இலக்கை நோக்கி நகர வாய்ப்புள்ளது. ரூ.575 ஸ்டாப்லாஸுடன் தற்போதைய விலையில் வாங்கலாம். 600 என்ற நிலைவரை இறக்கத்திலும் வாங்கலாம்.
நாட்கோ பார்மா (NATCOPHARM)
தற்போதைய விலை ரூ.851.95
வாங்கலாம்
பார்மா பங்குகள் தற்போது சந்தையின் கடும் இறக்கத்திலும் சிறப்பாக உள்ளது. நல்ல டிமாண்டில் இருக்கும் துறையாகவும் உள்ளது. கடந்த வாரத்தில் இந்தப் பங்கில் நாம் பார்த்த நல்ல ரவுண்டிங் பிரேக் அவுட் பேட்டர்ன் செயல்பட்டதற்கான அறிகுறி எதுவும் தெரிய வில்லை. ஆனால், நெக்லைனுக்கு மீண்டு வந்திருப்பது பங்கில் முதலீடுகள் வந்திருப்பதைக் காட்டுகிறது.
பார்மா பங்குகளில் உள்ள சென்டிமென்ட் தொடர்கிறது. எனவே, இறக்கங்களில் பங்கை வாங்கலாம். பங்கில் புதிதாக காளையின் போக்கு தெரிகிறது. விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. ரூ.925 இலக்கு விலையில் ஸ்டாப்லாஸ் ரூ.820 வைத்துக்கொள்ளவும்.
இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ் (IBVENTURES)
தற்போதைய விலை ரூ.217.00
வாங்கலாம்
நிதித்துறை பங்குகளில் இந்தியாபுல்ஸ் வென்ச்சர்ஸ் தற்போது சந்தையில் நிலவும் கரடியின் போக்கை தாங்கிக்கொண்டு சிறப்பாகச் செயல்படும் பங்காக உள்ளது. அதன் இறக்க நிலைகளில் இருந்து நன்றாகவே மீண்டு வந்திருக்கிறது.
பங்கில் நிலவும் நிலையான கன்சாலிடேஷன் மற்றும் ஏற்றத்தின் போக்கு அடுத்துவரும் நாள்களில் ஏற்றத்திற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.
பங்கில் ஏற்றத்தின் போக்கு தொடரும் என்பதால் குறுகியகாலத்தில் ரூ.260 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.200-இல் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.