Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

சந்தையின் தற்போதைய போக்கு தொடர வேண்டுமெனில், புதிதாக முதலீடுகள் உள்ளே வரவேண்டும்.

முந்தைய வாரங்களைக் காட்டிலும் கடந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம் முன்னேற்றம் கண்டது என்று சொல்லலாம். முந்தைய வார வர்த்தகம் கடுமையான கரடியின் போக்கில் இருந்த நிலையில் கடந்த வார வர்த்தகம், காளையின் போக்கில் முடிவடைந்தது. முந்தைய வார வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ஏற்பட்ட மீட்சி தொடர்ந்து திங்கள்கிழமை முதல் வியாழன் வரையிலும் நீடித்தது. இதன் விளைவாக இண்டெக்ஸ் கிட்டத்தட்ட 5% வரை ஏற்றம் கண்டது. கூடவே துறை சார்ந்த குறியீடுகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றது.
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

முந்தைய வாரங்களில் தொய்வடைந்த உற்சாகம் கடந்த வாரத்தில் வலுவாக மீண்டது. ரீடெயில் பிரிவில் செயல்பாடு மீண்டும் உற்சாகமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. கடந்த வாரத்தில் ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளின் நகர்வு வரம்பு கடுமையாகக் குறைந்தது. இதனால் புதிய வர்த்தகர்கள் கரடியின் பிடியைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால், விலைகள் மீண்டு வருவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படவில்லை. முடிந்த வாரத்தில் அனைத்துப் பங்குகளும் மீண்டும் துடிப்பான செயல்பாட்டுக்குத் திரும்பின. ஸ்மால் மற்றும் மிட்கேப் குறியீடுகளும் நன்றாகவே ஏற்றம் கண்டன.

மிகவும் குறிப்பிடத்தக்க ஏற்றமாக வங்கித்துறை குறியீடு பார்க்கப்படுகிறது. முந்தைய வாரங்களில் 20000 புள்ளிகளுக்கு கடுமையான இறக்கத்தைக் கண்டிருந்த வங்கித்துறை, முடிந்த வாரத்தில் நன்றாக மீண்டுவந்து 22000 புள்ளிகளைக் கடந்திருக்கிறது. இந்த ஏற்றமானது பெரும்பாலான தனியார் வங்கிப் பங்குகளும் சிறப்பான ஏற்றம் கண்டதன் மூலமாக நடந்துள்ளது. மந்தமாக இருந்த எஸ்.பி.ஐ பங்குகூட நல்ல ஏற்றம் கண்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பங்குகள்
பங்குகள்

வாராந்தர எக்ஸ்பைரியில் சந்தையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று கணிப்பதற்கு, வரும் வாரத்தில் சந்தை எப்படித் தொடங்குகிறது என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. சந்தையில் கடந்த வாரத்தில் லாங் செயல்பாடுகள் இல்லாமல் போனதுபோல, இந்த வாரத்தில் பெரிய அளவில் ஷார்ட் செயல்பாடுகள் இல்லாமல் போக வாய்ப்புகள் உள்ளன. எனவே, சந்தையின் தற்போதைய போக்கு தொடர வேண்டுமெனில், புதிதாக முதலீடுகள் உள்ளே வர வேண்டும். இந்த நீண்ட வார விடுமுறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எடுக்கும் முடிவுகளும் இதில் முக்கியப் பங்காற்றலாம். 11500 என்ற நிலையில் ஷார்ட்டுகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது ஏற்றத்துக்கான தடையாகவும் மாறலாம்.

வரும் வாரத்தில் நிஃப்டி 11350 என்ற நிலையிலிருந்து மீண்டும் ஏற்றம் கண்டால், 11450 என்ற நிலையில் உடைத்து ஏறலாம். அதற்கு பேங்க் நிஃப்டி 22000 என்ற நிலைக்கு மேலே தன்னை நிலைப்படுத்திக்கொண்டு ஏற்றம் காணக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பார்தி ஏர்டெல் (BHARTIARTL)

தற்போதைய விலை ரூ.432.35

வாங்கலாம்

பார்தி ஏர்டெல் பங்கைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் வாங்கி வந்த நிலையிலும் கடந்த பல வாரங்களாகவே வலுவான இறக்கத்தில்தான் இருந்தது. தொடர் இறக்கத்தில் செப்டம்பர் 24-ம் தேதி ரூ.417 என்ற நிலைக்கு இறங்கியது. மேலும், இந்தப் பங்கை இறக்கத்தை நோக்கித் தள்ள சந்தை முயற்சி செய்தது. ஆனால், அதை எதிர்கொண்டு மெல்லிய உயர் பாட்டம் நிலையை உருவாக்கி மீண்டுவந்தது. தற்போது நகர்வில் ஏற்றத்தை நோக்கிப் பயணப்பட முயற்சி செய்கிறது. இதன் ஆர்.எஸ்.ஐ விரிவடைய உள்ளது. பங்கு மீண்டு வருவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. நகர்வு இலக்கு ரூ.450-ஐ நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. இந்த நிலைக்கு மேல் பிரேக் அவுட் ஆகும்போது வாங்குவதற்கான வாய்ப்புகளாகக் கொள்ளலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

மணப்புரம் ஃபைனான்ஸ் (MANAPPURAM)

தற்போதைய விலை ரூ.166.45

வாங்கலாம்

நிதித்துறை சார்ந்த பங்குகள் மீண்டும் சிறப்பான செயல்பாட்டுக்குத் திரும்பியுள்ள நிலையில், கடந்த வாரத்தில் மணப்புரம் ஃபைனான்ஸ் பங்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கவனிக்கத்தக்கதாக உள்ளது. பங்கின் விலை நகர்வுகள் முந்தைய உச்சங்களைக் கடந்திருப்பதோடு, சராசரி ரெசிஸ்டன்ஸ்களையும் கடந்து ஏற்றத்தை நிலைப்படுத்தியிருக்கிறது. மேலும், வரும் வாரத்தில் ஏற்றமடைவதற்கான சாத்தியங் களுடன் இருக்கிறது. ரூ.183 என்ற நிலை வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.162 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

கிரிண்ட்வெல் நார்டன் (GRINDWELL)

தற்போதைய விலை ரூ.562.15

வாங்கலாம்

பக்கவாட்டு கன்சாலிடேஷனில் இருந்தப் பங்குகள் தற்போது நல்ல பிரேக்அவுட் ஏற்பட்டு உச்சங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கிரிண்ட்வெல் அப்படியான ஒரு பங்காக உள்ளது. இதன் பேட்டர்ன்களும் நல்ல வால்யூம் மற்றும் மொமென்டம் இருக்கும்; பிரேக்அவுட் ஆகி ஏற்றமடையும் என்ற நம்பகத்தன்மையைத் தருவதாக உள்ளன.

இதன் விலை நகர்வில் அத்தகைய நல்ல வரம்புடனான பிரேக்அவுட் உருவாகியுள்ளது. இதன் ஆர்.எஸ்.ஐ நிலைகளும் முன்னேற்றம் காண ஆரம்பித்துள்ளன. எனவே, தொடர்ந்து ஏற்றமடையும் வாய்ப்புகள் உள்ளன. குறுகியகாலத்தில் ரூ.625 என்ற நிலைக்கு உயரலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.