Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

தற்போது நிஃப்டி 12000 என்ற நிலையின் அருகில் உள்ளது. புதிய உச்சத்துக்கான எதிர்பார்ப்பு உள்ளது!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

தற்போது நிஃப்டி 12000 என்ற நிலையின் அருகில் உள்ளது. புதிய உச்சத்துக்கான எதிர்பார்ப்பு உள்ளது!

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
ந்திய பங்குச் சந்தையில் பாசிட்டிவ் சென்டிமென்ட் தொடர்ந்து காணப்பட்டதால் இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தின் போக்கில் வர்த்தகமானது. முன்னணி நிறுவனப் பங்குகளில் நகர்வுகள் சிறப்பாக இருந்ததால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இண்டெக்ஸ்கள் ஏற்றத்தைச் சந்தித்தன. சிமென்ட், ஐ.டி, பார்மா, கெமிக்கல் உள்ளிட்ட துறைகளின் செயல்பாடு உற்சாகமாக இருந்தது. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பிரிவுகளில் பங்குகள் சந்தை நகர்வுகளில் அளிக்கும் பங்களிப்பானது, சில உச்சங்களின்போது லாபத்தை எடுப்பது நடந்தாலும் பாசிட்டிவாகவே தொடர்கிறது.
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

டி.சி.எஸ் நிறுவனத்தின் சிறப்பான செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சந்தையை உற்சாகப்படுத்தியுள்ளது. இது பிற ஐ.டி பங்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிஃப்டியோடு ஒப்பிடுகையில் ஐ.டி துறை சிறப்பாகச் செயல்படும் வகையில் உள்ளது. மேலும், டி.சி.எஸ் முடிவுகள் தற்போது சந்தையில் துடிப்பை சேர்த்துள்ளதால் செயல்பாடு கூடுதலாகவே இருக்கும். இதனால் ஐ.டி துறை, பார்மா துறை இரண்டும் சந்தையின் நகர்வைத் தீர்மானிப் பவையாக உள்ளன.

பார்மா துறையில் மீண்டும் காளையின் போக்கு நன்றாக உருவாகியுள்ளது. இதிலும் முன்னணிப் பங்குகளின் செயல்பாடு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன. ஆனாலும், ஐ.டி துறையின் அளவுக்கு ஒப்பிடுகையில் பார்மாவின் பங்களிப்பு நிஃப்டியில் குறைவாகவே உள்ளது. ரிலையன்ஸ் பங்கின் நகர்வும் மீண்டும் செயல்பாடுக்கு வந்து புதிய உச்சத்தை எட்டியது. இதுவும் நிஃப்டியின் நகர்வுக்குக் காரணமானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது நிஃப்டி 12000 என்ற நிலையின் அருகில் உள்ளது. புதிய உச்சத்துக்கான எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது. இந்த இலக்கை எட்ட நாம் 4 - 5% தொலைவில் இருக்கிறோம். காரணம், இன்னமும் பேங்க் நிஃப்டி இழுபறியில்தான் இருக்கிறது. இதில் காளையின் போக்கு உண்டாவதற்கான செய்திகள் வர வேண்டும். அப்படி எதுவும் வராததால் பெரிய அளவில் நகர்வுகள் இல்லை. எனவே, தொடர்ந்து அழுத்தத்தில் உள்ளது. பிரச்னை என்னவெனில், நிஃப்டியில் வங்கித் துறையின் பங்கு 30% அளவில் இருப்பதுதான். இதனால் நிஃப்டியின் நகர்வும் பாதிக்கிறது.

பங்குகள்
பங்குகள்

சார்ட்டைப் பார்க்கும்போது விலை நகர்வுகள் ஏற்றத்தை நோக்கி நகர்வதாக உள்ளது. புதிய இலக்குகளையும் உருவாக்கியுள்ளது. வியாழன் அன்று உருவான டோஜி சாதகமாக இல்லை.

ஏற்றத்தின் போக்கு தொடரும் வரையில் வர்த்தகர்கள் வலுவான பங்குகளில் லாங் பொசிஷன்களை எடுக்கலாம். இறக்கத்தின் போது பங்குகளை வாங்கலாம். வருமானம் தரும் காலம் தொடங்கியிருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்கள் சந்தை உற்சாகமாகவே இருக்கும்.

சார்ட்டைப் பார்க்கும்போது விலை நகர்வுகள் ஏற்றத்தை நோக்கி நகர்வதாக உள்ளது. புதிய இலக்குகளையும் உருவாக்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிப்லா லிமிடெட் (CIPLA)

தற்போதைய விலை ரூ.811.45

வாங்கலாம்

பார்மா துறையில் செயல்பாடு வலுவாக இருப்பதால் சுமாரான பார்மா பங்குகளிலும் நல்ல நகர்வுகளைப் பார்க்க முடிகிறது. சிப்லா பங்கும் சற்று மந்தமாக இருந்தாலும் தற்போது ஏற்றத்தை நோக்கி நகர்வதற்கான உற்சாகத்துடன் இருக்கிறது. பங்கு 840-880 என்ற இலக்கை நோக்கி நகர வாய்ப்புள்ளது. தற்போதைய விலையிலும் இறக்கத்திலும் வாங்கலாம்.

பலராம்பூர் சினி மில்ஸ் (BALRAMCHIN)

தற்போதைய விலை ரூ.161.25

வாங்கலாம்

சர்க்கரை நிறுவனப் பங்குகள் சில மாதங்களாகவே நிலையான நகர்வுடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால், பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. சமீபத்தில் எத்தனால் குறித்த செய்திகள் வந்தநிலையில் பாசிட்டிவ் போக்கை உருவாக்கியது. புதிதாக முதலீடுகள் உள்ளே வரும். இது பங்கின் போக்கில் பிட்ச்போர்க் சேனலை உருவாக்கும் பிரேக் அவுட் ஆகி ஏற்றம் அடையும். தற்போதைய விலையில் வாங்கலாம். ரூ.154 ஸ்டாப்லாஸுடன் ரூ.195 வரை உயர வாய்ப்புள்ளது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

எம்பசிஸ் (MPHASIS)

தற்போதைய விலை ரூ.1,414.40

வாங்கலாம்

முன்னணி ஐ.டி பங்குகள் எல்லாம் ஏற்றம் காண்பதால் மிட்கேப் பங்குகள் மந்தமாக இருக்கும் என்று அர்த்தமில்லை. மிட்கேப் ஐ.டி பங்குகளும் முன்னணி பங்குகளைப் போலவே சிறப்பான நகர்வுகளுடன் உள்ளன. மேலும் புதிய ஏற்றத்துக்கான பிரேக் அவுட் நிலையுடனும் உள்ளன. எம்பசிஸ் அப்படியான ஒரு பங்கு. இதன் முக்கோண பிரேக்அவுட் பேட்டர்ன் புதிய உச்சங்களுக்கு இந்தப் பங்கை இட்டுச் செல்லும். குறுகியகாலத்தில் புதிய இலக்கு ரூ.1,525-ஐ அடையலாம். ரூ.1,375 ஸ்டாப்லாஸுடன் தற்போதைய விலையில் வாங்கலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism