Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

பொசிஷன்கள் இலகுவாக இருந்தால் சந்தை மீண்டும் ஏற்றத்தை நோக்கி நகரலாம்.

ந்தியப் பங்குச் சந்தை வர்த்தகம், முந்தைய வார இறுதியில் வெள்ளிக்கிழமை சிறப்பாக அமைந்ததால், பாசிட்டிவான போக்கு உருவானது. கடந்த வார திங்கள்கிழமையும் இந்தப் போக்கு தொடர்ந்து காணப்பட்டதோடு அடுத்த சில நாள்களிலும் நகர்வுகள் நிலைத்தன்மையுடன் இருந்தன.
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஆனால், வியாழன் அன்று ஏற்பட்ட இறக்கமானது சற்றும் எதிர்பாராததாக அமைந்தது. சந்தையின் நகர்வுகளைப் பார்க்கும்போது, வாரத்தில் ஆரம்ப மூன்று நாள்களில் சந்தையின் ஃப்யூச்சர்ஸ் பங்குகளில் ரீடெயில் பிரிவு சிறப்பாக இருந்ததன் காரணமாக ஏற்றத்தில் இருந்துள்ளது. இதனால் அதன் பொசிஷனில் நீண்டகாலத்துக்குப் பிறகு, நிலையற்றத்தன்மையை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம், செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளதுதான். முன்னணி பெரிய நிறுவனங்களின் முடிவுகள் சிறப்பாக வரத் தொடங்கியதால், இந்தப் போக்கு உருவாகியிருக்கலாம். சந்தையில் லிக்விடிட்டி போதுமான அளவுக்கு இருந்தது. இறக்கத்தின்போதெல்லாம் பங்குகள் வாங்கப்பட்டன. எனவே, யாரும் வியாழன் அன்று இறக்கம் உண்டாகும் என எதிர்பார்த்திருக்கவில்லை.

வியாழன் அன்று வார எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரியும் தன் பங்குக்கு பதற்றத்தை உண்டாக்கியது. வழக்கம்போல வர்த்தகர்களும் ஏற்றத்தின்போது ஷார்ட் எடுக்கும் போக்கைத் தொடர்ந்தார்கள். ஷார்ட்டுகளும், லாங் ஃப்யூச்சர்ஸ்களும் சேர்ந்து சந்தையை இறுக்கியதன் விளைவு, மற்ற பொசிஷன்களை எல்லாம் காலி செய்தது. இதனால் இறக்கம் நிலையாக இருந்ததுடன், பெரும்பாலான பொசிஷன்கள் கலைக்கப்பட்டு முதலீடுகள் வெளியேறின. இதனால் மீண்டும் சந்தை இலகுவானதாக மாறியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நிஃப்டி 11500 - 11600 என்ற நிலையில் சப்போர்ட்டுடன் இருக்கிறது. இதற்கு மேலும் விழாமல் இருக்க, விலை நகர்வுகள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தற்போது இந்தப் போக்கு இரண்டு விளைவு களில் ஒன்றுக்கு வழிவகுக்கும். பொசிஷன்கள் இலகுவாக இருந்தால், சந்தை மீண்டும் ஏற்றத்தை நோக்கி நகரலாம். ஆனால், அதற்குச் சந்தைக்கு சாதகமான செய்திகள் வந்தவண்ணம் இருக்க வேண்டும். இன்ஃபோசிஸ் நிதிநிலை முடிவுகள் அப்படியான ஒன்றாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நிகழவில்லை. அதேசமயம், வருவாய் ஈட்டும் காலம் என்பதால், பிற லார்ஜ்கேப் பங்குகள் ஏதேனும் இதை நிகழ்த்த வாய்ப்புள்ளது.

பங்குகள்
பங்குகள்

சந்தையின் போக்கில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் பிற விளைவுகள் உண்டாகலாம். பங்கு விற்பனையும் தொடரலாம். அப்படி நடந்தால் போர்ட்ஃபோலியோ லிக்விடேஷன் நடக்கலாம். இதனால் கரடியின் போக்கு தீவிரமடையலாம்.

நிஃப்டி 11500 - 11600 என்ற நிலையில் சப்போர்ட்டுடன் இருக்கிறது. இதற்கு மேலும் விழாமல் இருக்க, விலை நகர்வுகள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். பேங்க் நிஃப்டியின் முயற்சியும் விரைவிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. 22500 என்ற நிலையில் சப்போர்ட்டை விடாமல் பிடித்திருந்தால்தான் காளையின் போக்குக்கு வழிபிறக்கும். எனவே, வரும் வாரத்தில் நிஃப்டியின் நகர்வுகள் 11900 என்ற நிலையில் சப்ளைக்கேற்ப இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மாட்டிக்கொண்ட முதலீட்டாளர்கள் சந்தை ஏற்றத்துக்குத் தடையாக மாறிவிடுவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஸ்.பி.ஐ கார்டு அண்ட் பேமென்ட்ஸ் (SBICARD)

தற்போதைய விலை ரூ.900.20

வாங்கலாம்

சமீபத்தில் பட்டியலான பங்குகள் ஏற்றமடையும்போது கவனிக்க வேண்டும். அந்தப் பங்குகளில் புதிய உச்சங்கள் அடையும் போது புதிதாக முதலீடுகள் உள்ளே வரத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியாக இருக்கும். எஸ்.பி.ஐ கார்டு அத்தகைய பங்காக இருக்கிறது. இது, இதுவரை இல்லாத உச்சத்துக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதில் லேசான இறக்கங்கள் ஏற்படும்போதெல்லாம் அவற்றை இந்தப் பங்கில் நுழைவதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம். குறுகிய காலத்தில் இந்தப் பங்கு ரூ.1,000 என்ற நிலையை அடையலாம். ஸ்டாப் லாஸ் ரூ.850.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஜஸ்ட் டயல் (JUSTDIAL)

தற்போதைய விலை ரூ.460.75

வாங்கலாம்

சில காலம் இந்தப் பங்கு கவனத்துக்கு வராமலேயே இருந்தது. சில மாதங்களுக்கு முன் எஃப் அண்ட் ஓ பட்டியலில் இருந்தும் வெளியேறியது. ஆனால், இந்த வாரத்தில் திடீர் ஏற்றம் கண்டதன் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதன் சார்ட்டிலும் ஒரு பிரேக் அவுட் வரம்பைப் பார்க்க முடிகிறது. அதோடு நல்ல மொமென்டமும் தெரிகிறது. எனவே, இந்தப் பங்கு ரூ.500 நோக்கி ஏற்றம் அடையலாம். ஸ்டாப்லாஸ் ரூ.447.

ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் (RENUKA)

தற்போதைய விலை ரூ.9.90

வாங்கலாம்

ரேணுகா பங்கும் சில காலத்துக்கு வெளிச்சத்தில் இருந்தது. அதன் பிறகு, சில காலம் இறக்கத்தில் இருந்தது. தற்போது மீண்டு வரும் போக்கு தெரிகிறது. பங்கின் வர்த்தகத்தில் வால்யூம்களும் அதிகரிப்பதால் ஏற்றம் காணும் சாத்தியம் இருக்கிறது. நீண்டகால முதலீட்டுக்கு இந்தப் பங்கை வாங்கலாம். ஓராண்டில் இந்தப் பங்கு ரூ.20 வரை உயர வாய்ப்புள்ளது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.