Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்

குறுகிய காலத்தில் நிஃப்டி அதிக ஏற்றத்தை அடைய வாய்ப்புள்ளது.எனவே, கொஞ்சம் பொறுத்திருந்து சந்தையின் போக்கைக் கவனிக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

குறுகிய காலத்தில் நிஃப்டி அதிக ஏற்றத்தை அடைய வாய்ப்புள்ளது.எனவே, கொஞ்சம் பொறுத்திருந்து சந்தையின் போக்கைக் கவனிக்கலாம்.

Published:Updated:
பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்
நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி இரண்டும் சில திடீர் இறக்கங்களைச் சந்தித்ததால் வாராந்தர வியாழக்கிழமை எக்ஸ்பைரி கட்டுப்படுத்தப் பட்ட எக்ஸ்பைரியாகவே அமைந்தது. உண்மையில், திங்கள் அன்று அதிக பங்கு விற்பனை நடந்ததிலிருந்து சந்தை குறியீடுகளின் நகர்வுகளில் பெரிய அளவில் செயல்பாடுகள் இல்லை. எனவே, கடந்த மூன்று வர்த்தக தினங்களிலும் வர்த்தகம் பெரிய அளவில் உற்சாகம் இல்லாமலேயே முடிந்தது.
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

திங்கள்கிழமை சந்தை புதிய உச்சங்களை அடைந்ததால், அன்றைய தினம் சிறப்பான கொண்டாட்டமாகவே அமைந்தது. நிதித்துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் நல்ல செயல்பாடுகள் இருந்ததால், பேங்க் நிஃப்டியும் ஏற்றம் கண்டிருந்தது. இதனால் நிஃப்டி உயர் இலக்குநிலையை நோக்கி நகர்ந்தது. வாரத்தின் தொடக்கத்தில் உருவான இந்த சென்டிமென்ட் உற்சாகமாகவே இருந்தது. இறுதியில் குறியீடுகள் தங்களை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு ஆளாயின.

மிட்கேப், ஸ்மால்கேப் பிரிவுகளிலும் லாபத்தை எடுப்பது சில நாள்களுக்குப் பெரிய அளவில் இருந்தது. இந்த நடவடிக்கையால் சில ஆக்டிவ் முதலீட்டாளர்கள் சமீபத்தில் சந்தித்த லாபம் காணாமல் போனது. இருந்தபோதிலும் அவர்கள் மீண்டும் சந்தையில் இயங்குவதாகவே தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய மார்ஜின் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்திருப்பதால், வால்யூம்களும் குறைந்துவிட்டன. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தரகு நிறுவனங்கள் தயாராகாததால், சந்தையில் பங்கெடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலை மேலும் சில நாள்களுக்குத் தொடரலாம். ஆனால், வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் இதற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம்.

பங்குகள்
பங்குகள்

சந்தை குறியீடுகள் தற்போது நிலையாக இருந்து மேலும் ஏற்றத்தை நோக்கி நகர்வதுதான் முக்கியம். அதன் அடிப்படையில் பார்க்கையில், 12500 என்ற நிலையில் நிறைவு பெற கான்ட்ராக்ட்களான லாங்க் கால் ஓப்பன் இன்ட்ரஸ்ட் செப்டம்பர் 10-ம் தேதி எக்ஸ்பைரி சுவராஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் நிஃப்டி அதிக ஏற்றத்தை அடைய வாய்ப்புள்ளது. எனவே, கொஞ்சம் பொறுத்திருந்து போக்கைக் கவனிக்கலாம்.

அதேசமயம், ஹெய்கன் ஆஷி (Heiken Ashi) வாராந்தர நிஃப்டி சார்ட்டில் சந்தையின் போக்கு எந்தவித குறுக்கீடுகளும் இல்லாமல் தொடர்கிறது. இந்தப் போக்கு தொடரும்வரை காளையின்போக்கு தொடரலாம். இறக்கங்களை வாங்கும் வாய்ப்பாகக் கருதலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலி மெடிக்யூர் (POLYMED)

தற்போதைய விலை ரூ.472.95

வாங்கலாம்

நல்ல ஏற்றங்களைக் காணும் மிட்கேப் பார்மா பங்குகளின் பட்டியலில் சர்ஜிக்கல் சார்ந்த சப்ளையில் ஈடுபட்டுள்ள பாலி மெடிக்யூர் நிறுவனப் பங்கையும் சேர்த்துக் கொள்ளலாம். மே மாத இறக்கத்திலிருந்து மீண்ட இந்தப் பங்கு, அதன் பிறகு, வலுவாக ஏற்றம்காணத் தொடங்கியது. தொடர்ந்து நல்ல சப்போர்ட் டிரெண்ட்லைனுடன் நிலையாக இருக்கிறது. இதன் சமீபத்திய விலை நகர்வுகள் சப்போர்ட் டிரெண்ட்லைனுக்கு இறங்கி மீண்டும் ஏற்றமடைய ஆரம்பித்திருக்கிறது. இதன்மூலம் இந்தப் பங்கில் தொடர்ந்து முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பது தெரிகிறது. எனவே, இந்தப் பங்கில் மேலும் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். ரூ.530 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.460-ல் ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

ஆஸ்ட்ரால் பாலி டெக்னிக் (ASTRAL)

தற்போதைய விலை ரூ.1,255.90

வாங்கலாம்

பிளாஸ்டிக் பைப் பிரிவில் ஆஸ்ட்ரால் பாலி முன்னணியில் உள்ளது. இது அதன் சார்ட்டிலும் நீண்டகாலமாகவே பிரதிபலித்து வருகிறது. நிலையான நல்ல ஏற்றம் இந்தப் பங்கில் இருந்துவருகிறது. சமீபத்திய மாதங்களில் இந்தப் பங்கில் ஏற்றம் இறக்கம் இருந்துவருகிறது. இதன் விலை நகர்வுகளைப் பார்க்கும்போது, நல்ல ரவுண்டிங் பேட்டர்ன் அதன் உச்ச நிலையில் உருவாகியிருக்கிறது. இது புதிய முதலீடுகள் உள்ளே வருவதற்கான அறிகுறியாக இருக்கிறது. எனவே, இது புதிய உச்சத்துக்கு நகரலாம். ரூ.1,350-க்கு உயர வாய்ப்புள்ளது. ரூ.1,150 ஸ்டாப்லாஸுடன் வாங்கலாம்.

பங்குகள்
பங்குகள்

ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ்

(JAMNA AUTO)

தற்போதைய விலை ரூ.44.60

வாங்கலாம்

இந்தப் பங்கு 2017-18 காலகட்டத்தில் மிகச் சிறப்பாகச் செயலாற்றியது. அதன்பிறகு, பிற ஸ்மால்கேப் பங்குகளுடன் சேர்ந்து இதுவும் இறக்கம் கண்டது. இந்த இறக்கம் 2020 முதல் காலாண்டு வரையிலும் தொடர்ந்தது. தற்போது இதில் விலை நகர்வு ஏற்றத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. இந்த விலை நகர்வு அதன் ரெசிஸ்டன்ஸ் டிரெண்ட்லைனைக் கடந்து ஏற்றம் அடைந்து முந்தைய உச்ச நிலைகளைத் தொட்டிருக்கிறது. விலைநகர்வு மெதுவாக இருந்தாலும் தொடர்ந்து ஏற்றம் காண்பதற்கான நிலையில் இருக்கிறது. ரூ.37 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம். பங்கின் விலை ரூ.65 வரை உயர வாய்ப்புள்ளது.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/3jKWI14

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism