Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்

பாசிட்டிவான செய்திகள் மூலம்தான் சந்தை மீண்டும் ஏற்றத்தை நோக்கி நகர முடியும்.

டந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தின் இறுதியில் இந்தியப் பங்குச் சந்தையில் காணப்பட்ட இறக்கத்துக்குப் பிறகு, தொடர்ந்து பெரிய அளவில் இறக்கம் இருக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் அதற்குத் தயாராகவே இருந்தனர். ஆனாலும், பங்கு விற்பனைக்கான அழுத்தம் குறைவாக இருந்ததாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற சில முன்னணிப் பங்குகள் மீண்டும் ஏற்றம் கண்டதால், சப்போர்ட் நிலைகள் காப்பாற்றப்பட்டன. நிஃப்டி 11200 என்ற நிலையில் நல்ல டிமாண்ட் காணப்பட்டதால், கரடியின் போக்கிலிருந்து மீண்டு காளையின் பிடிக்கு வர முடிந்தது. இறுதியில் ரிலையன்ஸ் பங்கில் காணப்பட்ட வலுவான ஏற்றம் நிஃப்டியின் போக்கை மீட்டுக்கொண்டு வந்து குறியீட்டை உச்சத்துக்கு நகர்த்தியது.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த வாரத்தில் அச்சுறுத்தக்கூடிய கரடியின் போக்குக்கான பேட்டர்ன் காணப்பட்டாலும் தொடர்ந்து இறக்கம் அடைவதற்கான சூழல் இல்லாததால், சந்தை பாசிட்டிவான போக்குக்கு மாறியது. ஆனாலும், பேட்டர்ன் நிஃப்டியின் ஏற்றத்தை மட்டுப்படுத்தியது. சில புதிய முதலீடுகள் சந்தைக்குள் வந்தால்தான் ஏற்றம் காணப்படும். மேலும், அமெரிக்கச் சந்தைகள் இறக்கம் கண்டதால், அவற்றாலும் இந்தியச் சந்தைகளுக்குப் பெரிய அளவில் உதவ முடியவில்லை. அதே நேரம், நாஸ்டாக் மற்றும் டவ்ஜோன்ஸில் ஏற்படும் இறக்கம் இந்தியச் சந்தைகளில் எதிரொலிக்காது என்றும் சொல்லப்படுவதுண்டு. எனவே, நம்முடைய சந்தை சற்று நெகிழ்வுடன் மீண்டுவரக்கூடிய தன்மையுடன்தான் இருக்கிறது எனலாம்.

நிஃப்டியின் போக்குடன் சேர்ந்து பேங்க் நிஃப்டி நகர முடியவில்லை. காரணம், பிற துறைகளில் காணப்பட்டதுபோல் வங்கிப் பங்குகள் குறிப்பாக, தனியார் வங்கிப் பங்குகளில் பெரிய அளவில் ஏற்றம் காணப்படவில்லை. எனவே, வாராந்தர கேண்டில் பேட்டர்ன் தற்காலிகமானதாகவே தொடர்கிறது. வங்கிப் பங்குகள் மீண்டு வரும்போது இந்தப் போக்கிலிருந்து பேங்க் நிஃப்டி ஏற்றமடையலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பங்குகள்
பங்குகள்

சந்தையில் தற்போது தொடர்ந்து காணப்படும் சிக்கல் குறைவான வால்யூம் களாகும். லாபம் சார்ந்த பிரச்னைகளும், புரோக்கர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் மீது வைத்திருக்கும் கட்டுப்பாடுகளும்தாம் இதற்கு காரணமாகும். இது ஃப்யூச்சர் மார்க்கெட் மட்டுமல்லாமல் ஸ்மால் மற்றும் மிட்கேப் பிரிவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. இதனால் செயல்பாடு குறைந்து காணப்படுகிறது. எனவே, சந்தைக்கு தற்போது மீண்டுவருவதற்கு நிகழ்வுகள் தேவையாக உள்ளன. பாசிட்டிவான செய்திகள் மூலம்தான் சந்தை மீண்டும் ஏற்றத்தை நோக்கி நகர முடியும். அதுவரை சந்தையின் நகர்வுகள் குறைவான வரம்பில் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

ஹெய்கென் ஆஷி சார்ட் வலுவான போக்கிலிருந்து சற்று தள்ளாட்ட நிலைக்கு வந்திருக்கிறது. குறிப்பாக, பேங்க் நிஃப்டி வலுவற்று இருக்கிறது. எனவே, தற்போது சந்தையில் சற்று கவனத்துடன் குறிப்பிட்ட வரம்புக்குள் வர்த்தகம் செய்வது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதானி கேஸ் (ADANIGAS)

தற்போதைய விலை ரூ.208.30

வாங்கலாம்

அனைத்து அதானி குழும பங்குகளுமே புதிய உச்சங்களை அல்லது வரலாற்று உச்சங்களை எட்டியிருக்கின்றன. அதானி கேஸ் பங்கும் நல்ல ஏற்றத்தின் போக்கில் நிலையாக இருக்கிறது. கடந்த வாரத்தில் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

மேலும், தொடர்ந்து ஏற்றமடைவதற்கான சாத்தியங்களுடன் இருக்கிறது. இந்தப் பங்கு ரூ.250 என்ற உடனடி இலக்கைக் கொண்டுள்ளது. ரூ.190 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

இப்கா லெபாரட்டரீஸ் (IPCALAB)

தற்போதைய விலை ரூ.2,049.05

வாங்கலாம்

பார்மா பங்குகள் பலவும் சிறு இறக்கங் களுக்குப் பிறகு, மீண்டும் ஏற்றமடைந்துள்ளன. இப்கா லெபாரட்டரீஸ் பங்கு நீண்டகாலமாகவே முன்னணியில் இருந்துவருகிறது. அதன் சமீபத்திய உச்ச நிலையில் கடந்த ஐந்து வாரங் களாக கன்சாலிடேஷன் போக்கில் இருந்து வருகிறது. தற்போது கன்சாலிடேஷன் போக்கு உடைந்து ஏற்றமடையத் தயாராக இருக்கிறது.

எனவே, ரூ.1,950 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.2,250 வரை உயர வாய்ப்புள்ளது.

அமரராஜா பேட்டரீஸ் (AMARAJABAT)

தற்போதைய விலை ரூ.741.50

வாங்கலாம்

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பேட்டரி நிறுவனப் பங்குகளில் அமரராஜா பேட்டரி நிறுவனப் பங்கின் விலை சார்ட் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. மார்ச் மாதத்தில் இந்தப் பங்கு அடைந்த இறக்கநிலையான ரூ.350 என்பதிலிருந்து இந்தப் பங்கு இதுவரை இரண்டு மடங்கு ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த சப்போர்ட் நிலைகளை மீண்டும் அடைந்திருக்கிறது.

நல்ல மொமன்டம் வலுவான ஏற்றத்தின் போக்கு ஆகியவை இந்தப் பங்கை மீண்டும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. எனவே, ரூ.720 ஸ்டாப்லாஸுடன் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.760 வரை உயரலாம்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் & ஓ பகுதியைப் படிக்க: https://bit.ly/2ZoWkgU