Published:Updated:

தரைதட்டிய வங்கிப் பங்குகள்! - இப்போது வாங்கலாமா?

வங்கிப் பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
வங்கிப் பங்குகள்

தற்போது முதலீட்டை விற்றுவிட்டு சந்தையிலிருந்து வெளியேறுவது தொற்று நோய்போல நடக்கிறது!

தரைதட்டிய வங்கிப் பங்குகள்! - இப்போது வாங்கலாமா?

தற்போது முதலீட்டை விற்றுவிட்டு சந்தையிலிருந்து வெளியேறுவது தொற்று நோய்போல நடக்கிறது!

Published:Updated:
வங்கிப் பங்குகள்
பிரீமியம் ஸ்டோரி
வங்கிப் பங்குகள்
சில வாரங்களுக்கு முன்னர் வரை யெஸ் பேங்க் உட்பட பல பிரச்னைகளால் வங்கிப் பங்குகள் விலை வீழ்ச்சிகண்டன.

கடந்த சில நாள்களாக கொரோனா நோய் காரணமாக பங்குச் சந்தைகள் கணிசமாக இறங்கின. இந்த இறக்கத்தில் மற்ற எல்லாத் துறை பங்குகளையும்விட வங்கித்துறைப் பங்குகள் அதிக இறக்கம்கண்டன. `இதற்கு என்ன காரணம்... இந்த நிலையில் வங்கிப் பங்குகளை வாங்கலாமா...’ என்பதையெல்லாம் குறித்துப் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் விரிவாக விளக்கினார்.

பங்குகள்
பங்குகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘நாம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு வகை வைரஸ், மனிதகுலமே அழிந்துபோய்விடுமோ என்கிற அளவுக்கு மிரட்டி வருகிறது. அநேகமாக நம் தலைமுறையில், முன்னெப்போதும் கண்டிராத உயிரிழப்பைத் தற்போது நாம் சந்தித்துவருகிறோம். பொருளாதாரச் செயல்பாடு, கல்வி, சுகாதாரம், பயணம், சுற்றுலா, உணவு, வர்த்தகம் மற்றும் சமூக வாழ்வின் அடிப்படையான சக மனிதர்களுடன் இணைந்திருப்பது எல்லாமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

பங்குச் சந்தைகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. இதன் வீழ்ச்சி, நாம் எதிர்பார்த்ததைவிடக் கடுமையாக உள்ளது. நிஃப்டி 5000 புள்ளிகள் வீழ்ச்சியடையுமென்றோ, சென்செக்ஸ் 17000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடையுமென்றோ யாரும் எதிர்பார்க்கவில்லை. பங்குச் சந்தை வரலாற்றில் இதற்கு இணையான வீழ்ச்சி இன்னும் சில காலத்துக்கு இருக்காது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வங்கிப் பங்கு விலை வீழ்ச்சி..!

வங்கி மற்றும் நிதிச் சேவை இரண்டும் ஒரு துறையாக அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளுக்குமான கட்டமைப்பையும் வழங்குவதால், இந்தத் துறை எப்போதுமே பங்குச் சந்தையில் வலுவான துறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வங்கிப் பங்குகள்
வங்கிப் பங்குகள்

எனினும், உலகளாவிய பிரச்னைகளாலோ, தொற்றுநோயாலோ அல்லது எதிர்பாராத ஏதேனும் ஒன்றாலோ பாதிக்கப்படும்போது, பங்குச் சந்தையிலுள்ள அனைத்துத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளும் சமமாகப் பாதிக்கப்படும் என்பதை உணர்த்துவதாகவே தற்போது வங்கிப் பங்குகளின் விலையும் வீழ்ச்சிகண்டிருக்கிறது.

மந்தை மனநிலை

இரண்டாவது காரணம், சந்தையிலுள்ள முதலீட்டாளர்களின் மனநிலை. மந்தை மனநிலையிலிருந்து நாம் எப்போதுமே விலகி, தனித்திருக்க வேண்டும். ஆனால், பங்குச் சந்தை முதலீட்டிலோ நாம் மந்தை மனப்பான்மையுடன் (Herd Mentality) இன்னொருவரைப் பார்த்துப் பார்த்துச் செயல்படுகிறோம்.

தற்போது முதலீட்டை விற்றுவிட்டு பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுவது உலகம் முழுக்கத் தொற்று நோய்போல நடக்கிறது. அதற்கு இந்தியப் பங்குச் சந்தையும் விதிவிலக்கல்ல.

யெஸ் பேங்க் பிரச்னை

ஆனால், இதுவே அனைத்துக்கும் காரணமல்ல. சமீபத்திய யெஸ் பேங்க் வீழ்ச்சி, இந்திய வங்கித்துறையைப் பாதித்தது. இதன் பங்கு விலை 5.50 ரூபாய் அளவுக்குக் குறைந்தது. அரசாங்கம், மற்ற வங்கிகள் இதில் தலையிட்டு ஆதரவுக்கரம் நீட்டுவதற்கு முன்னதாக, அடுத்து ஒரு வங்கி பிரச்னையைச் சந்திக்கவிருக்கிறது என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்தத் துறை முதலீட்டுக்கு ஏற்ற தரத்துடன் இருக்கிறதா என்று முதலீட்டாளர்களை சந்தேகம்கொள்ளச் செய்தது. இத்துடன் கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பும் சேர்ந்துகொண்டதால், வங்கிப் பங்குகள் பாதிப்புக்குள்ளாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் Vs நிஃப்டி இண்டெக்ஸ்

நிஃப்டி பேங்க் இண்டெக்ஸை நிஃப்டி இண்டெக்ஸுடன் ஒப்பிடும்போது, வங்கிப் பங்குகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைப் புரிந்துகொள்ள முடியும். 2020, பிப்ரவரி 12-ம் தேதி முதல் மார்ச் 26 வரை நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் சுமார் 47% சரிவைச் சந்தித்தது. அதேவேளையில் நிஃப்டி இண்டெக்ஸ் 37% மட்டுமே சரிவைச் சந்தித்தது. இதன்படி பார்த்தால் நிஃப்டி இண்டெக்ஸைவிட, நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் பெரிய அளவில் சரிவடைந்திருப்பது தெரியவருகிறது.

தரைதட்டிய வங்கிப் பங்குகள்! - இப்போது வாங்கலாமா?

வங்கி இண்டெக்ஸ்களுக்குள் பார்க்கையில், பி.எஸ்.யூ பேங்க் இண்டெக்ஸ் 43%, பிரைவேட் பேங்க் இண்டெக்ஸ் 48% சரிவடைந்துள்ளன.

பொதுத்துறை வங்கிகளைவிட தனியார் வங்கிகள் பெரிதும் சரிந்திருப்பது அண்மைக் காலங்களில் இதுவே முதன்முறை. இவற்றோடு ஒப்பிடுகையில் நிஃப்டி ஆட்டோ இண்டெக்ஸ் 41% சரிந்திருக்கிறது. இதற்கான காரணங்களைப் தெரிந்துகொள்ள சிலவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அ) பெரிதும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி

வட்டி விகிதங்களும், பொருளாதார மந்தநிலை குறித்து அதிகரித்துவரும் கவலையும் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்வது குறித்த முதலீட்டாளர்களின் மனநிலையை மாற்றியிருக்கின்றன. அதிகமாக நஷ்டம் வந்துவிடுமோ என்று முதலீட்டாளர்களுக்கு எழுந்த பயத்தின் பிரதிபலிப்பாகவே வங்கிப் பங்குகளின் விலை சரிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. உலக அளவிலுள்ள பங்குச் சந்தைகளிலும் வங்கித்துறை சார்ந்த பங்குகளிலிருந்து விற்று வெளியேறுவது மிகவும் அதிகரித்திருப்பதால், இதை உலகளாவிய பிரச்னையாகவே பார்க்க முடிகிறது.

ஆ) உலகப் பொருளாதார வளர்ச்சி

`உலகப் பொருளாதார வளர்ச்சி 2.4% என்ற அளவுக்கு இறங்கும்’ என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development - OECD) கணித்திருக்கிறது. மூடீஸ் அமைப்பு `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவிகிதமாகக் குறையக்கூடும்’ என்று கணித்திருக்கிறது. வாராக்கடன் அதிகரித்திருப்பதும், நிகர வட்டி லாப வரம்பு குறைந்திருப்பதும் வங்கிகளின் நிதிச் செயல்பாட்டைப் பாதித்திருப்பதே, பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

இ) நிலுவையிலுள்ள கடன்களின் அளவு

2020, பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் எம்.எஸ்.எம்.இ., சிறிய தொழில் நிறுவனங்கள், சுற்றுலா, ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்டுகள் மற்றும் மலிவு விலை வீட்டுக் கடன் போன்றவற்றில் வங்கிக் கடன் நிலுவை சுமார் ரூ.11 லட்சம் கோடி. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழில் மற்றும் வணிகச் செயல்பாடுகள் அனைத்துமே முடக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கிக் கடன்களைச் சரியாகச் செலுத்துவார்களா என்பது குறித்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.

வங்கிப் பங்குகள்
வங்கிப் பங்குகள்

ஈ) வேலையிழப்பு 

பல துறைகளில் வணிகம் குறைந்திருப்பதால், வேலை இழப்புக்கான சாத்தியங்கள் உயரக்கூடும். வருமான இழப்பு காரணமாக, தனிநபர்களின் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறையக்கூடும். 2019-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு இறுதியில் வெளியான தகவலில் புதிதாக தனிநபர் கடன் வாங்கியவர்களில் 44.8% பேர் ‘சப்-ப்ரைம்’ (Sub-Prime) மற்றும் ‘நியர்-ப்ரைம்’ (Near-Prime) நிலையிலிருக்கிறார்கள். அதாவது, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலிருக்கிறார்கள். மூன்றாவது காலாண்டில் 34.7% பேர் ‘பிலோ ப்ரைம்’ (Below Prime) நிலையில் இருந்திருக்கிறார்கள். கிரெடிட் கார்டுகளைப் பொறுத்தவரை 2019, இரண்டாம் காலாண்டில், ‘சப்-ப்ரைம்’ மற்றும் ‘நியர்-ப்ரைம்’ நிலையில் 32.1% பேர் இருக்கிறார்கள். மூன்றாவது காலாண்டில், ‘சப்-ப்ரைம்’ வரம்பு நோக்கி கிரெடிட் கார்டு மூலம் பொருள்களைக் கடனில் வாங்கியவர்கள் கணிசமாக நகர்ந்திருக்கிறார்கள்.

கடன் கிடைப்பது, குறைவான கடன் தொகை, கடன் வாங்கிப் பொருள்களை வாங்கும் பழக்கம் ஆகியவற்றால் இந்தியாவில் கடன் வளர்ச்சி எளிதில் அதிகரித்துள்ளது. உண்மையாகவே பொதுமக்களின் வருமானம் அதிகரித்து, அதன் மூலம் ஏற்பட்ட வளர்ச்சியாக இதைக் கருத முடியாது.

இந்தியாவில் வங்கித் தலைமைப் பொறுப்பில் நீண்டகாலமாக இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க்கின் நிர்வாக இயக்குநர் ஆதித்ய பூரி, சமீபத்தில் தந்திருக்கும் பேட்டி ஒன்றில், ‘இந்தியப் பொருளாதாரம் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது. இதைக் காப்பாற்றுவதற்கான திட்டமிடலில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஈடுபடாவிட்டால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்’ என்று கூறியிருந்தார். ‘முன்னணி வங்கியாக உள்ள ஹெச்.டி.எஃப்.சி பேங்க் ஜாமீன் கேட்காத கடன்களை அதிகமாக வழங்கியிருப்பதால், வங்கிக்கு பாதிப்பு வருமா’ என்று அவரிடம் கேட்டபோது, ‘அதனால் பாதிப்பு குறைவாக இருக்கும்’ என்று கூறினார்.

இந்த வங்கிக்கே இந்த நிலையென்றால், மற்ற தனியார் வங்கிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் துணை நிறுவனமான ஹெச்.டி.பி ஃபைனான் ஷியல் சர்வீசஸ் நிறுவ னம் வருமானம் சரியில் லாத துறைகளைச் சேர்ந்த நிறுவனங் களுக்கு அதிக கடன் களை வழங்கியதால், தற்போது சிக்கலான நிலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பயம் காரணமாகவே தங்கத்தைப்போல மதிப்புமிக்கதாக இருந்த ஹெச்.டி.எஃப்.சி பேங்க்கின் பங்கு விலை சுமார் 40% அளவுக்கு சரிந்தது. ஹெச்.டி.எஃப்.சி வங்கிக்கே இந்த நிலையென்றால், இன்றைய சிக்கலான சூழலில் மற்ற வங்கிப் பங்குகள் எத்தகைய ரிஸ்க்கில் இருக்குமென்று சொல்ல வேண்டுமா என்ன!

அடுத்து என்ன செய்யலாம்?

பயத்தைக் கைவிடுங்கள். இம்மாதிரியான நேரங்களில் பதற்றத்துடன் விற்றுவிட்டு வெளியேறுவதால் லாபம் கிடைக்கப் போவதில்லை. இதிலிருக்கும் ரிஸ்க்கை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். பங்கு போர்ட்ஃபோலியோ மதிப்பு குறைவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக வேண்டும். சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவில் வங்கிப் பங்குகளில் முதலீடு செய்ய வாய்ப்பிருப்பதால், அவர்களின் போர்ட்ஃபோலியோவில் வங்கிப் பங்குகளின் விகிதம் அதிகமாக இருக்கும். நம்மில் பலரும் நல்ல துறையைத் தேர்வு செய்துவிடுகிறோம். ஆனால், அதிலுள்ள விலை குறைவான பங்குகளில் மட்டுமே முதலீடு செய்கிறோம்.

எது எப்படியோ, இதுவே நம்முடைய முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம். எனவே, போர்ட்ஃபோலி யோவை பேலன்ஸ் செய்வதைச் சிறந்த முறையில் கையாள வேண்டும். நிஃப்டி 12400 என்ற உச்சமான வரம்பில் இருந்தபோது, `சிறிது இறங்கினால் முதலீடு செய்யலாம்’ என்றிருந்தோம். நிஃப்டி 5000 புள்ளிகளுக்குமேல் இறங்கி 7700–க்கு வந்தபோது பயப்படத் தொடங்கினோம். மதிப்புமிக்க பங்குகளை வாங்க இதுவே தகுந்த தருணம். வாங்கிய பிறகு பொறுமையாகக் காத்திருந்தால், மிகப்பெரிய அறுவடையை எதிர்பார்க்கலாம்.

நல்ல அடிப்படை மற்றும் தொழில்நுட்பத்தில் மேலோங்கியிருக்கும் வங்கிப் பங்குகளை வாங்குங்கள். பல பங்குகள் 52 வார குறைவான விலையில் வர்த்தகமாகின்றன.

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான நீண்டகால நோக்கில் வாங்கினால் லாபம் பெரிதாக இருக்கும்” என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism