Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்

கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி

கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்

கமாடிட்டி

Published:Updated:
கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி

மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் நீண்ட தொடர் இறக்கத்துக்குப் பிறகு, ஒரு ரவுண்டிங் பாட்டத்தைத் தோற்றுவித்துள்ளது. மென்தா ஆயில் ரவுண்டிங் பாட்டத்தின் விளிம்பான 1225-ஐ உடைத்து, மிக பலமான ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த ஏற்றம் உச்சமாக 1282-ஐ தொட்டது. மென்தா ஆயில் ரவுண்டிங் பாட்டத்தில் அதன் டார்கெட்டைத் தொட்டது மட்டுமல்லாமல், தொடர்ந்து மேல்நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்

சென்ற வாரம் சொன்னது… “மென்தா ஆயில் வலிமையாக ஏறியுள்ள நிலையில், 1248 முக்கிய ஆதரவாகவும், மேலே 1285 உடனடித் தடைநிலையாக இருக்கிறது.’’

மென்தா ஆயில் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த உடனடித் தடைநிலையான 1285-ஐ உடைத்து நன்கு ஏற ஆரம்பித்திருக்கிறது 11.11.19 அன்று 1281 என்ற எல்லையில் ஆரம்பித்து, அன்று உச்சமாக 1298-ஐ தொட்டது. அதைத் தொடர்ந்து 12.11.19 அன்று 1300-ல் ஆரம்பித்து இன்னும் பலமாக ஏறி, உச்சமாக 1317-ஐ தொட்டது. அதன் பிறகு மெள்ள மெள்ள ரீடிரேஸ்மென்ட் வகையில் இறங்கிக்கொண்டிருக்கிறது. சென்ற வாரத்தின் கடைசி இரண்டு நாள்களும் சற்றே இறங்கிக்கொண்டிருந்தாலும், அது ஸ்பின்னிங் டாப் வகை கேண்டில்களாவே இருந்துள்ளன. இந்த நிலையில் ரீடிரேஸ்மென்ட் முடிந்து ஏறும்போது வலிமையான தடைநிலையைச் சந்திக்க நேரிடும்.

மென்தா ஆயில், தற்போது ஏற்றத்தின் இறக்கத்திலிருக்கிறது. இந்த இறக்கம் தொடர்ந்து வந்தால், 1280 என்ற எல்லை முக்கிய ஆதரவாக இருக்கும். மேலே 1313 என்ற எல்லை முக்கியத் தடைநிலையாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காட்டன்

காட்டன், முந்தைய வாரங்களில் பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையை உடைத்து இறங்கியதைப் பார்த்தோம். இதனால் காட்டன் தற்போது ஒரு டவுன் டிரெண்டுக்கு மாறியிருக்கிறது. முந்தைய வாரங்களில் உச்சமான 20350-ஐ 30.09.19 அன்று தொட்ட பிறகு, மெள்ள மெள்ள லோயர் டாப் அண்ட் லோயர் பாட்டத்தை ஏற்படுத்தி இறங்கிவருகிறது.

சென்ற வாரம் சொன்னது... “காட்டன் இன்னும் டவுன் டிரெண்டில்தான் இருக்கிறது. புதிய இறக்கத்துக்குகுத் தயாரான நிலையில் 19380 முக்கியத் தடைநிலையாகவும், கீழே 19210-ஐ உடனடி ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.’’

காட்டன் சென்ற வாரம், முதல் இரண்டு நாள்கள் தொடர்ந்து இறங்கியது. கீழே 18930 என்ற எல்லையைத் தொட்ட பிறகு, ஒரு புல்பேக் ரேலி மூலம் சற்றே ஏறுமுகமாக மாறியுள்ளது. அதற்கு அடுத்த மூன்று நாள்களிலும் சிறிய சிறிய ஏற்றங் களைக் கொடுத்திருக்கிறது.

இதில் மூன்று ஸ்பின்னிங் டாப்களை உருவாக்கி மெள்ள ஏறி 19200 வரை ஏறியது. அடுத்த நாள் ஏறி உச்சமாக 19290-ஐ தொட்டது. பிறகு சென்ற வாரத்தின் கடைசி நாளன்று ஒரு டோஜியை உருவாக்கியிருக்கிறது. இது அடுத்த திருப்புமுனைக்கான அடையாளம்.

தற்போது காட்டன் புல்பேக் ரேலியிலிருக்கிறது. இந்த நிலையில் 19050-ஐ முக்கிய ஆதரவாகக் கொண்டிருக்கிறது. மேலே 19300 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக உள்ளது.

சென்னா
சென்னா

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. 

சென்ற வாரம் சொன்னது… “சென்னா, பக்காட்டு நகர்வுக்கு மாறியுள்ளது. தற்போது 4420-ஐ முக்கிய ஆதரவாகவும் மேலே 4510-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

சென்னா நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 4420-ஐ உடைத்து இறங்கி 4408 தொட்டுவிட்டு, மேலே மீண்டு எழ ஆரம்பித் துள்ளது.

இந்த ஏற்றம் என்பது நாம் கொடுத்த தடைநிலையான 4420-ஐ உடைத்து, 4529-ஐ தொட்டு பிறகு 4504-ல் முடிந்துள்ளது. சென்னா, நவம்பர் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், டிசம்பர் மாதத்தை எடுத்துக்கொள்வோம்.