Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

சென்னா
பிரீமியம் ஸ்டோரி
சென்னா

சந்தை நிலவரம்...

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

சந்தை நிலவரம்...

Published:Updated:
சென்னா
பிரீமியம் ஸ்டோரி
சென்னா

மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயிலின் ஆறு மாதப் புள்ளிவிவரங்களைக் காணும்போது, நல்ல இறக்கத்துக்குப் பிறகு பக்கவாட்டு நகர்வில் இருந்திருக்கிறது. குறிப்பாக, இறக்கத்தின்போது ஆழ்ந்த இறக்கத்தையும் நடுவே காட்டியிருப்பதால், தற்போது அது ஒரு தலைகீழ் ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பைத் தோற்றுவிப்பதுபோல் உள்ளது.

இதுபோல் தோன்றினால், மேலேயுள்ள தடைநிலை உடைக்கப்பட்டால், அது ஒரு வலிமையான ஏற்றத்துக்கு வழிவகுக்கலாம். அதற்கு மென்தா ஆயில் தேவை வலுவாக அதிகரிக்க வேண்டும் அல்லது வேறு காரணங்களால் உற்பத்தி குறைய வேண்டும்.

மென்தா ஆயில், கடந்த வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1305-ஐ உடைக்க முயன்றது. அதாவது, 1297.50 வரை ஏறி அதன் பிறகு இறங்கி முடிந்திருக்கிறது. சென்ற வாரம் திங்கள் முதல் புதன் வரை ஏற்றத்துக்கான முயற்சியை எடுத்து அதில் தோல்விதான் கண்டது.

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

அதே நேரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1285-ஐ உடைத்து மெதுவாக இறங்க ஆரம்பித்தது. கடந்த வாரம் வியாழன் அன்று கொஞ்சமாகவும், வெள்ளி அன்று நன்கு இறங்கியும் குறைந்தபட்சமாக 1273-ஐ தொட்டது. மேலும் முக்கிய ஆதரவை உடைத்திருக்கும் நிலையில் மென்தா ஆயில் இறங்குமுகமாக மாறியிருக்கிறது. ஆனாலும் புல்பேக் ரேலி வரலாம்.

மென்தா ஆயில் சென்ற வாரம் இறங்கி முடிந்தாலும், முடியும்போது டோஜி அமைப்பில் முடிந்திருக்கிறது. எனவே 1268 என்ற புள்ளியை ஆதரவாக எடுத்து புல்பேக் ரேலி வரலாம். மேலே 1292 உடனடித் தடைநிலை.

தற்போது சென்னா 4318-ஐ ஆதரவாகவும் 4385-ஐ தடை நிலையாகவும் கொண்டிருக்கிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காட்டன்

காட்டன், கடந்த வாரம் ஆரம்பத்தில் பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும், முடியும்போது மிக பலமான ஏற்றத்தில் முடிந்திருக்கிறது.

காட்டன்
காட்டன்

காட்டன் தொடர்ந்து இரண்டு மாதங்களாக பக்கவாட்டு நகர்வில் இருந்த நிலையில், சென்ற வாரம் நாம் கொடுததிருந்த தடைநிலையான 19760-ஐ உடைத்து 20040 என்ற உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

சென்ற வாரம் திங்கள் முதல் வியாழன் வரை சின்ன சின்ன ஏற்றங்களாக இருந்தாலும்,புதிய உச்சங்களைத் தோற்றுவித்துக்கொண்டே வந்தது. ஆனால், வெள்ளி அன்று 19840 என்ற புள்ளியில் ஆரம்பித்து 20050 என்ற உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

காட்டன், வெள்ளி அன்று மிக பலமாக ஏறிய நிலையில் 19890 என்ற எல்லை உடனடி ஆதரவாகவும், மேலே 20140 உடனடித் தடைநிலையாகவும் இருக்கிறது.

சென்னா
சென்னா

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.

சென்னா, அகண்ட பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தப் பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையான 4595-ஐ தொட்ட பிறகு தொடர்ந்து இறங்கிவருகிறது.

சென்னா நாம் கொடுத்திருந்த ஆதரவான 4470-ஐ திங்கள் அன்றே உடைத்து, 4431 என்ற குறைந்தபட்ச எல்லையைத் தொட்டது. அதன் பிறகு புல்பேக்ரேலி மூலமாக 4520 வரை ஏறி, அதற்குப் பிறகு மீண்டும் இறங்க ஆரம்பித்து 4389 என்ற புள்ளியைத் தொட்டிருக்கிறது.

சென்னா ஜனவரி கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், மார்ச் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம்.

தற்போது சென்னா 4318-ஐ ஆதரவாகவும் 4385-ஐ தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.