மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மென்தா ஆயில் ஒரு டவுன் டிரெண்டில் இருந்துவருவது தெளிவாகத் தெரிகிறது. இந்த டவுன் டிரெண்டிலும் ஒரு தலைகீழ் ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பைத் தோற்றுவித்திருப்பதால், ஒரு பிரேக்அவுட் வந்தால் அது வலிமையான ஏற்றத்துக்கு வழிவகுக்கலாம். ஆனால், காலம் கடந்துபோய்க்கொண்டே இருக்கிறது. இந்த அமைப்புக்கு உண்டான பிரேக்அவுட் நிகழாமல், மென்தா ஆயில் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது. இந்த அகண்ட பக்கவாட்டு நகர்வுக்கு மேல் எல்லையாக 1320-ம், கீழ் எல்லையாக 1245-ம் உள்ளன.

மென்தா ஆயில் இறங்குமுகமாக உள்ள நிலையில் 1255 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது

மென்தா ஆயில் கடந்த வாரம் நாம் எதிர்பார்த்தபடியே டோஜி அமைப்புக்கு அடுத்து ஒரு வலிமையான புல்கேண்டில் தோன்றியது. இந்த புல்கேண்டில், நாம் கொடுத்திருந்த ஆதரவான 1268-ஐ தக்கவைத்துக்கொண்டு வலிமையாக ஏறி, மிகச் சரியாக நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1292-ஐ தொட்டது. ஆனால் சென்ற வாரம் செவ்வாய் அன்று, தடைநிலையான 1292-ஐ தாண்ட முடியாமல், கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தது. ஒரு புல்பேக்ரேலி மூலமாக 1278 என்ற புள்ளியிலிருந்து 1292 என்ற புள்ளிவரை ஏறினாலும், தொடர்ந்து ஏற முடியாமல் முன்பிருந்த டவுன் டிரெண்டைப் பின்பற்றி இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் சென்ற வாரத்தின் எல்லா நாள்களும் தொடர்ந்தது. ஆனால், கடந்த வெள்ளி அன்று மட்டும் இறக்கம் தடுக்கப்பட்டு, சற்றே ஏறி ஒரு சுத்தியல் போன்ற அமைப்பைத் தோற்றுவித்தது.

மென்தா ஆயில் இறங்குமுகமாக உள்ள நிலையில் 1255 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 1268-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

காட்டன்

காட்டன், முந்தைய வாரம் முடியும்போது ஒரு பலமான ஏற்றத்துக்கு முயன்றாலும் சென்ற வாரம் அந்த ஏற்றம் முழுவதையும் இழந்துவிட்டது.

சென்ற வாரம் திங்கள் அன்று காட்டன் ஒரு கேப்அப் மூலம் மிக வலிமையாக ஏறி, தடைநிலையான 20140-ஐ தாண்டி, உச்சமாக 20180-ஐ தொட்டாலும், தொடர்ந்து தாக்குப் பிடிக்கமுடியாமல் இறங்கி, 19970-ல் முடிந்தது. அடுத்து செவ்வாய் அன்று நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 19890-ஐ உடைத்து 19690 வரை இறங்கி, முடியும்போது சற்றே ஏறி 19930-ல் முடிந்தது. ஆனால், அடுத்த நாள் பலமாக இறங்கி 19750 என்ற புள்ளியிலும், அடுத்து வியாழன் அன்று இறங்கி 19680 என்ற புள்ளியிலும் முடிந்தது. ஆனாலும் கடந்த வெள்ளி அன்று 19670-ல் தொடங்கி மிக பலமாக ஏறி 19870-ல் முடிந்துள்ளது. காட்டன், சென்ற வார முடிவில் ஒரு வலிமையான புல் கேண்டிலைத் தோற்றுவித்து, 19740 என்ற ஆதரவை உருவாக்கியுள்ளது. மேலே 19920 என்ற எல்லை உடனடித் தடைநிலை.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.

சென்னா 23.12.2019 அன்று 4535 என்ற எல்லையைத் தொட்ட பிறகு, தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்துவருகிறது. சென்ற வாரமும் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4385-ஐ தக்கவைத்துள்ளது. அதன் பிறகு சென்ற வாரத்தின் முதல் மூன்று நாள்கள் பக்கவாட்டு நகர்வில் இருந்தது. வியாழன் அன்று நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4318-ஐ உடைத்து, மிக பலமாக இறங்கி 4283 என்ற புள்ளியைத் தொட்டது.

கடந்த வெள்ளி அன்றும் தொடர்ந்து 4262-ல் இறங்கி முடிந்துள்ளது. சென்னா, முக்கிய ஆதரவை உடைத்து இறங்கிய நிலையில் 4248 உடனடி ஆதரவாகவும், மேலே 4313 தடைநிலையாகவும் உள்ளது.