Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

சென்னா
பிரீமியம் ஸ்டோரி
சென்னா

சந்தை நிலவரம்...

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

சந்தை நிலவரம்...

Published:Updated:
சென்னா
பிரீமியம் ஸ்டோரி
சென்னா

மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் அகண்ட பக்கவாட்டு நகர்வுக்கு மேல் எல்லையாக 1320, கீழ் எல்லையாக 1245 என்று உள்ளது என்று தொடர்ந்து சொல்லிவந்தோம். கடந்த 2019 நவம்பர் முதல் இந்த ஜனவரி மூன்றாவது வாரம் வரை தொடர்ந்து நாம் கொடுத்திருந்த பக்கவாட்டு நகர்வுக்குள் இருந்துவந்த மென்தா ஆயில், ஜனவரி கடைசி வாரத்தில் ஆதரவை உடைத்து மிகப் பலமாக இறங்கியுள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

மென்தா ஆயிலுக்கு நாம் கொடுத்திருந்த ஆதரவான 1268-ஐ உடைத்தது. எப்போதுமே விலை பக்கவாட்டு நகர்வில் நெடுநாள்களாக இருந்தால், அது உடைக்கப்படும்போது எந்தத் திசையில் உடைக்கிறதோ, அந்தத் திசையில் வலிமையாக நகரும்.

அந்த வகையில், மென்தா ஆயில் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1268-ஐ உடைத்த பிறகு மிக வலிமையாக இறங்க ஆரம்பித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக இறங்கிய மென்தா ஆயில், குறைந்தபட்சப் புள்ளியாக 1177-ஐ தொட்டது. ஏறக்குறைய 100 புள்ளிகளைக் குறுகியகாலத்தில் இழந்துள்ளது. இந்த வலிமையான இறக்கத்துக்குப் பிறகு தற்போது ஒரு புல்பேக் ரேலியில் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மென்தா ஆயில், தற்போது 1177 என்ற எல்லையை ஆதரவாகக்கொண்டுள்ளது. அதே நேரம், தற்போது 1212 என்ற எல்லையில் தடுக்கப்பட்டுள்ளது.

காட்டன்
காட்டன்

காட்டன்

காட்டன் நீண்ட நாள்களாகப் பக்கவாட்டு நகர்விலிருந்து 2019 டிசம்பர் கடைசி வாரத்தில் ஏறினாலும், 2020 ஜனவரி மூன்றாவது வாரத்தில் ஏற்றத்தை இழந்து இறங்கி, மீண்டும் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

காட்டன் ஜனவரி மூன்றாவது வாரத்தில் பலமாக இறங்கியபோது, 18950 என்ற எல்லையை ஆதரவாக எடுத்து ஒரு புல்பேக் ரேலியாக மேலே ஏறியது. ஆனால், இந்த ஏற்றம் 19530 என்ற புள்ளியைத் தாண்ட முடியாமல் இறங்கவும் செய்தது.

கடந்த இரு வாரங்களாக காட்டன் இந்த இரண்டு எல்லைகளுக்குள்ளாகவே மேலும் கீழுமாக நகர்ந்துவருகிறது. குறிப்பாக, கடந்த வாரம் மேலே ஏறும்போது 19440 என்ற எல்லையைத் தொட்டு டோஜி அமைப்பைத் தோற்றுவித்து இறங்க ஆரம்பித்தது. தற்போது நீண்டகால ஆதரவு எல்லையாக 18900 உள்ளது. மேலே 19200 என்பது தடைநிலையாக உள்ளது.

சென்னா, கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் புதிய குறைந்தபட்சப் புள்ளியைத் தொட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னா

என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. கடந்த ஜனவரி இரண்டாம் வாரம் வரை ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்துவந்துள்ளது சென்னா. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4248-ஐ தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருந்த சென்னா, ஜனவரி மூன்றாம் வாரத்தில் அந்த ஆதரவை உடைத்து வலிமையாக இறங்க ஆரம்பித்துள்ளது.

சென்னா
சென்னா

ஜனவரி மூன்றாம் வாரத்திலிருந்து தொடர்ந்து இறங்கி வந்துகொண்டேயிருக்கிறது. இந்த இறக்கம் 3982 என்ற புள்ளியைத் தொட்ட பிறகு, ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது.

இந்தப் பக்கவாட்டு நகர்வு நான்கு நாள்களே நீடித்தது. அதன் பிறகு சென்னா மீண்டும் பக்கவாட்டு நகர்வை உடைத்துக்கொண்டு இறங்குமுகமாக மாறியது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து சென்னா இறங்கிவருகிறது.

சென்னா, கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் புதிய குறைந்தபட்சப் புள்ளியைத் தொட்டு வருகிறது.

தற்போது 3975 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும், கீழே 3855 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism