Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

அக்ரி & கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
அக்ரி & கமாடிட்டி

சந்தை நிலவரம்...

மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயிலின் விலை தொடர்ந்து இறங்கியிருக்கிறது. ஆனால், இந்த இறக்கத்துக்குப் பிறகு மென்தா ஆயில் ஒரு வலிமையான திருப்பத்துக்கு முயல்வதுபோலிருக்கிறது என்று கடந்த வாரம் கூறியிருந்தோம். மென்தா ஆயில், பல மாதங்களாக இறங்குமுகமாகவே இருந்துவரும் நிலையில், சென்ற வாரம் நல்ல திருப்பம் நிகழ்ந்துள்ளது. இதுவரை டவுன் டிரெண்ட் லைனுக்கு கீழாகவே இருந்தவந்த மென்தா ஆயில், தற்போது முதல் முறையாகத் தடையை உடைத்து மேலே ஏறி முடிந்துள்ளது. எனவே, பல மாதங்களாக இருந்துவந்த இறக்கத்திலிருந்து திசை மாறி நிற்கிறது. இதை அடுத்தகட்ட ஏற்றத்தின் ஆரம்பத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த வாரம் சொன்னதாவது... ‘‘மென்தா ஆயில் 1111 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டிருக்கிறது. இதை உடைத்தால் பலமான ஏற்றம் வரலாம். கீழே 1060 ஆதரவுநிலை.’’

சென்ற வாரம் மென்தா ஆயிலுக்கு நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1060-ஐ தக்கவைத்துக்கொண்டது. அதன் பிறகு, சென்ற வாரம் திங்கள் அன்றே மிக பலமான ஏற்றத்தைக் கொடுத்தது. இந்த ஏற்றத்தின் பலனாக, அன்றே 1100 என்ற எல்லையைத் தொட்டது. அடுத்த நாள் செவ்வாய் அன்று ஏறி நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1111-க்கு அருகில் சென்று, அதைத் தாண்ட முடியாமல் 1105 வரை ஏறி 1093-ல் முடிந்துள்ளது. அடுத்து புதன் அன்றும் ஏற முயன்றாலும் மீண்டும் நாம் கொடுத்திருந்த 1111 என்ற எல்லையைத் தாண்ட முடியாமல், 1102 என்ற எல்லையில் முடிந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மென்தா ஆயில் இரண்டு நாள்களாகப் பக்கவாட்டு நகர்வில் இருந்த பிறகு சென்ற வாரம் வியாழன் அன்று சற்றே பலமாக ஏறி, தடைநிலையான 1111-ஐ உடைத்து 1119 என்ற உச்சத்தைத் தொட்டது. தடை உடைக்கப் பட்டதால், சந்தை கரடிகள் கைகளிலிருந்து காளைகள் கைக்கு மாறியது. மென்தா ஆயில் பலமாக ஏறி உச்சமாக 1160-ஐ தொட்டது.

மென்தா ஆயில்
மென்தா ஆயில்

மென்தா ஆயில் தற்போது 1115 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 1177 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

காட்டன்

காட்டன் தொடர்ந்து இறங்குமுகமாக உள்ள நிலையில் முந்தைய வாரம் ஒரு பாட்டத்தை ஏற்படுத்த முயன்றது.

ஆனால், சென்ற வாரமும் மேலே ஏற முடியாமல் பக்கவாட்டு நகர்விலேயே முடிந்திருக்கிறது.

சென்ற வாரம் காட்டனுக்கு நாம் தந்திருந்த தடைநிலையான 16700-ஐ தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. சென்ற வாரம் திங்கள் அன்று உச்சமாக 16640-ஐ தொட்ட பிறகு, இறங்குமுகமாக மாறியது. அன்றே நாம் கொடுத்திருந்த ஆதரவான 16190-ஐ உடைத்து 16150 வரை இறங்கியது. அடுத்த நாளும் தொடர்ந்து இறங்கி 15810-ஐ தொட்டது. பின் பக்கவாட்டு நகர்விலேயே வாரம் முடிந்தது. காட்டன் தற்போது 16460-ஐ தடைநிலையாகவும், கீழே 15810-ஐ ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.

சென்னா
சென்னா

சென்னா

(என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.) 

சென்னா 13.03.2020 வரை இறங்குமுகமாகவே இருந்தது. அதன் பிறகு திசை திரும்பி ஏறுமுகமாக மாறியது. இந்த ஏற்றம் 3688 என்ற குறைந்தபட்சப் புள்ளியில் ஆரம்பித்து, இரண்டு வாரங்களுக்கு மேலாக ஏறியது. உச்சமாக 30.03.20 அன்று 4337 என்ற புள்ளியைத் தொட்டது. அத்துடன் ஏற்றம் முடிந்து, கடந்த வாரம் முழுவதும் இறங்குமுகமாகவே முடிந்திருக்கிறது.

சென்னா, தற்போது 4215 என்ற எல்லையை தடைநிலையாகவும், மேலே 4071 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது.