மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் குறித்துப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் கடந்த ஐந்து மாதங்களாகத் தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்துவருகிறது. இந்தத் தொடர் இறக்கத்தின்போது நடுநடுவே சில புல்லிஷ் பேட்டர்ன்கள் உருவாகி, அந்த பேட்டர்ன்கள் டார்க்கெட்டை அடைந்த பிறகு, மீண்டும் தொடர் இறக்கத்தில் இருந்துவருகிறது. அது போன்ற புல்லிஷ் பேட்டர்ன் உருவாகி, பிப்ரவரி 25-ம் தேதி டார்கெட்டின் உச்சமாக 1245-ஐ தொட்டு, பின் மீண்டும் தற்போது இறங்குமுகமாக மாறியிருக்கிறது.

முந்தைய வாரம் சொன்னது... ‘‘மென்தா ஆயில், தற்போது 1144 என்ற எல்லையை ஆதரவாக எடுத்திருக்கிறது. மேலே 1166 என்ற எல்லை உடனடித் தடைநிலை. இதை உடைத்து ஏறினால் 1190-ஐ நோக்கி நகரலாம்.’’

மென்தா ஆயில், கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர் இறக்கத்தில் இருந்துவருகிறது. ஆனால், சென்ற வாரம் இந்தத் தொடர் இறக்கத்துக்கு முடிவு கட்டுவதுபோல் ஒரு ‘மார்னிங் ஸ்டார் கேண்டில்’ உருவமைப்புத் தோன்றி, மேலே ஏறத் தொடங்கியிருக்கிறது. சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த 1144 என்ற எல்லையைத் திங்கள் அன்றே உடைத்து பலமாக இறங்கி, குறைந்தபட்சமாக 1093 என்ற புள்ளியைத் தொட்டது. அடுத்து செவ்வாய் அன்று ஒரு ‘ஸ்பின்னிங்டாப்’பை உருவாக்கியுள்ளது. இதனால் இறக்கத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம். அடுத்து புதன் அன்று 1123 என்ற புள்ளியில் ஆரம்பித்து, உச்சமாக 1165-ஐ தொட்டது. இதுவே ‘மார்னிங் ஸ்டார்’ உருவமைப்புத் தோன்றக் காரணமாக இருந்திருக்கிறது. வியாழன் அன்று இன்னும் பலமாக ஏறி, உச்சமாக 1210-ஐ தொட்டாலும், அது 50 நாள் மூவிங் ஆவரேஜ் கோட்டைத் தொட்டு கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்துள்ளது. சென்ற வாரம் வெள்ளி அன்று தொடர்ந்து இறங்கி ஒரு ரீடிரேஸ்மென்ட்டில் உள்ளது.

மென்தா ஆயில், மார்ச் கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி ஏப்ரல் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்ளலாம். தற்போது 1080 என்ற எல்லை ஆதரவாகவும், மேலே 1120 தடைநிலையாகவும் உள்ளன.

காட்டன்

காட்டன் ஜனவரி 2020-ன் இரண்டாம் வாரத்திலிருந்தே இறக்கத்திலிருந்துவருகிறது. நடு நடுவே சில புல்பேக் ரேலிகள் வந்தாலும் இன்னமும் தொடர் இறக்கத்தில்தான் இருந்துவருகிறது.

சென்ற வாரம் சொன்னது... ‘‘காட்டன் தற்போது 18060 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 18580-ஐ தடை நிலையாகவும் கொண்டிருக்கிறது.’’

காட்டன் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 18060-ஐ உடைத்து இறங்கி 17830-ஐ திங்கள் அன்றே தொட்டது. அதன் பிறகு செவ்வாய் அன்று சிறிய புல்பேக் ரேலி மூலம் 18100-ஐ தொட்டாலும், அடுத்து புதன் அன்று மிக மிக வலிமையாக இறங்கி 17530 என்ற புள்ளியைத் தொட்டது. பிறகு தொடர்ந்து இறங்கி வியாழன் அன்று 17050 என்ற புள்ளியைத் தொட்டது. வெள்ளி அன்று வலிமை குன்றிக் காணப்பட்டாலும், சிறிய அளவில் ஒரு பக்கவாட்டு நகர்வில் முடிந்திருக்கிறது.

காட்டன், மார்ச் கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி ஏப்ரல் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம்.

காட்டன் தற்போது 17330-ஐ உடனடி ஆதரவாகவும், மேலே 17680-ஐ தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.
.கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி.
சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்னா, சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 3645-ஐ தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. தடைநிலையான 3810-ஐ உடைத்து செவ்வாய் அன்று 3830-ஐ தொட்டது. இந்த நாளிலிருந்து சென்னா ஒரு புல்பேக் ரேலி மூலமாக ஏற ஆரம்பித்துள்ளது. இந்த ஏற்றம் சென்ற வாரம் வெள்ளி வரை தொடர்ந்து உச்சமாக 4021-ஐ தொட்டு, ஒரு ‘ஷூட்டிங் ஸ்டாரை’ உருவாக்கியிருப்பதால், மீண்டும் இறக்கம் தொடர வாய்ப்பிருக்கிறது.

சென்னா தற்போது 3880-ஐ உடனடி ஆதரவாகவும், மேலே 4022-ஐ தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது!