தங்கம், வெள்ளி, காப்பர், கச்சா எண்ணெயின் போக்கு குறித்துப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

கடந்த வாரத்தில் முதலில் இறங்கி, பின்னர் உயர்ந்த பங்குச் சந்தைபோலவே, தங்கமும் முந்தைய வாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து, பிற்பாடு உயர்ந்தது. சென்ற வாரம் திங்கள் அன்று கடுமையான வீழ்ச்சியடைந்த பிறகு, அந்த அதிகபட்ச புள்ளி மற்றும் குறைந்தபட்ச புள்ளிகளுக்கிடையே சுழன்றது.

தங்கம் சென்ற வாரம் தந்த ஆதரவு எல்லையான 41200-ஐ உடைத்து இறங்கி, குறைந்தபட்ச புள்ளியாக 38419-ஐ தொட்டது. அதற்கு அடுத்தடுத்த நாள்களில் நிச்சயமற்ற தன்மையிலேயே இருந்துவந்தது. மேலும் கீழும் வேகமான நகர்வுகளைக் கொண்டிருந்தாலும், முடியும்போது இறக்கத்தில் முடிந்தது.

ஒவ்வொரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச புள்ளிகளின் அளவு குறைந்துகொண்டே வந்திருக்கிறது. இப்படிச் சுருங்குவது, ஒரு பலமான நகர்வுக்குத் தயாராவதைக் குறிக்கிறது. சென்ற வாரம் வெள்ளி அன்று இந்தச் சுருக்கத்தின் தடைநிலையான 40400-ஐ உடைத்து பலமாக ஏற ஆரம்பித்துள்ளது.

தங்கம் மீண்டும் பலமாக ஏற முயன்றாலும், மேலே 41280 பலமான தடைநிலை. கீழே 39800 முக்கிய ஆதரவாக உள்ளது.
.கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்.
வெள்ளி (மினி)

வெள்ளி, தொடர்ந்து இரண்டாவது வாரமாக வீழ்ச்சியடைந்தாலும், தங்கத்தைவிட தொடர்ந்து பெரிய அளவில் இறங்கியுள்ளது. வெள்ளி சென்ற வாரம் நாம் தந்த ஆதரவு எல்லையான 42400-ஐ மிக பலமாக உடைத்து இறங்கி, குறைந்தபட்சப் புள்ளியாக 33300-ஐ தொட்டது. சென்ற வாரம் முழுவதும் வலிமை குன்றி காணப்பட்டாலும், கடைசி நாளன்று ஏற முயன்றது.

வெள்ளி ஏப்ரல் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி ஜூன் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம். வெள்ளி மேலே 38800-ஐ தடைநிலையாகவும், கீழே 35700-ஐ ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

கச்சா எண்ணெய் ஏற்கெனவே கடுமையான வீழ்ச்சியிலிருக்கும் நிலையில், சென்ற வாரமும் இன்னும் ஒரு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. கொரோனா வைரஸ் தாக்கம், உலகப் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும்; எனவே, கச்சா எண்ணெய் தேவை குறையலாம் என்பதே உண்மை.

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவுநிலையான 2430-ஐ உடைத்து பலமாக இறங்கியது. அடுத்தடுத்த நாள்களிலும் தொடர்ந்து இறங்கி 1717 என்ற புள்ளியைத் தொட்டு மேலே திரும்பியிருக்கிறது.

கச்சா எண்ணெய் மேலே ஏறுவதற்கு முயன்றுவரும் நிலையில் 2288 என்ற எல்லை முக்கியத் தடைநிலை. கீழே 1890 ஆதரவு நிலை.

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும்.

காப்பர், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 418-ஐ உடைத்து மெள்ள மெள்ள இறங்கினாலும், சென்ற வாரம் புதன் அன்று மிகக் கடுமையாக இறங்கி 379.90-ஐ தொட்டது. அதன் பிறகு வியாழன் அன்று மீண்டும் கடுமையாக இறங்கி 335.95-ஐ தொட்டு மீண்டு எழ ஆரம்பித்துள்ளது.

காப்பர் மார்ச் மாத கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி ஏப்ரல் மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். தற்போது உடனடித் தடைநிலை 392. கீழே 366 ஆதரவு.