Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

மென்தா ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
மென்தா ஆயில்

சந்தை நிலவரம்...

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

சந்தை நிலவரம்...

Published:Updated:
மென்தா ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
மென்தா ஆயில்

மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் இன்னமும் தொடர்ந்து ஒரு டவுன் டிரெண்டில் இருந்துவருகிறது என்று கூறி வருகிறோம். 2019 நவம்பர் மாதத்தில் ஆரம்பித்த இறக்கம், 2020 பிப்ரவரியில் தொடர்வதையும் எழுதியிருந்தோம். இந்த நிலையில், மென்தா ஆயில் ஒரு புல்பேக் ரேலிக்கு தயாராகி வரலாம். எனவே, முதற்கட்ட தற்காலிக ஏற்றம் இப்போது நிகழலாம். இந்த ஏற்றம் வலுவாக மாறினால், அது ஓர் இடைக்கால ஏற்றமாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களில் ஒரு பக்கவாட்டு நகர்விலிருந்து, அதன் பிறகு சற்றே ஏறுவதற்கு முயல்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் அது ஒரு தலைகீழ் ஹெட் அண்ட் ஷோல்டர் அமைப்பாக மாறலாம்; 1200-ஐ தாண்டினால் அது 1265 என்ற எல்லையை அடைய வாய்ப்பிருக்கிறது.

முந்தைய வாரம் சொன்னது... “மென்தா ஆயில் இனி மார்ச் 2020 கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். மென்தா ஆயில், தற்போது 1165 என்ற எல்லையை முக்கியத் தடைநிலையாகக் கொண்டிருக்கிறது. உடைத்தால் நல்ல ஏற்றம் வரலாம். கீழே 1135 என்ற எல்லை மிக முக்கிய ஆதரவாக உள்ளது.’’

மென்தா ஆயில் முன்பு கொடுத்திருந்த ஆதரவுநிலையான 1135-ஐ தக்கவைத்துக்கொண்டு ஏற ஆரம்பித்தது. சென்ற வாரம் திங்கள் அன்றே நாம் கொடுத்்திருந்த தடைநிலையான 1165-ஐ உடைத்து ஏறியது. இந்த ஏற்றத்தால், மென்தா ஆயில் உச்சமாக 1189-ஐ தொட்டது. அடுத்து சென்ற வாரம் செவ்வாய் அன்று ஒரு கேப்அப்பில் தொடங்கி உச்சமாக 1201-ஐ தொட்டாலும் தொடர்ந்து ஏற முடியாமல், சற்றே இறங்கி 1177-ல் முடிந்தது. ஆனாலும், அடுத்தடுத்த நாள்களில் பெரிய ஏற்ற இறக்கமின்றி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நகர்ந்து ஒரு பக்கவாட்டு நகர்வாக மாறியுள்ளது.

மென்தா ஆயில் பக்கவாட்டு நகர்விலுள்ள நிலையில் 1202 என்ற எல்லை தடைநிலையாக உள்ளது; உடைத்தால் வலிமையான ஏற்றம் வரலாம். கீழே 1164 உடனடி ஆதரவு.

மென்தா ஆயில் பக்கவாட்டு நகர்விலுள்ள நிலையில் 1202 என்ற எல்லை தடைநிலையாக உள்ளது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காட்டன்

காட்டன் தொடர் இறக்கத்திலிருந்து வருவதையும் அதன் பிறகு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியிருப்பதையும் குறிப்பிட்டிருந்தோம். காட்டன் பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையை உடைத்து மீண்டும் ஒரு பலமான இறக்கத்துக்கு மாறியுள்ளது.

காட்டன்
காட்டன்

காட்டன் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 19420-ஐ தக்கவைத்துக்கொண்டு, ஆதரவுநிலையான 18840-ஐ உடைத்து பலமாக இறங்கியது. சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொஞ்சம் தாக்குப் பிடித்தாலும் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பலமாக இறங்கி குறைந்தபட்சப் புள்ளியாக 17850-ஐ தொட்டது. காட்டன் பலமாக இறங்கிய நிலையில் 18120-ஐ ஆதரவு எடுத்துள்ளது. மேலே உடனடித் தடைநிலையான 18575-ஐ உடைத்தால் புல்பேக் ரேலி வரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னா

சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. 

கடந்த வாரம் சொன்னது... “சென்னா, புல்பேக் ரேலி முடிந்து இறங்க ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கதில் 3905 என்ற எல்லை முக்கிய ஆதரவாகவும், மேலே 4020 முக்கியத் தடைநிலையாகவும் உள்ளன.’’

கமாடிட்டி  டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

கடந்த மூன்று வாரகால நகர்வை எடுத்துக்கொண்டால், இறக்கத்தைத் தடுத்து முதல் வாரம் ஏறியது; இரண்டாம் வாரத்தில் ஒரு ரீடிரேஸ்மென்ட் இறக்கம் நிகழ்ந்திருக்கிறது. அடுத்து கடந்த வாரம் பக்கவாட்டு நகர்வில் முடிந்துள்ளது.

தற்போதுள்ள பக்கவாட்டு நகர்வில் 4006-ஐ தடை நிலையாகவும், கீழே 3910-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது. எந்தப் பக்கம் உடைக்கிறதோ அந்தப் பக்கம் வலுவாக நகரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism