Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

காட்டன்
பிரீமியம் ஸ்டோரி
காட்டன்

சந்தை நிலவரம்...

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

சந்தை நிலவரம்...

Published:Updated:
காட்டன்
பிரீமியம் ஸ்டோரி
காட்டன்
மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

மென்தா ஆயில்

மென்தா ஆயில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து 1163 என்ற புள்ளியிலிருந்து இறங்க ஆரம்பித்தது. இதுவே ஒரு தொடர் இறக்கமாக மாறி, மார்ச் 24-ம் தேதி வரை தொடர்ந்தது. அதன் பிறகு ஒரு பாட்டத்தை ஏற்படுத்தி, மேல்நோக்கித் திரும்பியது. மார்ச் மாதத்தின் இறுதியில் 1035 என்ற புள்ளியை வலிமையான ஆதரவாக எடுத்து, மேலே ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தைத் தோற்றுவித்துக் கொண்டேயிருந்தது. மென்தா ஆயிலின் ஏற்றம் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் வரை தொடர்ந்தது. அந்த ஏற்றத்தின் உச்சமாக மென்தா ஆயில், 1335 என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனாலும், அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் கீழ்நோக்கி இறங்கியது. அதன் பிறகு தற்போது ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியிருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங்! அக்ரி & கமாடிட்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முந்தைய வாரம் சொன்னது... “மென்தா ஆயில் தற்போது 1238 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 1266 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.’’

மென்தா ஆயில் சென்ற வாரம், ஒரு தொடர் பக்கவாட்டு நகர்விலேயே இருந்துவந்தது. சென்ற வாரத்தின் முதல் இரண்டு நாள்கள் மென்தா ஆயில் நாம் கொடுத்திருந்த

தடைநிலையான 1266-ஐ தாண்டி ஏற முயற்சி செய்தது. ஆனால் முடியும் தருவாயில், இறங்கி 1247 என்ற புள்ளியில் முடிந்தது. தொடர்ந்து ஏற முடியாத நிலையில் மென்தா ஆயில் ஒரு கேப் டவுன் மூலம் இறங்கி, குறைந்தபட்சப் புள்ளியாக 1226-ஐ தொட்டது. இதன் மூலம் நாம் கொடுத்திருந்த ஆதரவுநிலையான 1266 உடைக்கப்பட்டது. ஆனாலும், இறக்கத்தின் முடிவில் டோஜி உருவ அமைப்பு தோன்றியது. இதன் மூலம் இறக்கம் தடுக்கப்பட்டு, மென்தா ஆயில் மீண்டும் ஏறத் தொடங்கியது. இந்த ஏற்றம் தற்போது 1277 என்ற எல்லையில் வலுவாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. மென்தா ஆயில் தற்போது 1226 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 1277 என்ற எல்லையை உடனடி தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காட்டன்

காட்டன், தற்போது ஓர் அகண்ட பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. இதன் நகர்வு பக்கவாட்டிலிருந்து வந்தாலும், ஒரு டபுள் பாட்டம் அமைப்பைத் தோற்றுவித்திருக்கிறது. இதன் மூலம் காட்டன் தடைநிலையை உடைத்து ஏறினால், ஒரு வலிமையான ஏற்றத்தைக் கொடுக்கலாம். சென்ற வாரம் சொன்னது... “காட்டன், ஓர் அகண்ட பக்கவாட்டு நகர்விலிருக்கிறது. கீழே 16240-ஐ ஆதரவாகவும், மேலே 16700-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

காட்டன்
காட்டன்

காட்டன் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவுநிலையான 16240-ஐ உடைத்து இறங்கியது. ஆனால், 16100 என்ற புள்ளியை ஆதரவாக எடுத்து மீண்டும் மேலே ஏறியுள்ளது. இந்த ஏற்றம் 16740 வரை உயர்ந்தாலும், முடியும்போது நாம் கொடுத்திருந்த தடைநிலையான 16700 என்ற புள்ளிக்குக் கீழாகவே முடிந்திருக்கிறது.

காட்டன் இன்னும் பக்கவாட்டு நகர்விலேயே இருந்து வருவதால், தற்போது 16100 முக்கிய ஆதரவாகவும், மேலே 16800 வலிமையான தடைநிலையாகவும் உள்ளது.

சென்னா

சென்னா
சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. கடந்த வாரம் சொன்னது... “ஏப்ரல் மாத கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி மே மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம். சென்னா, தற்போது 4145-ஐ ஆதரவாகவும், மேலே 4255-ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’ சென்னா, மார்ச் இரண்டாம் வாரத்திலிருந்து வலிமையாக ஏற ஆரம்பித்தது. 3798 என்ற புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்தநிலையில் உச்சமாக 4299-ஐ தொட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகப் பக்கவாட்டு நகர்விலுள்ளது. இது ஒரு முக்கோண வடிவத்தில் உள்ளது. இது மேல் எல்லையை உடைத்து ஏற ஆரம்பித்துள்ளது.

சென்னா தற்போது வலிமையாக ஏற ஆரம்பித்த நிலையில், 4128-ஐ முக்கிய ஆதரவாகவும், மேலே 4260 தடைநிலையாகவும் உள்ளது.