Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி

கமாடிட்டி

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

கமாடிட்டி

Published:Updated:
கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி) 

தங்கத்தின் வளர்ச்சி குன்ற ஆரம்பித்த பிறகு, மூன்று ஸ்பின்னிங் டாப் வகை கேண்டில்கள் தோன்றி, தங்கத்தின் இறக்கத்தைத் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தி மேலே திருப்ப ஆரம்பித்துள்ளன. முன்பு, தங்கம் தொடர் பக்கவாட்டு நகர்வில் இருந்ததைப் பார்த்தோம். அந்த வாரத்தின் முடிவில், பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லையை உடைத்து இறங்கியது. இந்த இறக்கம் இன்னும் பலமாகக் கூடியிருக்கும். ஆனால், காளைகள் கொஞ்சம் தங்கத்தைத் தூக்கி நிறுத்திவைத்துள்ளன. இனி, இது தாக்குப்பிடிக்குமா என்று பார்க்க வேண்டும்.

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தைப் பயிற்சி மையம், www.ectra.in
தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தைப் பயிற்சி மையம், www.ectra.in

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் முந்தைய ஆதரவான 38030-ஐ தற்போது தடைநிலையாகக் கொண்டிருக்கிறது. கீழே 37350-ஐ அடுத்த ஆதரவாகக் கொண்டிருக்கிறது.”

தங்கம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 37350-ஐ தக்கவைத்துக்கொண்டு மேல்நோக்கி நகர ஆரம்பித்தது. மேலே தொடர்ந்து ஏறும்போது, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 38030-ஐ உடைத்து பலமாக ஏறியுள்ளது. சென்ற வாரத்தின் கடைசி இரண்டு தினங்கள் ஏறி உச்சமாக 38295-ஐ தொட்டது. அதன் பின்னர் சற்றே வலிமை குன்ற ஆரம்பித்துள்ளது. இந்த இறக்கம் தொடர்ந்தால், அடுத்த இலக்கு 37720-ஆக இருக்கலாம்.

தங்கம் தற்போது 37220-ஐ முக்கிய ஆதரவாகவும், 38300 என்ற எல்லையைத் தடைநிலையாகவும்கொண்டு இயங்கிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

வெள்ளி (மினி)

வெள்ளி சென்ற வாரம் வலிமையான இறக்கத்திலிருந்து சற்றே மீண்டிருக்கிறது. அடுத்து ஒரு புல்பேக் ரேலிக்கும் முயல்கிறது. இந்த புல்பேக் ரேலி முடிவுக்கு வருவதைப்போல்தான் இருக்கிறது. அடுத்தகட்ட இறக்கம் வலிமையாக மாறலாம்.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி வலிமை குன்றிவரும் நிலையில் 44500-ஐ வலிமையான தடைநிலையாகவும், கீழே 43400-ஐ முக்கிய ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.’’

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையைத் தக்கவைத்துக்கொண்டு, ஆதரவை உடைத்து பலமாக இறங்கியிருக்கிறது. இந்த இறக்கத்த்துக்குப் பிறகு தற்போது ஒரு புல்பேக் ரேலிக்கு மாறியிருக்கிறது. ஆனாலும், இந்த புல்பேக் ரேலி தடுக்கப்பட்டு கீழே திரும்பினால் பலமான இறக்கம் வரலாம்.

வெள்ளி தற்போது 43820 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 44700ஐ தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய், நாம் முன்பு கொடுத்த தடைநிலையான 3940-ஐ ஆதரவாகக்கொண்டுள்ளது. மேலே 4100 வலிமையான தடை நிலையாக உள்ளது.’’

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

கச்சா எண்ணெய் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையன 3940-ஐ சென்ற வாரம் முழுவதும் தக்கவைத்திருக்கிறது. அதேநேரம் கொடுக்கப்பட்ட தடைநிலையான 4100 உடைத்து ஏறி, 4157 வரை சென்று, பின் சற்றே இறங்கி ஒரு பக்கவாட்டு நகர்வில் இருக்கிறது.

கச்சா எண்ணெய் நவம்பர் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி நாம் டிசம்பர் கான்ட்ராக்டை எடுத்துக்கொள்வோம். தற்போதைய ஆதரவு எல்லை 4000 ஆகும். மேலே உடனடித் தடைநிலை 4180.

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது, கவனமாக வியாபாரம் செய்யவும்.

சென்ற வாரம் சொன்னது… “காப்பர் தற்போது 441ஐ உடனடி ஆதரவாகவும், மேலே 447.50 வலிமையான தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

காப்பர், நாம் கொடுத்திருந்த தடைநிலை எல்லையான 447-ஐ தக்கவைத்துக்கொண்டு, இறங்க ஆரம்பித்தது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 441-ஐ உடைத்து இறங்கி 437 என்ற புள்ளியைத் தொட்டது. தற்போது அகண்ட பக்கவாட்டு நகர்வின் கீழ் எல்லைக்கு அருகிலுள்ளது.

காப்பர், நன்கு இறங்கிய நிலையில் 435-ஐ ஆதரவாக எடுக்க வாய்ப்பிருக்கிறது. மேலே 441.50 என்ற எல்லை தடைநிலையாக உள்ளது!