தங்கம் (மினி)

தங்கம் செப்டம்பர் 2019-லிருந்து இன்றுவரை ஒரு அகண்ட பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. பெரும்பாலும் மேல் எல்லையான 38590-ல் தடுக்கப்பட்டு கீழே இறங்குவதும், கீழ் எல்லையான 37450-ல் ஆதரவை எடுத்து மேலே நகர்வதும் மாறி மாறி நிகழ்ந்துவருகிறது. இந்த நிலையில், தங்கம் தற்போது இறங்கி கீழ் எல்லையில் வந்து, அந்த ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

தங்கம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 38300-ஐ தக்க வைத்திருக்கிறது. சென்ற வாரம் திங்கள் அன்று சற்றே ஏறி 38250 வரை சென்று, தடைநிலையான 38300-ஐ உடைக்க முடியாமல் இறங்கி 38060-ல் முடிந்தது. செவ்வாய் அன்று நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 37850-ஐ உடைத்து, அதற்கு அருகிலேயே முடிந்தது.

தொடர்ந்து சென்ற வாரம் புதன் மற்றும் வியாழன் அன்று இறக்கம் தொடர்ந்து, குறைந்தபட்சப் புள்ளியாக 37575 என்ற எல்லையைத் தொட்டது. அதன் பிறகு வெள்ளி அன்று சற்றே மேலே திரும்பி புல்பேக் ரேலியாக ஏற ஆரம்பித்திருக்கிறது.

வெள்ளி தற்போது 44540 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 45200-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

தங்கம் டிசம்பர் கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் நுழைகிறது. இனி ஜனவரி 2020 கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம். கீழே 37450 என்ற எல்லையை ஆதரவாக எடுத்து மேலே ஏற ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் 37550 என்பது உடனடி ஆதரவாகவும், மேலே 38150 வலிமையான தடைநிலையாகவும் உள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளி மீண்டும் குறுகிய எல்லையின் ஆதரவை நோக்கி நகர்ந்து வருகிறது. வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 45050-ஐ சென்ற வாரம் திங்கள் அன்றே உடைத்து இறங்கியது. செவ்வாய் அன்று கொஞ்சம் தாக்குப்பிடித்து நின்றாலும், புதன் அன்று வலிமையாகவே இறங்கி கீழே 44700 என்ற புள்ளியைத் தொட்டது.

அதன் பிறகு மேலேயும் போகாமல், கீழேயும் போகாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் (மினி)

கச்சா எண்ணெய் நாம் கொடுத்த ஆதரவான 4100-ஐ தக்கவைத்துள்ளது. சென்ற வாரம் திங்கள் முதல் புதன் வரை இறங்கி வரும்போதெல்லாம் 4100-க்கு அருகில் வந்து மேலே திரும்பியிருக்கிறது. மேலே நாம் கொடுத்திருந்த தடை நிலையான 4270-யும் தக்கவைத்துள்ளது. எனவே, இதுவும் ஒரு பக்கவாட்டு நகர்வுதான்.

கச்சா எண்ணெய் இன்னும் 4100-ஐ ஆதரவாகவே கொண்டுள்ளது. மேலே 4220 என்ற எல்லை உடனடித் தடைநிலை.

காப்பர்

மெகா லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும்.

காப்பர், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 433-ஐ தொட்டு சற்றே இறங்கி, மீண்டும் 433-க்கு மேலே ஏறியிருக்கிறது. மேலே நாம் கொடுத்திருந்த தடைநிலையான 439 என்ற எல்லையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சென்ற வாரம் மேல் எல்லையிலிருந்து இறங்கி கீழ் எல்லைக்கு வந்திருக்கிறது.

காப்பர் ஒரு தொடர் இறக்கத்திலுள்ள நிலையில் 431 மிக முக்கிய ஆதரவு எல்லை. இதை உடைத்தால் பலமான இறக்கம் வரலாம். மேலே 437 உடனடித் தடைநிலை.