Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

காப்பர்
பிரீமியம் ஸ்டோரி
காப்பர்

சந்தை நிலவரம்...

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

சந்தை நிலவரம்...

Published:Updated:
காப்பர்
பிரீமியம் ஸ்டோரி
காப்பர்

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

கடந்த ஒரு வார காலத்தில் ஒரு பெரிய ஏற்றத்தையும் ஒரு பெரிய இறக்கத்தையும் சந்தித்திருக்கிறது. இதை, `ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு’ என்றுகூடச் சொல்லலாம். பொதுவாக, அரசியல் நிலைமையிலும் பொருளாதார நிலைமையிலும் நிச்சயமற்ற தன்மைகள் நிகழும்போது பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைத் தங்கத்தை நோக்கி நடத்துவார்கள். கடந்த வாரம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இருந்த போர்ச் சூழல், என்ன நடக்குமோ என்ற அச்சத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தங்கம் மிக பலமாக ஏறி உச்சமாக 41270-ஐ தொட்டது. அதன் பிறகு பதற்றம் தணிந்த காரணத்தால், அந்த ஏற்றத்தின் பெரும் பகுதியை இழந்து 39600 என்ற எல்லையை நோக்கி நகர்ந்திருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங்!  மெட்டல் & ஆயில்

அமெரிக்க-ஈரான் போர்ப் பதற்றம் காரணமாகவே நாம் கொடுததிருந்த 40050 என்ற தடைநிலையை உடைத்து, பலமாக ஏறி 41049 என்ற உச்சத்தைத் தொட்டது. தங்கம் ஒரே நாளில் 1,000 புள்ளிகள் ஏறியது குறிப்பிடத்தக்கது. அடுத்த நாள் ஈரான் பதிலடி கொடுத்தபோது, ட்ரம்ப் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தங்கம் சற்றே நிதானித்தது. அடுத்த நாள் ட்ரம்ப் எதிர்வினையாற்றுவார் என்று சந்தை எதிர்பார்த்தது. அதனால் தங்கம் ஏறி 41270-ஐ தொட்டது. ஆனால், ட்ரம்ப் இதைப் பெரிய சண்டையாக மாற்ற விரும்பவில்லை என்ற தொனியில் பேசினார். ஈரானும், `நாங்கள் இதைப் பெரிய சண்டையாக்க விரும்பவில்லை’ என்று சொன்னது. இதனால் தங்கம் இறங்க ஆரம்பித்திருக்கிறது.

தங்கம் தற்போது 39350 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும், மேலே 39900 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

காப்பர் மிக வலிமையாக ஏறிய நிலையில், தற்போது 452 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டு இறங்கிவருகிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெள்ளி (மினி)

வெள்ளியும் தங்கத்தைப்போலவே பலத்தைக் காட்டி ஏறினாலும், பின்னர் ஏற்றத்தின் பெரும் பகுதியை இழந்து இறங்கிக்கொண்டிருக்கிறது.

கமாடிட்டி டிரேடிங்!  மெட்டல் & ஆயில்

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 48150-ஐ உடைத்து வலிமையாக ஏறி, 48940-ஐ தொட்டது. கீழே ஆதரவான 47150-ஐ உடைத்து 46400-ஐ தாண்டி இறங்கியிருக்கிறது.

வெள்ளி, 46200 என்ற எல்லையை உடனடி ஆதரவாகவும், மேலே 47100 உடனடித் தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4440-ஐ உடைத்து, உச்சமாக 4670 என்ற எல்லையைத் தொட்டது. அதன் பிறகு ஆதரவான 4290-ஐ உடைத்து இறங்கி 4180-ஐ தொட்டது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் வலிமையான இறக்கத்துக்குப் பிறகு, 4150-ஐ முக்கிய ஆதரவாகவும், மேலே 4320-ஐ முக்கியத் தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

காப்பர்

மெகா லாட் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கவனமாக வியாபாரம் செய்யவும்.

காப்பர்
காப்பர்

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 446-ஐ உடைத்து மிக மிக வலிமையாக ஏறி உச்சமாக 453.45-ஐ தொட்டது. ஆதரவான 438-ஐ தக்கவைத்திருக்கிறது.

காப்பர் மிக வலிமையாக ஏறிய நிலையில், தற்போது 452 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டு இறங்கிவருகிறது. இதை, `ரீடிரேஸ்மென்ட்’ என்று அழைப்போம். தற்போது உடனடி ஆதரவு, 445.