தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

தங்கம், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 39900-ஐ தக்கவைத்துக்கொண்டு மெள்ள இறங்க ஆரம்பித்தது. திங்கள் அன்று 39801 ஆரம்பப் புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்து, 39510-ஐ தொட்டது. அடுத்து செவ்வாய் அன்றும் ஆரம்பித்து 39280-ஐ தொட்டது. நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 39350-ஐ உடைத்து இறங்கினாலும், நாளின் முடிவில் 39443 என்ற புள்ளியில் ஏறி முடிந்தது. இதை ‘ஸ்பிரிங் திரஸ்ட்’ என்று கேண்டில் ஸ்டிக் வரைபடத்தில் சொல்வோம். அதன் பிறகு அடுத்தடுத்த மூன்று நாள்களும் மெள்ள ஏறி, நாம் கொடுத்திருந்த தடை நிலையான 39900 என்ற எல்லைக்கு அருகில் வலிமையாகத் தடுக்கப்பட்டிருக்கிறது.

தங்கம் சென்ற வாரம் சற்று இறங்கினாலும், 39420 என்ற புதிய ஆதரவில் இருக்கிறது. தற்போது சற்று ஏறி 39960 என்ற புள்ளியில் வலிமையாகத் தடுக்கப்பட்டிருக்கிறது.

கச்சா எண்ணெய், நாம் கொடுத்த தடைநிலையான 4150-ஐ தக்கவைத்துக் கொண்டு, மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்தது.

வெள்ளி (மினி)

வெள்ளி, சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 47100-ஐ தக்கவைத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தது. சென்ற வாரம் திங்கள் அன்று இறங்கி, குறைந்தபட்சப் புள்ளியாக 46408-ஐ தொட்ட நிலையில் அடுத்து செவ்வாய் அன்றும் பலமாக இறங்கி, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 46200-ஐ உடைத்து, குறைந்தபட்சப் புள்ளியாக 45835-ஐ தொட்டது. அதன் அடுத்தடுத்த மூன்று நாள்களும் மெள்ள மெள்ள ஏறி, வாரத்தின் தொடக்கநிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது.

தற்போது வெள்ளி 47150-ஐ தடை நிலையாகவும், 46250-ஐ உடனடி ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

சென்ற வாரம் சொன்னது... “கச்சா எண்ணெய் வலிமையான இறக்கத்துக்குப் பிறகு 4150-ஐ முக்கிய ஆதரவாகவும், மேலே 4320-ஐ முக்கியத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.’’

கச்சா எண்ணெய், நாம் கொடுத்த தடைநிலையான 4150-ஐ தக்கவைத்துக்கொண்டு, மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்தது. சென்ற வாரம் திங்கள் அன்று 4203 என்ற எல்லையிலிருந்து தொடங்கி, நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 4150-ஐ உடைத்து 4103-ஐ தொட்டது.

தொடர்ந்து இறங்கிய கச்சா எண்ணெய் புதன் அன்று 4059 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டு, மேலே திரும்ப ஆரம்பித்தது.

கச்சா எண்ணெய் ஜனவரி மாதம் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி பிப்ரவரி மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். தற்போது 4130 என்ற எல்லை ஆதரவாகவும், மேலே 4220 என்ற எல்லை வலிமையான தடைநிலையாகவும் உள்ளது.

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும்.

காப்பர், சென்ற வாரம் நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 445-ஐ தக்கவைத்துக்கொண்டு ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம், தடைநிலையான 452-ஐ கடந்த செவ்வாய் அன்று மிக வலிமையாக உடைத்துக்கொண்டு 459.40-ஐ தொட்டது. அதன் பின் சற்றே இறங்கி பக்கவாட்டு நகர்வில் உள்ளது.

காப்பர், தற்போது 449.50-ஐ ஆதரவு நிலையாகவும், மேலே 457.50-ஐ தடை நிலையாகவும் கொண்டுள்ளது. டிரேடர்கள் இதில் கவனமாக டிரேட் செய்ய வேண்டியது அவசியம்!