பிரீமியம் ஸ்டோரி

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

தங்கம் (மினி) 

சென்ற வாரம் நாம் சொன்னது... ‘‘தங்கம் சென்ற வாரம் சற்று இறங்கினாலும், 39420 என்ற புதிய ஆதரவு உள்ளது. தற்போது சற்று ஏறி 39960 என்ற புள்ளியில் வலிமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.’’

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

தங்கம் சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 39420-ஐ தக்கவைத்துக்கொண்டது. எனினும், திங்கள் முதல் புதன் வரை ஏறும்போதெல்லாம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 39960 என்ற எல்லையில் தொடர்ந்து வலுவாகத் தடுக்கப்பட்டு வந்தது. ஆனால், சென்ற வாரம் வியாழன் அன்று தங்கம் ஒரு பலமான ஏற்றத்தைக் கண்டு, நாம் கொடுத்திருந்த தடைநிலையான 39960-ஐ உடைத்து, ஏறி உச்சமாக 40274 என்ற எல்லையைத் தொட்டது.

தங்கம் பிப்ரவரி கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி மார்ச் 20, கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். தற்போது ஆதரவாக 39850 என்ற எல்லையையும், மேலே தடைநிலையாக 40300 என்ற எல்லையையும் கொண்டுள்ளது.

வெள்ளி (மினி)

வெள்ளிக்கு சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 47150-ஐ தக்கவைத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தது. சென்ற வாரம் திங்கள் அன்று பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தாலும், செவ்வாய் அன்று மிகப் பலமாக இறங்கி, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 46250-ஐ உடைத்து நன்கு இறங்கி, குறைந்தபட்ச புள்ளியாக 45760-ஐ தொட்டது. அதன்பின் ஒரு குறுகிய பக்கவாட்டு எல்லைக்குள் வியாபாரம் ஆகிவருகிறது.

வெள்ளி, தற்போது 45850-ஐ உடனடி ஆதரவாகவும், மேலே 46520-ஐ உடனடித் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் பலமான இறக்கத்திற்குப் பிறகு, 4020 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

கச்சா எண்ணெய்க்கு நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4220-ஐ தக்கவைத்துக் கொண்டது என்றே சொல்லலாம். சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் அன்று சற்றே ஏறுவதற்கு முனைப்பு காட்டினாலும், அதில் தோல்வியடைந்து கொஞ்சம் இறங்கியது.ஆனால், புதன் அன்று நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 4130-ஐ மிகப் பலமாக உடைத்து 4031-ஐ தொட்டது. அடுத்து வியாழன் அன்று இன்னும் பலமாக இறங்கி, 3917 என்ற புள்ளியைத் தொட்டு, தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் பலமான இறக்கத்திற்குப் பிறகு, 4020 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 3910 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டுள்ளது.

காப்பர்

மெகா லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கவனமாக வியாபாரம் செய்யவும்.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

காப்பருக்கு சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 457.50-ஐ தக்கவைத்துக் கொண்டது. ஒவ்வொரு நாளுமே மெள்ள மெள்ள இறங்க ஆரம்பித்து வியாழன் அன்று, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 449.50-ஐ உடைத்து நன்கு இறங்கி 445.20-ஐ தொட்டது. இன்னமும் வலிமை குன்றியே வியாபாரம் ஆகிறது.

காப்பர் ஜனவரி கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி பிப்ரவரி 2020 கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். காப்பர் தற்போது 441 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 446.50 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு