Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

கமாடிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி

கமாடிட்டி

ங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

தங்கம் மற்றும் பங்குச் சந்தைக்கும் உள்ள எதிர்மறையான உறவுமுறை மீண்டும் சென்ற வாரம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் பங்குச் சந்தைக்கு மிக மிக மோசமான வாரம் ஆகும். ஆனால், தங்கத்திற்கு அது ஒரு தங்கமான வாரமாக முடிந்து, மிக வலிமையான ஒரு ஏற்றத்தில் இருந்துவருகிறது.

தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in
தி.ரா.அருள்ராஜன், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

சென்ற வாரம் சொன்னது…‘‘தங்கம், ஆகஸ்ட் கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் செல்வதால், நாம் செப்டம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். தற்போது 34850 என்ற எல்லை முக்கிய ஆதரவாக உள்ளது. மேலே 35380 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.’’

சென்ற வாரம் தங்கம் இறங்கினால், அதையெல்லாம் வாய்ப்பாகவே பார்க்கவேண்டும் என்று கூறியிருந்தோம். அதுவும் சென்ற வாரம் நிகழ்ந்துள்ளது. தங்கம் கடந்த திங்கள், செவ்வாய் மற்றும் புதனன்று குறுகிய நகர்வில் இருந்தாலும், வியாழனன்று நாம் கொடுத்த ஆதரவுக்கு அருகில் வந்து, அங்கிருந்து ராக்கெட் வேகத்தில் ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் தடைநிலையான 35380-ஐ உடைத்து பலமான ஏற்றத்தில் தங்கம் உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

இனி என்ன நடக்கலாம்?

தங்கம் தற்போது பலமாக ஏறிக்கொண்டு இருக்கும் நிலையில், முந்தைய ஆதரவான 35380 தற்போது உடனடி ஆதரவாக மாறி வருகிறது. மேலே வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தில் இருப்பதால், ஆதரவு உடைக்காதவரை இறக்கங்கள் எல்லாம் வாய்ப்பே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெள்ளி (மினி)

வெள்ளி, சென்ற வாரம் தங்கத்தை ஏறவிட்டு, முற்றிலும் பின்தங்கிவிட்டது. மாறாக, நன்கு இறங்கவும் செய்துள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “வெள்ளி ஒரு பியரிஷ் என்கல்ஃபிங் தோற்றுவித்த நிலையில் மேலே 42550 என்ற எல்லை தடைநிலையாக உள்ளது. 41770 என்பது உடனடி ஆதரவு ஆகும்.’’

வெள்ளி சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 42550-ஐ தக்கவைத்துக்கொண்டு, வாரம் முழுவதும் பக்கவாட்டு நகர்விலிருந்து வந்தது. ஆனாலும், கீழே நாம் கொடுத்த ஆதரவான 41770 என்ற ஆதரவை உடைத்து 40309 என்ற எல்லைவரை இறங்கி மீண்டும் பக்கவாட்டு நகர்வுக்கு மாறியுள்ளது.

இனி என்ன செய்யலாம்?

வெள்ளி இனி, முன்பு கொடுத்த 41770 என்ற ஆதரவைத் தடைநிலையாகவும், கீழே 40450 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டு இயங்கலாம்.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… “கச்சா எண்ணெய் 3950 என்ற எல்லையை இன்னமும் தடை நிலையாகவே கொண்டுள்ளது. கீழே 3830 என்ற எல்லையை உடனடி ஆதரவாகக் கொண்டுள்ளது.’’

கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 3950-ஐ உடைத்து ஏறி 4052-ஐ தொட்டது. ஆனால், மூன்று நாளாக ஏறி 100 புள்ளிகளைத் தாண்டிய கச்சா எண்ணெய், வியாழனன்று ஒரே நாளில் மிக பலமாக இறங்கி 3752-ஐ தொட்டது. இனி இறக்கத்தின் ஏற்றம் வரலாம்.

இனி என்ன செய்யலாம்? 

கச்சா எண்ணெய், பலமான இறக்கத்திற்குப் பிறகு, 3710 என்ற எல்லையை உடனடி ஆதர வாகவும், மேலே 3945 என்ற எல்லையைத் தடை நிலையாகவும் கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்

காப்பர்

மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும்.

காப்பருக்குச் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 451 (ஒரு ஸ்பைக் வந்து போனது) தக்கவைத்துள்ளது.

அதேசமயம், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 443-ஐ உடைத்து, ஒரு பலமான இறக்கத்தில் உள்ளது.

இனி என்ன செய்யலாம்?

காப்பர் தற்போது பலமான இறக்கத்தில் இருந்து வருகிறது. கீழே 432 என்பது உடனடி ஆதரவு ஆகும். முந்தைய ஆதரவு எல்லையான 443 தடைநிலையாக மாறலாம்.