முக்கிய கமாடிட்டிகளின் போக்கு இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.

தங்கம் (மினி)

தங்கத்தில் முதலீடு என்பதை, `பாதுகாப்பான சொர்க்கத்தில் முதலீடு’ (Safe Heaven) என்று அழைப்பார்கள். வேறு எந்தத் தளத்திலும் முதலீடு செய்ய முடியாத சூழ்நிலை வரும்போதெல்லாம், பெரிய நிதி நிறுவனங்கள் தங்கத்தின் பக்கமே திரும்புகின்றன. `உண்மையாகவே தங்கத்துக்கு என்று ஒரு விலை உண்டா?’ என்ற கேள்வியை எழுப்பும்போது, வாங்குபவர்கள் அதிக விலையில் வாங்கத் தயாராக இருந்தால், தங்கம் அந்த விலைக்கு மாறிக்கொள்ளும் என்பதுதான் நிஜம்.

`உலகப் பொருளாதாரம் 2.3% வளரும்’ என்று முன்பு நிலைப்பாட்டை எடுத்த ஐ.எம்.எஃப்., தற்போது `பூஜ்ஜியத்துக்குக் கீழே போய்விடும்’ என்று கணித்திருக்கிறது. எனவே, பணம் தங்கத்தை நோக்கி மீண்டும் திரும்பியிருக்கிறது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மூன்று கட்டமாக தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். எனவே, பணம் தங்கத்திலிருந்து பங்குச் சந்தை பக்கம் திரும்பவும் வாய்ப்பிருக்கிறது.

தங்கம், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 44980-ஐ தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, மேலே கொடுத்த தடைநிலையான 45410-ஐ உடைத்து மிக பலமாக ஏறியது. 13.04.20 அன்று ஒரு கேப்அப் மூலம் ஏறத் தொடங்கிய தங்கம், உச்சமாக 46360-ஐ தொட்டது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஏறி, புதிய உச்சத்தைத் தோற்றுவித்துக்கொண்டே வந்தது. 16.04.20 அன்று உச்சமாக 47290-ஐ தொட்டது. இதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய உச்சம். ஆனால், வெள்ளி அன்று பங்குச் சந்தை ஏற ஏற, தங்கம் இறங்க ஆரம்பித்தது.

தங்கம் உச்சத்திலிருந்து இறங்க ஆரம்பித்த நிலையில், உடனடி ஆதரவு 45600; தடைநிலை 46140.

வெள்ளி (மினி)

வெள்ளி, தங்கத்தைப்போலவே நகர்ந்தாலும், அதன் நகர்வின் வீச்சு மிக மிக சுணக்கமாகவே இருந்தது. வெள்ளி சென்ற வாரம் திங்கள் அன்று நாம் கொடுத்திருந்த 42390 என்ற ஆதரவு நிலையைத் தக்கவைத்துக்கொண்டு, வெகு சுமாரான ஏற்றத்தைக் கொடுத்தது. இந்த ஏற்றம் என்பது 44596 என்ற உச்சத்தைத் தொட்டு, அதன் பிறகு இறங்குமுகமாக மாறியுள்ளது.

கச்சா எண்ணெய் (மெகா லாட்)

கச்சா எண்ணெய் மீண்டும் தொடர் இறக்கத்திலேயே இருந்துவருகிறது. கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 2230-ஐ தக்கவைத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தது. இந்த இறக்கம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1830-ஐ உடைத்து வலிமையாக இறங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் புதிய குறைந்தபட்சப் புள்ளியைத் தொட்டு, வார முடிவில் 1381 என்ற புள்ளியைத் தொட்டது.

கச்சா எண்ணெய் ஏப்ரல் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால் மே மாத கான்ட்ராக்ட்டை எடுத்துகொள்கிறோம். தற்போது 1915-ஐ ஆதரவாகவும், மேலே 2065-ஐ தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

காப்பர்

(மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும்.)

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடை நிலையான 396-ஐ உடைத்து சற்றே வலுவாக ஏறி 400.75-ஐ தொட்டது. அதன் பிறகு சற்றே இறங்கினாலும், மீண்டும் வலிமையாக ஏறி 404.40 என்ற உச்சத்தைத் தொட்டது. காப்பர் தற்போது 405.50 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 397-ஐ ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.
.மெட்டல் , ஆயில் & அக்ரி கமாடிட்டி .
மென்தா ஆயில்

நவம்பர் 2018-லிருந்து இறங்க ஆரம்பித்த மென்தா ஆயில், நடுநடுவே சிறிய ஏற்றங்கள் வந்தாலும், அவை வெறும் புல்பேக் ரேலிகளாகவே முடிந்தன. அதாவது, அந்த சிறிய ஏற்றங்களெல்லாம், அதன் முந்தைய பெரிய இறக்கத்தின், சிறிய ஏற்றங்களாகவே இருந்துவந்தன. இந்த இறக்கம் மார்ச் 2020-ஐ தொடர்ந்து வந்திருக்கிறது.

2020, ஏப்ரல்-ல் முந்தைய ஏற்றங்களைப் போலவே, 1095 என்ற புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றமும் ஒரு புல்பேக் ரேலியாகவே முடிந்துவிடும் என்ற நிலையில், வலிமையான ஒரு ஏற்றத்தைக் கொடுத்து, டவுன் டிரெண்ட் லைனின் தடையை உடைத்து ஏறியிருக்கிறது. இது ஒரு டிரெண்ட் ரிவர்ஸலாக மாறியுள்ளதாகப் பார்க்கலாம்.

மென்தா ஆயில், முந்தைய வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1115-ஐ தக்கவைத்துக்கொண்டது. இதுவரை டவுன் டிரெண்டின் முடிவில் ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்திருக்கிறது. ஆனால், கடந்த வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1177-ஐ உடைத்து, வலிமையான ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறது. 13.04.20 அன்று மென்தா ஆயில், தடைநிலையான 1177-ஐ உடைத்து ஏறி, உச்சமாக 1237-ஐ தொட்டது. இந்த பலமான ஏற்றமே, டிவுன் டிரெண்ட் லைனை உடைக்க உதவியுள்ளது. இந்த வலிமையான புல்கேண்டில், அடுத்த நாளும் இன்னும் ஒரு பலமான ஏற்றத்துக்கு வழிவகுத்தது. அடுத்த நாள், மென்தா ஆயில் தொடர்ந்து ஏறி உச்சமாக 1284 என்ற எல்லையைத் தொட்டது. அதற்கு அடுத்த நாள், 1284 என்ற எல்லையில் தொடங்கிய மென்தா ஆயில் உச்சமாக 1335-ஐ தொட்டாலும், அந்த உச்சத்தைத் தக்கவைக்க முடியாமல் இறங்கியது மட்டுமல்ல, பலமான இறக்கத்தைக் கொடுத்து 1237-ல் முடிந்துள்ளது. இருந்தாலும் டவுன் டிரெண்ட் லைனுக்கு மேலே உள்ளது. வாரத்தின் கடைசி நாள் அன்று ஓரளவுக்கு ஏறி, 1258 என்ற புள்ளியில் முடிந்திருக்கிறது.

மென்தா ஆயில், தற்போது 1238 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 1266 என்ற எல்லையை உடனடித் தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

காட்டன்

காட்டன் இன்னமும் தொடர் இறக்கத்தில்தான் இருந்துவருகிறது. ஆனாலும், ஒரு டபுள் பாட்டத்தை ஏற்படுத்த முயல்கிறது.

காட்டன் முந்தைய வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவுநிலையைத் தக்கவைத்துக் கொண்டு மெள்ள மெள்ள ஏறியது.

அடுத்து தடைநிலையான 16460-ஐ உடைத்து ஏறி 16720-ஐ தொட்டாலும், தொடர்ந்து ஏற முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. அடுத்த நாள் ஒரு பேக்டவுன் மூலம் இறங்கி 16330 என்ற புள்ளியில் முடிந்தது. அதன் பிறகு ஒரு பக்கவாட்டு நகர்வுக்கு மாறியிருக்கிறது. கீழே 16240-ஐ ஆதரவாகவும், மேலே 16700-ஐ தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.

சென்னா

(சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.) சென்னா, 20.03.20 தேதிக்குப் பிறகு டவுன்டிரெண்ட் லைனை உடைத்து ஏற ஆரம்பித்தது. இந்த ஏற்றம் பலமானதாக மாறி, நாம் கொடுத்திருந்த தடை நிலையான 4215-ஐ உடைத்து ஏறி, உச்சமாக 4337-ஐ தொட்டது. பிறகு இறங்கி, 7.04.20 அன்று 4040 என்ற குறைந்தபட்சப் புள்ளியைத் தொட்டது. ஆனாலும், முந்தைய உச்சத்தைத் தாண்ட முடியாமல் 4160-ல் முடிந்திருக்கிறது. ஏப்ரல் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், மே மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்ளலாம். தற்போது 4145-ஐ ஆதரவாகவும், மேலே 4255-ஐ தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.